Search This Blog

Saturday, October 2, 2010

பதவியை துறக்க தயார் - முதலமைச்சர் மு கருணாநிதி

சென்னை நவ-14.(டிஎன்எஸ்)  இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக பதவியை துறக்க தயார் என்று முதலமைச்சர் மு கருணாநிதி, ஆவேசமாக நவ-14 அன்று தமிழகச் சட்டப்பேரவையில்  கூறியுள்ளார்.  இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கருத்தை ஏற்று இந்தியா ஏமாந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்தார்.

தமிழகச் சட்டப்பேரவையில் நவ-14 அன்று மீண்டும் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

கடந்த 12ம் தேதி ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்பினோம். தீர்மானத்தை உளத் தூய்மையுடன் நிறைவேற்றி அனுப்பினோம்.

ஆனால், தமிழர்கள் எப்போதும் எப்படி இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக நாம் 12-ம் தேதி காட்டிய ஒற்றுமைக்கு மாறாக இன்று (நவ-14 அன்று) மாறுபட்டு செயல்படுகிறோம். அதற்காக நான் வேதனைப்படுகிறேன்.

இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வந்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தப் பிறகு வெளியிட்ட கருத்துக்கள் குறித்து இங்கே எதிர்க்கட்சித் தரப்பில் பேசியிருக்கிறீர்கள். இதற்கு உன்னுடைய பதில் என்ன என்று என்னை கேட்டிருக்கிறீர்கள்.

எப்படியோ என்னை தில்லியில் உள்ள ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளதாக பாவித்து, உன் பதில் என்ன என்று கேட்டதற்கு நன்றி.

என் உயரம் என்ன என்பதை அறிந்துள்ளதால் அதற்கு உட்பட்டே இங்கு பதில் சொல்ல விரும்புகிறேன்.

இலங்கை அதிபரின் கருத்துக்களை இந்தியா எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் தொடர்ந்து வேண்டுகோள் விடுவது நமது கடமை.

அன்று (12ம் தேதி) வேகமாக பேசத் தவறிய ஓ.பன்னீர்செல்வம் இன்று வேகமாக பேசி, எப்போது ராஜினாமா? என்று கேட்டார். அந்த வேகத்தை பாராட்டுகிறேன்.

தமிழருக்கு தீங்கு ஏற்பட்டால் அதை சகித்துக் கொண்டு பதவியில் இருக்கக் கூடிய
அளவுக்கு எங்களுக்கு பதவி வெறி இல்லை.

அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானத்தின்படி நாங்களும், பாமகவும் மட்டுமே தயாராக இருந்தோம். மற்ற கட்சிகள் தங்கள் தலைமையை கலந்து பேசிதான் ராஜினாமா செய்ய முடியும் என்று கூறிவிட்டன. அதன்பிறகு இலங்கையில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுவிட்டன.

தற்போது இலங்கை  அதிபர் முடிந்த முடிவாக தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளை சரணடைய செய்வது அல்லது அடக்குவது ஒன்றுதான் முக்கிய நோக்கம்; குறிக்கோள் என்று அறிவித்துவிட்டார்.

தமிழர்களை காக்கும் பொறுப்பை நான் தட்டிக் கழிக்கமாட்டேன் என்றும் ராஜபக்சே சுவைபட சொல்லியிருக்கிறார். தமிழர்களை ஏமாற்ற முடியும் என்ற கருத்தில்தான் அவர் அப்படி சொல்லியுள்ளார்.

மத்திய அரசு இதனை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். இலங்கைப் பிரச்சனையை ராஜபக்சே இரண்டாக பிரித்துப் பார்க்கிறார். தமிழர்கள் மீது எங்கள் படை செல்லாது, குண்டு வீசாது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் ஆதரவு தரமுடியாது என்று அவர்கள் நடத்துகிற யுத்தத்தையே இரண்டாக பிரித்து சொல்கிறார்.

இதனை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று பிரதமரையும், சோனியா காந்தியையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால் எப்படி அதை அணுக வேண்டுமோ, அப்படி அவர்களை அணுக வேண்டும். முதலில் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிவதை நிறுத்த வேண்டும். தமிழர் பகுதிகளில் வீடுகள், ஆலயங்கள் எதுவுமே தாக்குதலுக்கு ஆளாகக் கூடாது. இதற்கு ராஜபக்சே உத்தரவாதம் தருவதற்கு தயாராக இல்லை.

விடுதலைப் புலிகள் மீது குண்டு வீசினால் இலங்கைத் தமிழர்கள் மீதும், இவர்கள் மீது குண்டு வீசினால் விடுதலைப் புலிகள் மீதும் நிச்சயம் விழும். இரு பிரிவினரையும் ஒரு சேர அழிக்க ராஜபக்சே யுத்தம் புரிகிறார்.

அவர் கெடு கேட்டதன் நோக்கம் புரிகிறது. இதில் பிரதமர் ஏமாந்துவிடக் கூடாது. இந்தியா உட்பட எல்லா நாடுகளிலுமே தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களை அழிப்பதற்காக அந்த நாட்டு மக்களின் மீது குண்டு மழை பொழிகிறார்களா?

இதை பிரதமர் இந்தியாவின் சார்பாக, இங்கே வேதனைப்படும் தமிழர்களின் சார்பாக இலங்கைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்காவிட்டால் பிறகு என்ன நடவடிக்கை என்பதை நாங்கள் யோசிப்போம் என்று பிரதமர் கூறவேண்டும். அதன் பிறகு நம்முடைய எண்ணங்கள் நிறைவேற நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்போம்.

அறப்போர் மீது நமக்கு எப்போதுமே அக்கறை உள்ளது. காந்தி, பெரியார், அண்ணா காலம் முதல் அறப்போர் முறையை நாம் அறிந்துள்ளோம். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம். அந்த முறையில் தமிழர் நலன் காக்க பாடுபடுவோம். அந்த வழியில் ஓ.பன்னீர்செல்வம்
கருத்துப்படி பதவியை துறக்க தயார் என்று  முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.  (டிஎன்எஸ்)
Nov 14, 2008

Friday, October 1, 2010

தி.மு.க.வை எந்த தீய சக்தியாலும் வீழ்த்த முடியாது தமிழக நிதியமைச்சர் அன்பழகன் பேச்சு


விழாவில், ஒரு மாணவருக்கு அமைச்சர் அன்பழகன் கணினியை வழங்கினார். அருகில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கே.பி.பி.சாமி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.
திருவொற்றியூர், அக்.1- `தி.மு.க.வை எந்த தீய சக்தியாலும் வீழ்த்த முடியாது' என்று அமைச்சர் அன்பழகன் கூறினார்.
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.பி. பி.சாமியின் தந்தையும், முன்னாள் கவுன்சிலரு மான கே.பரசுராமனின் 18-வது நினைவு நாளை யொட்டி ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா, திரு வொற்றியூர் விம்கோ நகரில் நடந்தது. விழாவில் 10 பேருக்கு ஆட்டோ ரிக்ஷா, ஒருவருக்கு மினி லாரி உள்பட 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் அன்ப ழகன் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
திருவொற்றியூர் பகுதி யில் தி.மு.க.வை வளர்த்திட பரசுராமன் ஆற்றிய பணிகளை அண்ணா, கலைஞர், நான் உள்பட அனை வரும் நன்கு அறிவோம். தனக்கு பதவி கிடைக்கும் வாழ்வு கிடைக்கும் என்று எண்ணி அவர் கழக பணி யாற்றவில்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவரைப்போல் தி.மு.க. தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் படிப்படியாக வளர்ந்து தி.மு.க.வாக மாறி ஒளி பெற்று விளங்குகிறது.
தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆட்சி செய்கி றான் என்பதை பெருமை யான விஷயமாக நாம் கருதவேண்டும். உழைக் கும் மக்களின் பிரதிநிதி யாக ஏழை எளிய மக்க ளுக்கு பல்வேறு திட் டங்களை தீட்டி கலைஞர் ஆட்சி செய்து வருகிறார். கலைஞர் 6 ஆவது முறையாக முதல்வராக வருவது உறுதி. நமக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற ஆசை இல்லை. ஆனால் நாம் இல்லையென்றால் அந்த இடத்தில் அராஜக ஆட்சி வந்து விடும்.
நாம் யார் எப்படி அரசியல் கட்சி தொடங் கினோம். நேற்று சினி மாவில் நடித்து விட்டு இன்றைக்கு முதல்வர் ஆகிவிடலாம் என்று கட்சி தொடங்கி னோமா? யாருடனாவது கூட் டணி வைத்துக் கொண்டு யார் தோளிலாவது ஏறி மகனுக்கு பதவி வாங்கி விடலாம் என்று அரசி யல் நடத்துகிறவர்களா? ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நானே அமைச்சராக இல்லாவிட் டாலும் தி.மு.க. கட்சி நடக்கும். தி.மு.க. அடித் தட்டு மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம்.
கலைஞர் ஆட்சியில் பயன்பெறாத குடும்பமே இல்லை என்று கூறலாம். வண்ணத்தொலைக்காட்சி, இலவச எரிவாயு அடுப்பு, தொழில் தொடங்க உதவி, மாற்று திறனாளி களுக்கு உதவி என்று பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். எந்த உதவி யும் பெறாதவர்கள் யாராக இருந்தாலும் கூட 108-ன் உதவியை மறக்க முடி யாது. அதையாவது பெற்று இருப்பார்கள். 5 ஆண்டுகளில் நாம் நிறை வேற்றின சாதனைகள் வேறு எந்த ஒரு மாநி லத்திலும் நடைபெற்றி ருக்காது. தி.மு.க.வை எந்த தீய சக்தி யாலும் வீழ்த்த முடி யாது.
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் பேசினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கவிஞர் கவி தைப்பித்தன், டி.கே.எஸ். இளங்கோவன், கும்மி டிப்பூண்டி கி.வேணு, கத்தி வாக்கம் நகரசபை தலை வர் ந.திருசங்கு, நகர செய லாளர்கள் பாண்டியன், முத்துசாமி, பி. ஆதிகுரு சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


பேரூராட்சிப் பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:
அமைச்சர் அய்.பெரியசாமி
திண்டுக்கல், அக் 1- பேரூராட்சிப் பகுதிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட் டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் ஆலோ சித்து வருவதை அடுத்து, மத்திய அரசு இந்த யோச னைக்கு விரைவில் ஒப்பு தல் அளிக்கும் என வரு வாய்த் துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித் தார்.
திண்டுக்கல் மாவட் டம், சிறீராமபுரத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை, அமைச்சர் வழங்கிப் பேசியதாவது: தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருப்பதால், மத்திய அரசு அதற்கு மகிழ்ச்சி யோடு ஒப்புதல் அளித்து வருகிறது. எனவே, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை, பேரூராட் சிக்குள்பட்ட கிராமங் களில் செயல்படுத்த முதல்வர் ஆலோசித்து வருகிறார்.
மத்திய அரசு இதற்கு விரைவில் ஒப்பு தல் அளிக்கும். தமிழகத் தில் 7.5 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டாக் கள் வழங்கப்பட்டுள்ளன. சிறீராமபுரத்தில் ரூ. 65 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 6 சிமென்ட் சாலைகளும், 4 இடங் களில் தண்ணீர் வசதிக ளுடன் கூடிய கழிப்பறை கள், திருமலைராயபுரம், வெள்ளமடத்துப்பட்டி, சிறீராமபுரம் ஆகிய பகு திகளில் மகளிருக்கான கழிப்பறை ஆகியன கட் டப்பட உள்ளன என்றார் அமைச்சர்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்: அரசு மருத்துவமனையில் முதன்முறையாக அறுவை சிகிச்சை இன்றி இதய ஓட்டை அடைப்பு


 மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறுவனுக்கும் ஒரு பெண்ணுக்கும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே இதயத் தில் ஏற்பட்ட ஓட் டையை அடைத்து சாதனை புரிந்துள்ளனர். அரசு மருத்துவமனை யில் இதுபோன்ற சிகிச்சை அளிக்கப்படு வது இதுவே முதன் முறை என்று கூறப்படு கிறது.
கலைஞர் காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்தச் சிகிச்சை நடந் துள்ளது குறிப்பிடத் தக்கது.
மனித இதயத்தில் 4 அறைகள் உள்ளன (ஆரிக்கிள், வென்ட் ரிக்கிள்). இந்த அறை களைப் பிரிக்கும் மெல் லிய சுவரில், சிலருக்கு பிறக்கும்போதே ஓட்டை இருக்கும். 2 வயது ஆனதும் இது தானாகவே மூடிக்கொள் ளும். ஆனால், சிலருக்கு இந்த ஓட்டை தானாக மூடிக்கொள்ளாது.
இதயத்தில் ஓட்டை இருந்தால் பலவித பாதிப் புகள் ஏற்படும். இதைத் தடுக்க வேண்டுமானால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். அப்போது மருத்து வர்கள் இதயப் பகுதியில் உள்ள தசையை எடுத்து ஓட்டையை அடைப் பார்கள். அறுவை சிகிச்சையின்போது, நோயாளிக்கு 5 முதல் 8 யூனிட் வரை ரத்தம் செலுத்தப்படும். சிகிச் சைப் பிறகு நோயாளி 10 நாள்கள் முதல் 15 நாள்கள் வரையில் மருத்து வமனையிலேயே தங்க நேரிடும்.
தனியார் மருத்துவ மனையில் இதுபோன்ற அறுவை சிகிச்சைக்கு ரூ.2 லட்சத்துக்கும் மேலாக செலவாகக் கூடும். இப்படிப்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இதய நோய் சிகிச்சைப் பிரிவில் சிறுவனுக்கும், பெண்ணுக்கும் அறுவை சிகிச்சை இல்லாம லேயே இதய ஓட்டை பாதிப்பை சீர்படுத்தி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
விருதுநகர் மாவட் டம், ஜமீன்சல்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி (வயது 21). இவரது இதயத்தில் 28 மி.மீ. அளவு ஓட்டை இருந்தது. சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவ மனையில் சேர்ந்தார். மருத்துவர்கள் அவரது வலது தொடை ரத்த நாளம் மூலம் மெல்லிய கம்பியைச் செலுத்தி, அந்தக் கம்பியின் முனை யில் நீட்டினால் உலோ கத்திலான இரட்டைக் குடை போன்ற மென் பொருள் வைத்து இதய ஓட்டை பகுதியில் பொருத்தி அடைத்துள் ளனர். (இந்த மென் பொருள் நிக்கல்-டைட் டானியம் கலவையால் செய்யப்பட்டது). அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் 3 நாள்களில் நோயாளி வீடு திரும் பலாம் எனவும், அவ ருக்கு ரத்தம் ஏதும் செலுத்தப்படவில்லை என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இதேபோல மதுரை யா.ஒத்தக்கடை அருகே உள்ள புதுத்தாமரைப் பட்டி பகுதியைச் சேர்ந்த இலக்காபட்டி சக்தீஸ் வரன் ( வயது 6) என்ற சிறுவனுக்கும் இதயத்தில் இருந்த ஓட்டையை அடைக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதய சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் மருத் துவர் வி.அமுதன் தலை மையில் மருத்துவர்கள் கண்ணன், ஜனார்த்தனன், பாலசுப்பிரமணியன், நயினார்முகமது, சிவ குமார், வீரமணி, விஜய ராகவன் (மயக்கவியல்) உள்ளிட்டோர் இதற் கான சிகிச்சையை அளித் துள்ளனர்.
இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைப் பிரிவில் அறுவை சிகிச்சை இன்றி ஓராண் டில் மட்டும் சுமார் 1,700 பேருக்கு இதய அடைப்பு நீக்கும் பலூன் ஸ்டென்ட் சிகிச்சை (ஆஞ்சியோ கிராம் முறை) அளிக்கப் பட்டுள்ளது எனவும், இதில் 90 சதவிகிதம் பேருக்கு கலைஞர் காப் பீடு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்பட் டுள்ளது எனவும் மருத் துவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை யின்றி நோயாளிகளுக்கு நவீன முறையில் இதய ஓட்டை அடைப்பு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழுவி னரை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் எஸ்.எம்.சிவ குமார் பாராட்டினார்.

இந்தியா - சீனா இடையே உறவு வலுவடைந்து வருகிறது சீனாவில் நடந்த விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் கூட்டு தொழிற்சாலையை ஜியாங்-சூ மாகாணத்தில் திறந்து வைத்த போது எடுத்த படம்.
பீஜிங், அக்.1- இந்தியா - சீனா இடையேயான உறவு நாளுக்கு நாள் வலுவ டைந்து வருகிறது என்று சீனாவில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாட்டில் தொ ழில்முதலீடுகளை ஈர்ப்பதற் காக துணை முதல் அமைச் சர் மு.க.ஸ்டாலின் தலை மையிலான உயர்நிலைக் குழு சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. ஷாங்காய் நகரில் கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்துவைத்துப் பேசி னார். அப்போது அவர் கூறியதாவது,
கோவையைச் சேர்ந்த லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம் ஜவுளித்துறை யில் இந்திய அளவில் முன் னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஒட்டுமொத்த இந்திய ஜவுளித்துறையின் பங்க ளிப்பில் 60 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்டுள் ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் தரத்திற்கு பெயர் பெற்றவை.
இந்திய அளவில் புகழ் பெற்ற இந்த நிறுவனம் தற்போது உலக அளவில் பெரிய பன்னாட்டு நிறு வனமாக வளர்ந்திருப்ப தைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். சீன நிறு வனத்துடன் கூட்டுசேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள அதன் புதிய தொழிற் சாலையை திறந்துவைப் பதில்பெருமைப்படு கிறேன். இந்த நிறுவனமும் தனது தாய்நிறுவனத்தைப் போல தரத்தை தொடர்ந்து பாதுகாக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஜவுளித்துறை எந்திரங் கள் ஏற்றுமதிக்கு சீனாவில் நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் சீனாவில் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம் கூட்டு நிறுவனம் தொடங்கியிருப் பதன் மூலம் நியாயமான விலையில் தரமான பொருள்களை உற்பத்தி செய்திட முடியும். தற் போது இந்தியாவில் இந்த நிறுவனம் எப்படி முன் னணியில் விளங்கு கிறதோ, அதேபோல் சீனாவிலும் முன்னணி நிறுவனமாக மாறும் என்பதில் சிறி தளவும் சந்தேகம் இல்லை.
பாகியான், யுவான் சுவாங் போன்ற சீன அறி ஞர்கள் இந்தியாவுக்கு வந் துள்ளனர். இதேபோல், இந்தியாவைச் சேர்ந்த போதி தர்ம முனிவர் சீனா சென்றுள்ளார். தொழில்வளர்ச்சியின் முதல் கட்ட வாய்ப்புகளை இரு நாடுகளும் தவறவிட் டாலும் தற்போது உலக அளவில் பொருளாதாரத் துறையில் இரு நாடுகளும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இரண்டு நாடு களுக்கும் மிகச்சிறப்பான எதிர்காலம் காத்திருக் கிறது. இந்தியா - சீனா இடை யேயான பொருளா தார ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவு நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகிறது. பொரு ளாதார வளர்ச் சியில் ஆசிய வட்டாரத்தில் ஜாம்ப வான்களாக விளங் கும் இரு நாடுகளும் அமைதி யையும், வளத்தையும் கொண்டு வரும். இவ்வாறு துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னை கோட்டையில் அமைந்துள்ள செம்மொழி தமிழாய்வு நூலக அரங்கத்தில், இன்று (1.10.2010) நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுமக்களுக்கான நோய்த் தடுப்பு சுகாதார சேவையில் சிறப்பாக பணியாற்றிவரும், கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து நிலையத்திற்கு, இந்திய தொழில் கூட்டமைப்பு வழங்கிய 2010 ஆம் ஆண்டிற்காக விருதினையும், கிங் நோய்த் தடுப்பு நிலையத்தின் துணை இயக்குநர் டாக்டர் ப. குணசேகரனுக்கு, இந்தியன் அசோசியேஷன் ஆப் அப்ளைடு மைக்ரோ பயாலஜீஸ்ட் என்ற அமைப்பு வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வி.கே. சுப்புராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களை அறவே இல்லாமல் செய்வதற்கான ஒரு பணியில் அந்நாட்டு அரசாங்கம் செயல்பட்டு வருவதை உலகம் உணர்ந்து கொண்டு விட்டது.

பன்னாட்டு சட்ட வல்லுநர்கள் ஆணையத்தின் படப்பிடிப்பு
இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களை அறவே இல்லாமல் செய்வதற்கான ஒரு பணியில் அந்நாட்டு அரசாங்கம் செயல்பட்டு வருவதை உலகம் உணர்ந்து கொண்டு விட்டது. இந்திய அரசாங்கத்தைத் தவிர உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளுக்கு இந்நிலை மிகவும் நன்றாகவே புரிந்துகொண்டு இருக்கிறது.
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர மக்களாக வாழ ஒப்புக்கொள்ளவேண்டும் என்று இங்குள்ள சங் பரிவார்க் கூட்டம் சொல்லி வருவது போல இலங்கையிலே உள்ள அரசும், இனவெறியர் களும் (புத்த பிக்குகள் உள்பட) அங்கு சொல்லி வருகின்றனர்.
அழித்து முடிக்கப்பட்ட பல லட்சம் தமிழர்கள் போக எஞ்சிப் பிழைத்துள்ள தமிழர்களுக்கான வாழ்வுரி மைக்கு உத்தரவாதம் தேவை என்பதற்காகப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே இந்தத் திசையில் கருத்துத் தெரிவித்துள்ளார்; நியாயத்தை, உண்மையை உணருபவர்கள் இன்னும் இலங்கைத் தீவிலே ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று சொல்லிக் கொள்ள இது பயன்படக் கூடும்.
இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் இந்த அவல நிலை மாற்றப்படவேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் அழுத்தமாக ஒலிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, லண்டன் போன்ற இடங்களில் போராட்டக் குரல் வலுவாக ஒலித்திருக்கிறது. அய்.நா. மன்றத்தின் முன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்து எழுந்துள்ளனர்.
தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல அய்.நா. மன்றம் தூக்கத்திலிருந்து கொஞ்சம் விழித்து அரை குறையாக நியாயம் பேச ஆரம்பித்தது.
ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையை நேரில் கண்டுவர, அய்.நா. ஒரு தூதுக்குழுவை அனுப்பிட முடிவு செய்த நிலையில், இலங்கை அமைச்சரே போராட்டம் நடத்துகிறார் - அந்தக் குழுவை அனுமதிக்கமாட்டோம் என்று ஆணவத்துடன் குரல் கொடுக்கின்றனர் என்றால், இதன் தன்மையைப் புரிந்துகொள்ளவேண்டாமா? மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் இருக்காது என்ற பழமொழி ஒன்று உண்டு.
இலங்கை அரசு - அய்.நா.வின் ஆய்வுக்குழுவை அனுமதிக்க மறுத்ததன்மூலம், அதன் மடியில் உள்ள கனம் எவ்வளவுப் பெரியது என்பதை எளிதிற் தெரிந்துகொள்ளலாம்.
அய்.நா.வின் குழுவை அனுமதிக்க மறுத்த நிலையில், அய்.நா.வே முன்வந்து உரிய நடவடிக் கைகளை மும்முரமாக எடுக்க முன்வந்திருக்க வேண்டும். ஏதோ ஒப்புக்காக அந்த நிலையை எடுத்தது - அதோடு சரி என்ற முடிவுக்குத்தான் வரவேண் டியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டுச் சட்ட வல்லுநர் ஆணையம், முகத்தில் அறைந்ததுபோல் இலங்கை அரசின் உரிமை மீறலை - சட்ட மீறலை எடுத்துக் கூறியுள்ளது.
இந்த உலக அமைப்பில் 60 சட்ட வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். இலங்கையில் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன சக்திகள், பார்ப்பன ஊடகங்கள் ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் குரல் கொடுப்பவர் களை இனவெறியர்கள் என்று முத்திரை குத்துகின் றனவே - இந்த பன்னாட்டு சட்ட வல்லுநர்கள் திட்டவட்டமான வகையில், இலங்கை அரசின் சட்ட மீறலைப் பிசிறின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்களே - இதற்கு எந்த உள்நோக்கத்தைக் கற்பிக்கப் போகிறார்கள்?
சந்தேகத்தின் பேரில் 8000 பேர்களை இலங்கையில் சிறைகளில் அடைத்திருப்பது - உலகில் எங்கும் நடைபெறாத மிகப்பெரும் அளவிலான நிருவாகச் சிறைப்பிடிப்பு என்று உலகின் சட்ட வல்லுநர்கள் கூறிவிட்டனரே- இதற்குப் பிறகாவது இங்குள்ள ஆரிய வெறியர்கள் கண் திறந்து பார்க்கவேண்டாமா? இந்திய அரசு நெடும் உறக்கத்தைவிட்டு எழுந்தருள் புரியவேண்டாமா?
செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்குக் கூட - சிறையில் இருக்கும் கைதிகளைக் காண்பதற்கு அனுமதி கொடுக்காததை பன்னாட்டு சட்ட மய்யம் சுட்டிக்காட்டிக் கண்டித்துள்ளதே!
திராவிடர் கழகம் தமது பொதுக்குழு, தலைமைச் செயற்குழு கூட்டங்களிலும், சீர்காழி வரை நடைபெற்ற மண்டல மாநாடுகளிலும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொடுத்த தீர்மானங்கள்தான் - இப்பொழுது பன்னாட்டுச் சட்ட வல்லுநர் ஆணையத்தின் எச்சரிக்கையாக வெளிவந்துள்ளன.
இத்தகு ஆணையங்களுக்கு எந்த அளவு சட்ட அங்கீகாரம் என்பது ஒரு பிரச்சினைதான் என்றாலும், இந்த அமைப்பு உலகில் பல முக்கிய நகரங்களில் கருத்துரு வாக்கத்தை உருவாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது - அதன் மனிதநேயத்தை மேலும் உயர்த்திக் காட்டும் செயலாக இருக்க முடியும்.

பொதுப்பணித் துறை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் முதல்வர் கலைஞர் உத்தரவு

முதலமைச்சர் கலைஞர் தலைமையில், பொதுப்பணித்துறை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் எஸ். மாலதி மற்றும் அரசு உயரதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளனர் (சென்னை, 30.9.2010).
சென்னை, அக்.1- பொதுப்பணித் துறை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆய் வுக் கூட்டத்தில் முதல் வர் கலைஞர் உத்தரவிட் டார். தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பொதுப் பணித் துறையின் நீர்வள ஆதா ரம் மற்றும் கட்டடப் பிரிவுகள் மூலம் தமிழ கத்தில் செயல்படுத்தப் பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன் னேற்ற நிலை குறித்து முதல்வர் கலைஞர் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தலைமை செயலாளர் மாலதி, பொதுப் பணித் துறை முதன்மைச் செய லாளர் ராமசுந்தரம், நிதித் துறைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொதுப் பணி துறை(நீர்வள ஆதா ரம்) மூலம் மேற்கொள் ளப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்கள், தடுப்பணை கட்டுவதன் மூலம் நிலத் தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய திட் டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக, காவிரி ஆற்றின் குறுக்கே கட் டளைப் பகுதி மாயனூ ரில் ரூ.165 கோடியில் கதவணை கட்டும் திட் டத்தை முடிக்க முதல் வர் கலைஞர் அறிவுறுத் தினார். தாமிரபரணி, கருமேனி ஆறு, நம்பி யாறு இணைப்புத் திட் டம் ரூ.369 கோடி மதிப் பீட்டில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
முதற்கட்ட மற்றும் 2 ஆம் கட்டப் பணிகளின் முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்த முதல்வர், இந்தியாவின் முன்னோ டித் திட்டமாகிய இத் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றிப் பயனுக்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத் தரவிட்டார்.
பாலாறு மற்றும் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மணல் எடுத்து வருவதால் ஏற் பட்டுள்ள பிரச்சினை கள் குறித்து விவாதிக் கப்பட்டது. இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள் ளுவதை முழுமையாக தடை செய்வதற்கும், கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் அதிக அள வில் மணல் படிந்திருப் பதால் அங்கிருந்து மணல் எடுப்பதை அனுமதிப்ப தற்குத் தேவையான நட வடிக்கைகளை மேற் கொள்ளவும் முதல்வர் கலைஞர்அறிவுறுத்தினார்.
சென்னை மாநகரில் ஜவஹர்லால் நேரு நகர்ப் புற புனரமைப்புத் திட் டத்தின் கீழ் ரூ.633 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் முன்னேற்ற நிலைகள் குறித்து அதி காரிகளிடம் கேட்டறிந் தார். வடகிழக்குப் பருவ மழை தொடங்கவிருப்ப தால், மழைக் காலங் களில் மக்களுக்கு ஏற் படும் சிரமங்களை முற் றிலும் அகற்றுவதற்காக இப்பணிகளை விரைவு படுத்த அறிவுறுத்தினார்.
தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நிலத் தடி நீரை உயர்த்தும் திட்டப் பணிகள் நடை பெறும் பகுதிகளிலுள்ள மக்களுக்கு இத்திட்டத் தின் பயனை விளக்கி அதன்மூலம் அவர்களின் முழு ஒத்துழைப்போடு பணிகள் நிறைவேற்றப் படுகின்றனவா என்றும், இத்திட்டத்திற்கான வழி காட்டி நெறிமுறைகளின் படி பணிகள் நடை பெறுகின்றனவா என் றும் கேட்டறிந்தார்.
மேலும் மண்டலம் வாரி யாக திட்ட செலவினங் கள், திட்டப் பணிகள் முன்னேற்றம் பற்றியும் ஆய்வு செய்தார். சென்னை அரசினர் தோட்டத்தில் கலைவா ணர் அரங்கம் கட்டுவ தற்கான பணிகளை உட னடியாக தொடங்கி, விரை வாக முடிக்க கூறினார். வெளிச்சந்தையில் சிமென்ட் விலை அதி கரித்துள்ளதால் வேறு மாநிலங்களிலிருந்து அல்லது மாற்று ஏற் பாடுகள் செய்து நியாய மான விலையில் சிமென்ட் கொள்முதல் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற் கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
ஆய்வு முடிவில், பொதுப்பணி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ள நிதி முழுவதையும் செலவிட்டு, திட்டங் களின் பணிகளை தர மாகவும், உரிய காலத் திற்குள் முடிக்க மாவட் டங்களிலுள்ள அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
http://www.viduthalai.periyar.org.in/20101001/news03.html

இலங்கைக் கடற்படை அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்களின் வலைகள் மூழ்கடிப்பு


ராமேசுவரம், அக். 1- நடுக்கடலில் மீன் பிடித்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர் களின் வலைகளை இலங் கைக் கடற்படையினர் வெட்டி மூழ்கடித்தனர். மேலும் படகில் இருந்த இறால் மீன்களைப் பறித் துச் சென்றதாக மீனவர் கள் வியாழக்கிழமை தெரிவித்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்தியாளர் களிடம் கூறியதாவது: ராமேசுவரத்தில் இருந்து செப். 29 ஆம் தேதி சுமார் 150 விசைப்படகு கள் மீன் பிடிக்கச் சென்றன.
இப் படகுகள் வழக் கமாக மீன் பிடிக்கக் கூடிய பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 4 போர்க் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற் படையினர் மீனவர் களைக் கண்டதும் துப் பாக்கியைக் காட்டி மிரட்டி, விரட்டிய னுப்பினர்.
இதில் தங்கச்சிமடத் தைச் சேர்ந்த மார்த் தாண்டம், சேவியர் ஆகி யோருக்குச் சொந்தமான விசைப்படகை மடக்கிப் பிடித்தனர். எங்கள் கடல் எல்லைக்குள் மீன் பிடிக்க வரக் கூடாது என பலமுறை கூறியும், தொடர்ந்து வருகிறீர்கள் என இலங்கைக் கடற் படையினர் எச்சரிக்கை விடுத்தபடி, அரிவா ளால் மீன்பிடி வலை களை வெட்டி கடலில் மூழ்கடித்தனர். மேலும் 10-க்கும் மேற் பட்ட விசைப்படகு களில் விலை உயர்ந்த இறால், கணவாய் மீன் களைப் பறித்துக் கொண்டு சென்றனர்.
இப் படகின் மீனவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது. இலங்கைக் கடற் படையின் தொடர் தாக் குதலால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடி யாத நிலை ஏற்பட் டுள்ளது. பெரும்பா லான ராமேசுவரம் தீவு மீனவர்கள் பிழைப்புக் காக தூத்துக்குடி, மங் களூர் போன்ற கடற் கரை நகரங்களுக்கு பணிக் காகச் சென்றுள்ளனர்.
http://www.viduthalai.periyar.org.in/20101001/news05.html

சிங்கள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டுமே தமிழர்களை வஞ்சிக்கின்றன நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படுத்துகிறார்

சிறீலங்காவின் பிரதானக் கட்சிகளான, ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான அய்க்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டுமே, வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்கு உரிய அதிகாரம் தருவதை மறுத்து அரசியல் தீர்வுக்குத் தடை உண்டாக்கி, தமிழர்களை வஞ்சிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளு மன்ற உறுப்பினர், சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்திற்கு (பிபிசி) இலங்கையின் எதிர்க்கட்சியான அய்க்கிய தேசியக் கட்சியின் (யு.என்.பி.) பொதுச்செயலாளர், திஸ்ஸ அட்டநாயகெ, செப்டம்பர் 28 இல், ஒரு நேர்காணல் அளித்தார். தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தோற்ற பின்பு, சிறீலங்கா மக்கள் தமிழ்ப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வேலை செய்யவேண்டும், இனப் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதில் காலத்தைச் செலவு செய்யக்கூடாது என, அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், அய்க்கிய தேசியக் கட்சி, தன்னுடைய உண்மையான வண்ணத்தைக் காட்டிவிட்டது என்றும், ஆளும் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வேறு படவில்லை என்றும் கூறினார். இரண்டு கட்சிகளுமே தமிழர் பகுதிகளுக்கு உரிய அதிகாரங்கள் அளிப்பது குறித்து அக்கறை காட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆயுதம் தாங்கிய போராளிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் வரைதான், சிங்களரின் தலைவர்கள் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதைப் பற்றிப் பேசுவார்கள் என்றும் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.

கலைஞர் கண்ணீர்!!!!

பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கலைஞர் சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர் முதல்வர் கலைஞர் பேசுகையில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.

கலைஞர் பேசுகையில், தோழமை கட்சிகளின் கருத்தோடு என் கருத்தையும் இணைத்து கூறுகிறேன். காவல்துறையில் எல்லோரும் நல்லவர்களும் அல்ல, தீயவர்களும் அல்ல. இதில் கருங்காலிகளும் உள்ளனர்.

அதற்காக காவல்துறையே வேண்டாம் என முடிவு செய்ய கூடாது. ஒரு ஆட்சி செம்மையாக இருந்தால்தான் எல்லா துறையும் சீராக செயல்படும். இதை பொறுத்து கொள்ள முடியாமல் எரிச்சலடையும் புகைச்சலாகத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது.

இதற்காகத்தான் நீங்கள் சட்டசபையில் எனக்கு பொன்விழா நடத்த வேண்டும் என்ற போது நான் வேண்டாம் என மறுத்தேன். பிடிவாதமாக சம்மதிக்க வைத்தீர்கள்.

என்றைக்காவது 50 ஆண்டு காலத்தில் எந்த விழாவாவது இந்த அவையில் நடந்ததுண்டா. நான் தம்பி என்று கருதிக் கொண்டிருந்தவரும் கூட அறிக்கை விட்டிருக்கிறார். ஏனென்றால் அவர்களால் எல்லாம் இவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த அவையில் எம்ஜிஆர் படம் திறக்கப்பட்ட போது என்னை அழைக்கவில்லை. அப்போது, சபாநாயகர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார், நாங்கள் அமர்ந்த இடத்தில் சசிகலா அமர்ந்திருந்தார். இந்த அவை ஒரு தர்பார் போல காட்சியளித்தது.

நீங்கள் எல்லாம் பார்த்து ஏதோ, ஐம்பதாண்டு காலம் இருந்தானே, எங்கேயோ பிறந்தவன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானே என்று என்னையும் சிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கருதியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் இன்றைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்.

இதில் டிஜிபியும், கவர்னரும் என்ன செய்வார்கள், அவர்களை பற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். உலக மகா பொய்யர் கருணாநிதி என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

நடமாடும் பொம்மையாக டிஜிபி இருக்கிறார் என்கிறார். காவல்துறையைப் பற்றி உருக்குலைந்து போன, செயல் திறன் இழந்து விட்ட, சர்வ நாசமாகி விட்ட அமைப்பு என்று கூறியுள்ளார். துர்வாச முனிவரால் கூட இப்படி திட்ட முடியாது.

ஆளுநரைப் பார்த்து நபர் என்கிறார். நாம் பதிலுக்குப் பதில் பெண்களைப் பற்றிப் பேசக் கூடாது. நாம் பெண்களை பற்றி பேசக்கூடாது, பெண்களும் இப்படி பேசக்கூடாது.

நாம் புராணங்களை நம்புவதில்லை, கட்டுகதைகளையும் நம்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது அல்லி ராணிகள் இருக்கத்தான் செய்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.

முதலில் நரசிம்மராவ், வாஜ்பாய், அத்வானி, ராஜீவ் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரபாபு நாயுடு எல்லோரையும் குறை கூறிவிட்டு, இப்போது உ.பி சென்று அவர் கையை பிடித்துள்ளார்.

வாஜ்பாயைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா. தமிழ் நாட்டு மக்களுக்கு இவரை யார் என்றே தெரியாது. நான்தான் பட்டி தொட்டிகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன் என்றார். அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார்.

இரவு 10 மணிக்கு ராஜீவ் காந்திக்குப் போன் செய்தேன். அவர் தூங்கப் போய் விட்டார் என்றார்கள். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு சீக்கிரம் தூங்கினால் நாடு உருப்படுமா என்றும் கூறினார்.

ஆளுநர் சென்னாரெட்டியை சந்திக்கச் சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றார். சந்திரபாபு நாயுடுவை மோசடிப் பேர்வழி என்றார்.

எம்.ஜி.ஆர். என்னை விட்டு, திமுகவை விட்டுப் பிரிந்து சென்றார். அப்படி இருந்தும் என் மீது மரியாதையாக இருந்தார். நட்பு பட்டுப் போய் விடவில்லை. அவருடைய காரிலே ஒரு நண்பர், இப்போதும் அவர் சென்னையிலே பெரிய புள்ளியாக உள்ளார்.

டிரைவர் என்று கூறக் கூடிய அளவுக்கு எம்.ஜி.ஆரிடத்திலே நெருக்கமாக இருந்தவர் அவர். ஒருமுறை காரில் எம்.ஜி.ஆருடன் சென்றபோது தவறிப் போய் எனது பெயரைக் குறிப்பிட்டு, கருணாநிதி என்று கூறி விட்டார்.

உடனே காரை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்.அவரை நடந்தே வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டார். ஏன் என்று அவர் கேட்டபோது, நானே கருணாநிதி என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. நீ எப்படிக் கூப்பிடலாம் என்றாராம். இதை அந்த நண்பர் பின்னர் ஒருமுறை என்னிடம் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்.

அப்படி, ஒரு கட்சி பிரிந்த பிறகும் கூட அந்த உணர்வுகள் அப்படியேதான் இருந்தன. நான் காமராஜரைப் பற்றிப் பேசாத பேச்சா. காமராஜர் என்னைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ பேசாத பேச்சா. பக்தவச்சலம் என்னைப் பற்றி பேசாத பேச்சா, நான் அவரைப் பற்றிப் பேசாத பேச்சா. அப்படி இருந்தாலும், என்னுடைய தாயின் பெயரில் திருக்குவளையில் தாய் சேய் நல விடுதியைத் திறக்க வேண்டும் என கேட்டபோது பக்தவச்சலம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.

அதேபோல நான் அவருக்கு மணிமண்டபம் கட்டியபோது அவர் இந்தியைக் கொண்டு வந்தார், உங்களை பாளையங்கோட்டை சிறையில் போட்டார். அவருக்கு மணி மண்டபா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அது வேறு, இது வேறு. மனித நாகரீகம் இது, தடுக்காதீர்கள் என்றேன்.

பெருந்தலைவர் காமராஜரை நான் எவ்வளவு தூரம் விமர்சித்திருப்பேன். எனது தாயார் இறந்தபோது நான் சவத்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தேன். எனது வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார். எனது தாயாருக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார்.

அரசியலில் மற்றவர்களை தாக்கி பேசும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா அந்த நாகரீகத்தை கற்றவர் அல்ல, காப்பாற்றுபவரும் அல்ல. மனித இதயத்தோடு தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துகிறார்.

இதையெல்லாம் தாங்கிகொண்டுதான் ஆக வேண்டும். இந்த அளவிற்கு நாகரீகமற்ற, பண்பாடற்ற அரசியல் வந்துவிட்டதே என வருத்தப்பட வேண்டியுள்ளது.

84 வயது, 84 வயது என்று சொல்கிறீர்களே, இவ்வளவு நாள் இருந்ததால் அல்லவா, தமிழ்நாட்டிலே காமராஜரைப் போன்ற, பெரியாரைப் போன்ற, பகத்வச்சலத்தைப் போன்ற, அண்ணாவைப் போன்ற பெரிய மனிதர்களுன் பழகி விட்டு, இன்றைக்கு யார் யாரோடெல்லாம் அரசியல் நடத்திய வேண்டிய நிலை வந்து விட்டது.

இப்படியெல்லாம் 84 வயது வரை வாழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன் என்று கூறியபோது கலைஞரின் கண்கள் பணித்தன, குரல் தழுதழுத்தது. அவையே பெரும் அமைதியில் உறைந்து போனது.

கலைஞர் கண் கலங்குவதைப் பார்த்த அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை, தமிழரசி, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கண்கலங்கினர்.

(செய்தி உதவி : தட்ஸ் தமிழ்)

அம்மாவின் கபட நாடகம் பாரீர்

அட, இந்த அம்மா கூட இலங்கை தமிழருக்கு ஆதரவா பேசுதேனு ஒரு ஆச்சரியம்.. அதெல்லாம் ஒரு மன்னும் இல்லனு தெளிவு படுத்திய அம்மாவுக்கு நன்றி..

தந்தி அடியுங்கள் என்ற சொன்னவுடன் , என்ன தந்தி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்ல வேண்டியது தானேனு அம்மா கத்துச்சி.. இப்போ அதுவே தீர்மானமாக அனைத்து கட்சிக்கூட்டத்துல வந்தப்ப, மொதல்ல, நான் சொன்னதுக்காத்தான் கருணாநிதி இப்படி முடிவு எடுத்தார்னு ஒரு அறிக்கை விட்டுச்சு.. அந்த பப்பு வேகல.. கலைஞர் எடுத்த இந்த முடிவுக்கு எல்லோரும் , ஆதரவு தந்தத பார்த்து அதுக்கு உள்ளே ஒரு உதறல்..

இப்பொ என்னடானா, அயிரெத்துட்டு கேள்வி கேட்குது.. அமைச்சர் பதவி விலகுவாங்களா.. அது இதுனு,

அட லூசே.. அனைத்து தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்னு தெளிவா சொல்லிட்டாங்களே அப்புறம் ஏன் ஒப்பாரி உனக்கு?? வக்கிருந்து உங்க கட்சி சார்ப்பா அனைத்து கட்சி கூட்டத்து போய் இருக்கனும்.. அத விட்டுட்டு லூசு முன்டம் மாதிரி அறிக்கை விடற... அதுக்கு அந்த வைக்கோல்சாமி வேற ஒத்து...

யம்மா.. நீ வழக்கம் போல, தாம்பரம் 2 வது முட்டுசந்துல அ தி மு க போராட்டம் , கிழக்கு சைதாப்பேட்டைல மூனாவது மூத்திர சந்துல ஆர்ப்பாட்டம்னு அறிக்கைவிட்ட்கிட்டு வேலைய பாரு.. லூசுத்தனமா, உனக்கு சம்பந்தமே இல்லாத தமிழர் பிரச்சனைக்கு தலைய விடாதே.. சரியா..

இது நீலிக்கண்ணீர் விடுது.. இலங்கை பிரச்சனை பற்றிய உன் மூஞ்சி லட்சணம் என்னனு ஊருக்கே தெரியும், இப்போ திடிர்னு நீ வந்து சும்மா ஆதரவு அறிக்கை விடுறீயா??

இதுல ரெண்டு பக்கம் இருக்கு , ஒரு பக்கத்தை ஆதரிக்கிறேன், இன்னொரு பக்கத்தை கடுமையா எதிர்க்கிறேன்னு அறிக்கை விட்டுது இந்த லூசு இரண்டு நாளைக்கு முன்னாடி.. இப்போ வந்திருக்க கடைசி அறிக்கைய பாருங்க.. என்ன நாடகம் ஆடுது இந்த புண்ணாக்கு.

லூசே, இப்போ சொல்றீயே.. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை நு , அட முன்டமே. அப்புறம் என்னத்துக்கு இங்கே இருந்து எதுக்கு அறிக்கை விட்டே?? மத்திய அரசில் இருக்கும் கருணாநிதி இதை பற்றி ஏன் பேசலனு..

லூசு அம்மாவின் பதில் - அட , கருனாநிதி இலங்கையோட அமைச்சரையில் இடம்பெற்றிருக்காருன்னா நெனைச்சுன்டிருக்கேன்... அவா கூட இல்லையா....

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிட வாய்ப்பு ஏற்படும். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ராணுவ தாக்குதல் உடனே நிறுத்தப்பட வேண்டும்' என்பது தான் தற்போதுள்ள முக்கிய பிரச்னை

லூசு அம்மா, இந்தியா தலையிடவும் கேட்கக்கூடாது, தாக்குதல்களும் நிக்கனும் . என்ன கணக்கு இது? அப்புறம் ஏன் இங்கே இருந்து அறிக்கை விடற அதுவும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிரா..?

லூசு அம்மா பதில் - அட ஆமா, சரி சரி.. அப்போ , இந்தியால இருக்கு எல்லா எல் கே ஜி, யூ கே ஜி க்கும் 2 நாள் லீவு விட்டுடலாம், இலங்கை அரசு பயந்துடும்.. அப்படியும் பயப்படலனா... போயஸ் தோட்டம் பக்கத்துல இருக்க மூத்திர சந்துல ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி நடுநடுங்க வெக்கலாம்..

இது ஓக்கே வாம் , அது ஓக்கே இல்லையாம்.. சரி இந்தியா தலையிட்டு பேசலாம்னா , அது கூடாதாம், அது இந்திய இறையான்மையை பாதிக்குமாம்..

அட லூசே , என்னத்தான் நிலை நு தெளிவா சொல்லு... நீ அரசியல் குளிர் காயறதுக்கு, நடுவுல பூந்து குளிர்காயாதே.. ஓடு உன் கொட நாடு எஸ்ட்டேட்டுக்கு,குளிர் காயனும்னா..

இந்தியா எதுவும் செய்ய முடியாதுனு பேசுற நீ மத்திய , மாநில அரசுக்கு எதிரா வாய் சவடால் அறிக்கை விடாம எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இரு.. சரியா.. இல்லைனா ராஜபக்சேக்கு எதிரா அறிக்கை விடு.. அத விட மாட்டே, ஏன்னா வைக்கோல்புலி ஏற்கனவே சொன்ன மாதிரி நீ சந்திரிக்காவின் ஊது குழல் தானே.. . வைக்கோல் புலி அதை இப்போ மறந்திருக்கலம்..

லூசு அம்மா - மத்திய மாநில அரசு இந்தியாவுலயா இருக்கு?? இது தெரியாம போச்சே...