Search This Blog

Saturday, November 20, 2010

ஜெ செய்த சமாதானம்- குருபெயர்ச்சி-தலைவர்கள் போடும் கணக்கு

""ஹலோ தலைவரே... ... ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லி நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள், அவர் ராஜினாமா செய்தபிறகும் அதேபாணியில் அமளி செய்து, நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் பண்ணிக்கிட்டிருக்கே...''

""ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பா நாடாளுமன்றக்கூட்டுக் குழு விசாரணை நடத்தணும்னும், ஸ்பெக்ட்ரம் தொடர்பா உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகளுக்கு பிரதமர் பதிலளிக்கணும்னும் சொல்லி எதிர்க் கட்சிகளின் அமளி தொடருதுப்பா..''


""எதிர்க்கட்சிகள் எதையெல்லாம் ஊழல்னு சொல்லுதோ, அது பற்றியெல்லாம் சி.பி.ஐ.விசாரணை நடந்துக்கிட்டிருக்குது. அதனால, நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவையில்லைங்கிறது காங்கிரஸ் கட்சியோட நிலை.  ஆனா, எதிர்க்கட்சிகள் இந்த விசாரணைக்கு  உத்தரவிட்டால்தான் நாடாளுமன்றத்தை நடத்தவிடுவோம்னு உறுதியா இருக்கு. ஸ்பெக்ட்ரமை பொறுத்தவரைக்கும் பிரதமரும் அவரது அலுவலகமும் மேற்கொண்ட செயல்பாடுகள் பற்றி உச்சநீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய சட்டப்பூர்வமான வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. இதுபற்றியெல்லாம் ஆலோ சிக்கத்தான் நவம்பர் 18-ந் தேதி, காங்கிரஸ் உயர்மட்டக்கூட்டம் நடந்தது.''

""நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவையில் லைங்கிறதுதான் காங்கிரசின் முடிவு. தற்போதைய நிலையே நீடிக்கட்டும். சபையை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ரகளை செய்தால் நாடாளுமன்றக் கூட்டுக்குழு பா.ஜ.க. ஆட்சி நடந்த 1998-லிருந்து விசாரணை நடத்தலாம்ங் கிறதுதான் காங்கிரசின் நிலை.''

""ஸ்பெக்ட்ரம் பற்றி டெல்லி வட்டாரத்திலிருந்து கிடைச்ச இன்னும் சில தகவல்களைச் சொல்றேங்க தலைவரே.. ... புது நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்குவதற்கு எதிரா மறைமுக வேலை பார்த்தவர் ஏர்டெல் நிறுவன அதிபர் பாரத் மிட்டல். ஆனால், மக்களுக்கு ஈஸியான சேவை கிடைப்ப தற்காக புதிய அலைக்கற்றைகளை  விதிமுறைப்படி ஒதுக்க முடிவு செய்தார் ராசா.  உடனே இதை ஒரு புகாரா பிரதமருக் குத் தெரிவித்தார் மிட்டல். ஒருநாள் இரவு 9.30 மணிக்கு இது பற்றி விளக்கம் கேட்டு ராசாவுக்கு கடிதம் அனுப்பினார் பிரதமர். ராசாவோ, இதுபற்றி 12.30 மணிக்கெல்லாம் விளக்கமா பதில் கொடுத்துவிட்டார். சட்டப்பூர்வமான முறையில் நடைபெறும் ஒதுக்கீடுகள் பற்றி அதில் தெரிவிக்கப்பட்டிருக்குது. ராசா பதிலில் பிரதமருக்கு டவுட் இருந்திருந்தால்   உட னடியா தொடர்பு கொண்டிருப்பார். அல்லது மேலும் விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியிருப்பார். அப்படி எதுவும் நடக் கலை. அதனால, சட்டப்பூர்வமா மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி  சுப்ரீம் கோர்ட்டுக்குப் பதில் தருவது பற்றி உயர் மட்டக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கு.''

""ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வைத்து தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை உடைச்சிட லாம்னு இப்பவரைக்கும் பலரும் காய் நகர்த்திக் கிட்டிருக்காங்க. ஆனா சோனியாகாந்தியைப் பொறுத்தவரை ராசா விவகாரம் வேற, கூட்டணிங்கிறது வேற. தி.மு.க-காங்கிரஸ் உறவில் எந்த மாற்றமும் இல்லைங்கிறதில் உறுதியா இருக்காருங்கிறதும் அந்த உயர்மட்டக்கூட்டத் தில் வெளிப்பட்டிருக்குதுப்பா.''

""தலைவரே... பரபரப்பான இந்த சூழ்நிலையில் கலைஞர் ஒரு நாள் ஓய்வெடுத்தது அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்படுது. துரைமுருகன், ஜெகத்ரட்சகன் சகிதமா மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஓட்டலுக்குப்போன  கலைஞர் ஒரு வித இறுக்கத்தோடே இருந் திருக்கிறார். எல்லாம், ராசா விவகாரம்தான். அன்னைக்கு நைட் அவருக்கு உடல்நலனும் பாதிக்கப்பட்டிருக்குது. அதனால, மதுரைக்குப் போய் கல்யாணத்தில் கலந்துக்க முடியுமாங்கிற டவுட்டும் வந்திடிச்சாம். செல்வி உள்ளிட்ட குடும்பத்தினர் கலைஞர்கிட்டே பேசி, அவரோட வருகையை உறுதிப்படுத்தியிருக்காங்க.''

""பா.ம.க நிறுவனர் ராமதாசும் மதுரை கல்யாணத்துக்கு உறுதியா போறதுங்கிற எண் ணத்தில்தான் இருந்தாராம். ஆனா, அவருக்கு யாரோ ஒரு மூன்றாம் நபர் மூலமா அழைப்பிதழ் கொடுக்கப் பட்டதில் வருத்தம் ஏற்பட்டு, முடிவு மாறிடிச்சாம். அன்பு மணிக்கு அழகிரி மகள் கயல்விழியும் அவர் கணவரும் அழைப்பிதழ் கொடுத்திருந்தாங்க. ஆனா, தனக்கு ஏதோ கொரியர் அனுப்புறதுபோல அனுப்பிட்டதா வருத்தப்பட்ட ராமதாஸ், தி.மு.கவை கடுமையா எதிர்க்கிற விஜயகாந்த்துக்கு செல்வி அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்னு தெரிஞ்சதும் இன்னும் டென்ஷனாகி, அன்புமணியையும் போகவேண்டாம்னு சொல்லிட்டாராம்.''

""விடுதலைச் சிறுத்தைகள் தரப்பிலும் வருத்தம் இருந்ததுங்க தலைவரே.. கல்யாணத்துக்கு 3 நாள் முன்னாடி வரை திருமாவளவனுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படலை. கட்சியிலிருந்து ஞாபகப்படுத்திய பிறகுதான் அழைப்பிதழ் வந்திருக்குது. கட்சித் தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பொறுப்பை அறிவாலயத்தில் இருக்கும் சிலரிடம் அழகிரி ஒப்படைச்சதாலதான் இந்த குழப்படிகளாம். ரஜினி, கமல் போன்றவர்களை வீடு தேடிப்போய்ப் பார்த்து பத்திரிகை வைத்த அழகிரி, கட்சித் தலைவர்களுக்கும் நேரில் இன்விடேஷன் கொடுத்திருக்கலாம்னு கட்சி நிர் வாகிகள் சொல்றாங்க.''

""ராமதாஸ் சொல்றமாதிரி, தி.மு.க எதிர்ப்பு விஷயத்தில்  விஜயகாந்த் ரொம்பக் கடுமையா இருக்காரே.. மறுபடியும் தி.மு.கவை ஆட்சிக்கு வரவிடமாட்டேன்னு காஞ்சிபுரத்தில் பேசியிருக்கும் விஜயகாந்த், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஒன்றியங் களில் 22 மந்திரிகளை அழைத்து ஒரேநாளில் மந்திரி பொன்முடி நடத்திய பொதுக்கூட்டத்துக்குப் போட்டியா 22 ஒன்றியங்களில் தே.மு.தி.க.வின் மாநில நிர்வாகிகள் 22 பேரை வைத்துக் கூட்டம் போட்டி ருக்கிறாரே..''

""ஆமாங்க தலைவரே.. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேகம் பிடிக்கிறப்ப, காங் கிரஸ்-தி.மு.க கூட்டணி உடையும்ங்கிறது விஜய காந்த்தோட கணக்காம். அப்ப காங்கிரஸ் தன் பக்கம் வரும்னு எதிர்பார்க்கிறார். கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்  ஒரு ஆங்கிலப் பத்திரி கைக்கு கொடுத்த பேட்டியிலும் காங்கிரஸ் வெளியே வந்தால் அதனுடன் கூட்டணி, இல்லைன்னா அ.தி.மு.க.வோடு கூட்டணி, எங்க நோக்கம் தி.மு.கவைத் தோற்கடிக்கணும்ங்கிறதுதான்னு சொல்லியிருக்காரு. ஜனவரியில் சேலத்தில் தே.மு.தி.க. மாநில மாநாட்டை நடத்த ரெடியாயிட்டார். 21-ந்தேதி நடக்கவிருக்கும் குருப்பெயர்ச்சி தே.மு.தி.க.வுக்கு சாதகமாக இருக்கும்னும் வெற்றிக்கூட்டணியில் இருப்போம்னும் சொல்லும் விஜயகாந்த் தன்னோட விருதகிரி படம் ரிலீசானால் மக்களிடம் பெரிய புரட்சி ஏற்படும்னும் அந்தப் புரட்சி மூலம் தி.மு.க ஆட்சி மாறும்னும் கட்சியின் முக்கியஸ்தர்கள்கிட்டே சொல்றாராம்.''

""என்னை வச்சி காமெடி கீமெடி பண்ண லையே...''

""அரசியல்வட்டாரத்தில் பேசுற விஷயங்களைத் தான் சொல்றேங்க தலைவரே... .. குருப்பெயர்ச்சியை ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் எதிர்பார்த்துக்கிட்டிருக்காங்க. ஜெ. தன்னோட ராசிக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்லா இருக்கும்னும் அடுத்தது தன்னோட ஆட்சிதான்னும் நம்புறாராம். கலைஞர் குடும்பத்தினரோ, ஜெ. ராசிக்கு இந்தக் குருப்பெயர்ச்சி சரியா இல்லைன்னும் கலைஞர்தான் 6-வது முறையும் முதல்வர்னு நம்புறாங்க. பெரிய கட்சிகளிலிருந்து சின்னக் கட்சிகள் வரைக்கும் எல்லா இடத்திலும் குருப்பெயர்ச்சி கணக்குதான் ஓடிக்கிட்டிருக்கு. அந்தந்தத் தலை       வரின் ஆஸ்தான ஜோதிடர்களும் அவங்கவங் களுக்குத் தகுந்த மாதிரி குருப்பெயர்ச்சி பலன் சொல்லிக்கிட்டிருக்காங்க.''

""குருப்பெயர்ச்சி இருக்கட்டும் கூட்டணியிலிருந்து சி.பி.எம். இடப்பெயர்ச்சி ஆகும்னு பேசிக்கிட்டோமே... இப்ப நிலவரம்?''

""காங்கிரசுக்கு ஜெ அழைப்பு விடுத்ததால், சி.பி.எம் தரப்பிலிருந்து அதிருப்தி அறிக்கை வெளிவந்தது. அவங்களை சமாதானப்படுத்துற பொறுப்பை ஓ.பி.எஸ்ஸிடமும் செங்கோட் டையனிடமும் ஒப்படைத்திருந்தார் ஜெ.  சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்த இருவரும், காங்கிரசை சி.பி.எம் ஆதரிச்சப்ப.. மதவாத பா.ஜ.க ஆட்சிக்கு வந்திடக்கூடாதுன்னு காரணம் சொன்னீங்க. அதுபோல ஒரு டாக்டிஸ்தான் இதுவும். ராசா மீதான நடவடிக் கையில் ஆட்சி கவிழ்ந்திடும்ங்கிற பயம் வேணாம். நாங்க இருக்கோம்னு  ஒரு டாக்டிஸாகத்தான் இதை எங்கம்மா சொன்னார். மற்றபடி, காங்கிரசோடு கூட்டணி ஏற்படுத்துற நோக்கமெல் லாம்   இல்லைன்னு சொல்லி யிருக்காங்க. ஜி.ஆர் எந்த ரியாக்ஷனும் காட்ட லையாம்.''

""ஜெ டெல்லிக்குப் போய் காய் நகர்த்தப் போறதா தகவல் வருதே?''

""விசாரித்தேங்க தலைவரே.. .. 26ந் தேதி சென்னையில் ஸ்பெக்ட்ரம் ஆர்ப்பாட்டத்தை ஜெ நடத்து றார். அடுத்த மாதம் முதல் வாரத்தில், டெல்லியில் ஒரு போராட்டம் நடத்த தேவகவுடா, அஜித்சிங் ஆகியோரோடு பேசிக்கிட்டிருக்கிறார். போராட்டம் உறுதி யானால்,டெல்லிக்குப் போய் நேஷனல் மீடியாக்களோட கவனத்தைக் கவர திட்ட மிட்டிருக்கிறாராம்.''

""பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவில், ஒரு சோகமான செய்தி... கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் மனைவி ஜாய்ஸ் பாண்டியன் உடல்நல மில்லாமல் இரண்டரை வருடம் போராடி,  17-ந் தேதியன்னைக்கு மரணமடைஞ் சிட்டாங்க.''

""நரம்புத்தளர்ச்சியாலும் நினைவாற்றல் இழப்பாலும் பாதிக்கப்பட்டிருந்த ஜாய்ஸ் பாண்டியன், தா.பா.வின் அரசியல் வாழ்க்கை முழுவதும் ஒருசேரப் பயணித்தவர். அவருக்கு உடம்பு முடியலைன்னதும், தன்னோட அரசியல் பணிகளுக்கு நடுவிலும் மாலை நேரங்களில் மனைவிக்குத் துணையாக இருப்பதையே கடந்த இரண்டரை வருஷமா கடைப்பிடித்திருக்கிறார் தா.பா.  மனைவிக்கு தைரியமும் ஆறுதலும் சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கிறார். முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை கூட வரும்னு கவிஞர் பாடியதுபோல தா.பா-ஜாய்ஸ் பாண்டியன் வாழ்க்கை இருந்ததுன்னு தோழர்கள் சோகத்தோடு சொல்றாங்க.''

""கம்யூனிஸ்ட் தோழர்களிடம் சோகம்னா, கார்த்தி சிதம்பரம் தரப்பில் சந்தோஷம். அவரோட 39-வது பிறந்தநாள்விழா நடிகர் சங்கத்தில் படு அமர்க்களமா கொண் டாடப்பட்டது. திராவிட கட்சித் தலைவர் களின் பிறந்தநாள் பாணியில் விழாவை சிறப்பா ஏற்பாடு செய்திருந்தவர் கராத்தே தியாக ராஜன். சில படங்களில் அவர் நடித்திருப்பதால் நடிகர் சங்கத்தில் உறுப்பினரா இருக்கிறார். அந்த அடிப்படையில்தான் அரசியல் பிர முகரின் பிறந்தநாள்  விழாவை அங்கே நடத்த அனுமதி வாங்கினாராம்.  இந்தப் பிறந்தநாளில் 2 காரியங்களை கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் செய்திருக்காங்க. ஒண்ணு, அவரோட வயதைக் குறிக்கும் வகையில் , ஆதரவற்ற குழந்தைகள் 39 பேருக்கு கல்வித் தொகையாக தலா 5000 ரூபாய் டெபாசிட் செய்து, அதற்கான ஆவணங்களை கார்த்தியின் கையால்  கொடுக்க வைத்தார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ் சீவி. இரண்டாவது, காலேஜ் மாணவி கள் 200 பேர் கொண்ட குழுமூலம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையை முழுமையா சுத்தப்படுத்தி யிருக்கிறார் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான ருக்மாங்கதன். இந்த இரண்டுபேரோட செயல்பாடுகளை யும் குறிப்பிட்டு ப.சிதம்பரம் வாழ்த்தி யிருப்பதால் கார்த்தியும் அவர் ஆதரவாளர்களும் கூடுதல் சந்தோஷத் தில் இருக்காங்க.''

""வாசன் தரப்பினர் வருத்தத்தில் இருக்காங்களாமே?''

""போனமுறையே நாம பேசிக் கிட்ட விஷயம்தான். வாசன் ஆதர வாளரா கொங்கு மண்டலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த மயூரா ஜெயக்குமார், ப.சியை சந்தித்ததோடு, கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளிலும் வாழ்த்து தெரிவித்தார். அவர் அணி மாறியதை, கட்சி மாறியதுபோல பதட்டத்தோடு பார்க்கிறது வாசன் தரப்பு. மயூராவோடு யார்யார் பேசிக்கிட்டிருக்காங்க. அவர் மூலமா ப.சி பக்கம் யார்யார் போகப்போறாங்க, அந்த லிஸ்ட்டில் எம்.எல்.ஏக்கள் யாராவது இருக்காங்களா என்றெல்லாம் பதறிப்போய் ரகசிய விசாரணை நடத்தி,  லிஸ்ட் எடுத்துக்கிட்டி ருக்காங்களாம் வாசன் ஆட்கள்.''

""தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியா இருந்து, மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஆ.ராசாவுக்கு ஆபத்து ஏற்படலாம்னும் அதனால அவரோட பாதுகாப்பை பலப்படுத்தணும்னும் சுப்ரமணியசாமி சொல்லியிருக்காரே?''

""அது பற்றி நான் சொல்றேன்.. இதே எச்சரிக்கை யை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் முறைப்படி நடந்தப்பவே ஆ.ராசாகிட்டே சரத்பவார் சொல்லியிருக்கிறார். செல்போன் சேவையில் பெரும் செல்வாக்கு பெற்ற நிறுவனத்திற்கு, புதிய நிறுவனங்கள் வந்ததால் 21ஆயிரம் கோடி ரூபாய் இழப்பாம். பிசினஸில் இழப்பு வந்தால் பெரும் முதலாளிகள் எந்த எல்லைக்கும் போவாங்கங்கிறது, மும்பைக்காரரான சரத்பவாருக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் அவர் அப்பவே ஆ.ராசாகிட்டே இதுபற்றி சொல்லி எச்சரித்திருக்கிறார். இப்ப சு.சாமியும் அதைத்தான் சொல்றார். இதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும் ராசாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது.''

 மிஸ்டுகால்!

ரகசியமாய் கஞ்சா தோட்டம் போட்டு போலீஸ் கண்டு பிடித்ததால் தலைமறைவாகிவிட்ட முன்னாள் டி.எஸ்.பி. அய்யாசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ""அது கஞ்சா செடியே அல்ல. மூலிகை செடி'' எனத் தெரிவித்துள்ளார். டான்சி சில விவகாரத்தில் தன் கையெழுத்தே அல்ல என்ற ஜெ. போலவே அவரது பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி.யும் செயல்படுகிறாரே என்கிறார்கள் காக்கிகள்.
காவல்துறையின் செயல்பாடுகளைக் கண்டித்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வரும் 22-ந் தேதி மாஜிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டிருக்கிறார் ஜெ. ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் படுகொலை செய்யப்பட்ட  அ.தி.மு.க மாஜி வெங்கடா சலத்தின் படுகொலை விஷயத்தில் காவல்துறைக்கு எதிராக போராட்ட அறிவிப்பு எதுவும் செய்யாத ஜெ, இதுவரை கண்டன அறிக்கையும் வெளியிடாதது வெங்கடாசலத்தின் சமுதாயத்தவர்களான முத்தரை யர் சமுதாயத்திடம் அதிருப்தியை உண்டாக்கி யுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவ கங்கை மாவட்டத்தில் உள்ள முத்தரையர் இனத் தைச் சேர்ந்த ர.ரக்களே, வரும் தேர்தலில் நாங்கள் அ.தி.மு.கவைப் புறக்கணிப்போம் என்கின்றனர்.

திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவின் ஒரு அம்சமாக 19-ந் தேதி மகாரதம் வடம் பிடிக்கப்பட்டது. தேர் புறப்பட்ட சில நிமிடங்களி லேயே அதன் சக்கரத்தில் சிக்கி 3 பேருக்கு கால் பாதிக்கப்பட்டது. இதை அபசகுனமாக பக்தர்கள் நினைத்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுப்பப்பட, தேர் பணிகளைக் கவனிக்கும் தச்சர் கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, தேரோட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால்     மாலை வரையிலும் மகாரதம் அதே இடத்திலேயே நின்றது.
நக்கீரன்

No comments:

Post a Comment