Search This Blog

Saturday, November 20, 2010

வாங்கிய பணத்தை பிரிச்சிக் கொள்ளும்போது கருத்துவேறுபாடு வந்து அடி தடி -பா.ம.க. Vs அ.தி.மு.க.


நாகை மாவட்டம், பிள்ளைப்பெருமாள் நல்லூரில் இயங்கிவரும் தனியார் பவர் பிளாண்ட் ஒன்றை விரிவுப்படுத்துவது தொடர் பாக, கலெக்டர் முன்னிலையில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்க, பா.ம.க.வினர் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்து அதிர்ச்சியை உண்டாக்கியதோடு, அ.தி.மு.க.வினருக்கும் இவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, அடிதடியில் போய் நின்றது. உள் விவகாரங்களைக் கிளறினோம்.

""ஆறு மாதத்திற்கு முன்னாடி நடந்த கருத்துக்கேட்பில் வாங்கிய பணத்தை பிரிச்சிக் கொள்ளும்போது கருத்துவேறுபாடு வந்து அடி தடிவரைப் போயிடுச்சி. இத அப்படியே படமா பிடிச்சி ஐயாக்கிட்ட அனுப்பிடுச்சி ஒரு தரப்பு. இதை பார்த்த ஐயா "என்னய்யா இவ்வளவு பணம் புரளுது... எங்கிட்ட சொல்லவே இல்ல'ன்னு ஒரு புடி, புடிச்சிட்டு மீதமுள்ள பிளாண்ட்ல தேர்தல் நிதியா ஒரு பெருந்தொகையை கேட்கச் சொல்லி அனுப்பிட்டார். இவங்களும் வந்து கேட்டாங்க, பிளாண்ட்காரனுங்க அவ்வளவு தொகைய தர மறுத்திட்டாங்க... கடுப்பாகிப் போன சின்னய்யா, எம்.எல்.ஏ. கிட்ட "நீ சட்டமன்ற கூட்டத் திற்கு வரவேண்டாம். நடக்கப் போகிற கருத்துக்கேட்புல எதிர்ப்பு தெரிவிச்சிதா செய் தித்தாள்ல செய்தி வரணும்'னு சொல்லி அனுப்பிட்டார். அந்த வேகத்துலதான் இப் படியொரு எதிர்ப்பு'' என் றார்கள் சம்பந்தப்பட்டவர் கள்.

இதுதான் சங்கதியா என பூம்புகார் எம்.எல்.ஏ. பெரியசாமியிடம் அப்படியே கேட் டோம். ""இது யாரோ எங்க கட்சியிலயே வேண்டாதவங்க கிளப்பிவிடுற செய்தி. எங்களுக்கு கெட்டபேரு வரணும்னே செய்யுறாங்க. யார் சொன்னது நாங்க ஆதரவு தெரிவிச்சோம்னு... மறைமுகமாக எதிர்த்தோம். எல்லாக் கட்சிகளும் கை கட்டி பணம் வாங்கும்போது நாங்க மட்டும் கெடுபுடியா இருந்தா கட்சி நடத்த முடியுமா? கொஞ்ச நாளுக்கு முன்னாடி திருக்கடையூர் வந்த சின் னய்யா மாசுக்கட்டுப்பாட்டு பிரச்சினை யை மையமாக வைத்து எதிர்க்க சொன் னார். அதனாலதான் எதிர்த்தோம். மீன வர்களின் ஓட்டு முழுக்க முழுக்க அ.தி. மு.க.விற்குதான் கிடைக்கும். அவர்களே கையூட்டு வாங்கிக்கிட்டு சும்மாதானே இருக்காங்க. ஆனா இனிமே எங்க போ ராட்டம் தொடரும்'' என்றார் கறாராய்.

இது தொடர்பாக மயிலாடுதுறை எம்.பி. ஓ.எஸ். மணியனிடம் கேட்டோம், ""இந்த பிளாண்ட் புதிதாக ஆரம்பிக் கிறதில்ல, ஏற்கனவே நடக்கிறத விரிவுப் படுத்ததான் கருத்துக் கேட்டாங்க. மீனவர்களின் நலன்தான் எங்களோட நலன். அவங்க வெளிப்படையாகவே இந்த பிளாண்டால எங்களுக்கு பாதிப்பு இல்லேன்னு சொல்லிட்டாங்க. நிலக்கரிய பயன்படுத்தினாதான் பாதிப்பு. இவங்க "நாப்தால்' பயன்படுத்துறதால பிரச்சினை இல்லேன்னுட்டாங்க. அதனால் நாங்க ஆதரிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லையே'' என்கிறார்.

-க.செல்வகுமார்
நக்கீரன்

No comments:

Post a Comment