Search This Blog

Saturday, November 20, 2010

கலைஞருடன் சி.பி.எம்.-போயஸ் கார்டன் சாக் !!!

ரசியல் வட்டாரங்களில் புருவத்தை உயரச் செய்திருக்கிறது அந்த சந்திப்பு. அக்டோபர் 27-ந் தேதியன்று சி.பி.எம். ராஜ்யசபா எம்.பி. டி.கே.ரங்கராஜனும், அக்கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ.வின் ஏ.சவுந்தரராசனும் கலைஞரை சந்தித்ததுதான் புருவங்கள் உயர்ந்ததற்கு காரணம். இருவருமே கலைஞரை கடுமையாக எதிர்ப்பவர்கள்.

விஜயவாடாவில் நடந்த சி.பி.எம். விரிவாக்கப்பட்ட மத்தியக்குழு கூட்டத்தில் பேசிய பொலிட்பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, ""காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் நாம் கூட்டணி வைப்பதில்லை என்று தமிழகத்தில் தி.மு.க.விடமிருந்து விலகி அ.தி.மு.கவுடன் சேர்ந்துள்ளோம். ஆனால், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கேரளாவில் கூட்டணி வைத்துள்ளோம். கேரளாவில் ஒரு நிலை, தமிழகத்தில் ஒரு நிலையா?'' என கேட்டபோது, குறுக்கிட்ட டி.கே.ரங்கராஜன்... யெச்சூரிக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, அ.தி.மு.க கூட்டணிதான் தேவை என்று வலியுறுத்தியவர். இதை அப்போதே நக்கீரன் பதிவுசெய்துள்ளது. அப்படிப்பட்டவரும், தனக்கு கைவிலங்கிட்டதாக தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டிவரும் சவுந்தர ராஜனும் ஏன் கலைஞரை சந்தித்தார்கள்?

தமிழகத்தில் தொழிற்சங்கப் பிரச்சினைகள் தொடர்பாக அரசுக்கும் மார்க்சிஸ்ட்டுகளுக்கும் மோதல்கள் ஏற்பட்டுவருவது குறித்து சி.பி.எம் மேலிடத்திற்கு ரிப்போர்ட் போயிருக்கிறது. இதனால், பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத், தொழிற்சங்கப் பொறுப்புகளை கவனிக்கும் யெச்சூரி ஆகியோர் தமிழக மார்க்சிஸ்ட்டுகளிடம், முதல்வருடன் பேசி சுமுக முடிவு காணுங்கள் எனச் சொன்னதையடுத்தே இந்த சந்திப்பு நடந்துள்ளது என்கிறார்கள் உயர்மட்டத் தோழர்கள்.

இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் தொழில் அமைதி ஏற் படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண் டும் என்றும் அதற்கு தனியார் பன்னாட்டு நிறு வனங்களில் தொழிற் சங் கங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்றும் தோழர்கள் தெரிவித் திருக்கிறார்கள்.

இதற்கிடையே, சி.பி.எம். பிரமுகர்கள் வருகிறார்கள் என்றதுமே, அவர்களைக் கடுமை யாகப் பேசியதாகக் குற் றம்சாட்டப்படும் அமைச் சர் தா.மோ.அன்பரசனை யும் வரச்சொல்லிவிட்டார் முதல்வர். சி.பி.எம். பிர முகர்கள் இருவர் முன்னி லையிலும் அமைச்சரிடம் இது பற்றி விசாரித்திருக்கிறார்.

""காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், "கம்யூனிஸ்ட்டுகள் யாரும் ரோட்டில் நடமாட முடியாது. நாங்கள் நினைத்தால், நீங்கள் கூட்டம் போடமுடியுமா? அடக்கி வாசிங்க. நடமாட விடமாட்டோம்'னு பேசினீங்களா?'' என்று முதல்வர் கேட்க, "ஆமாங்கண்ணே.. பேசினேன்' என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் அமைச்சர். ஏன் அப்படியெல்லாம் பேசுனீங்க என்று முதல்வர் குரலை உயர்த்திக் கேட்க, ""சவுந்தரராசன் தலை மையில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் பேசுனவங்களெல்லாம் தி.மு.க ஆட்சியைக் கடுமையா விமர்சித்துப் பேசியதோடு, தலைவரை யும் தளபதியையும் தலைவர் குடும்பத்தையும் பற்றியெல்லாம் பேசினாங்க. அதற்குப் பதில் கொடுப்பதற்காகத்தான் பேசினேன்'' என்று சொல்ல, சற்று பதட்டமான சவுந்தரராசன், "நான் தலைமை தாங்கிச் சென்றபிறகு யாராவது அப்படி பேசியிருப்பாங்க. எனக்குத் தெரியாது' என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கான ஆதாரம் இருக்கிறது என்று சொன்ன அன்பரசன், ""தலைவரே.. சவுந்தரராச னும் ரொம்பக் கடுமையாகத்தான் பேசினார். என் கையில் விலங்கு போட்டது போல, கோட்டை யில் இருப்பவர்களின் கைகளில் விலங்கு போடும் காலம் வரும் என்று பேசினார். இவருக்கு விலங்கு போடப்படவில்லை என்பதை கோர்ட்டுக்கு அழைத்துவரும்போது எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள் காட்டுது. அதுபோல, வேலூர் ஜெயிலிலிருந்து அவரை அழைத்து வரும்போதும் கைவிலங்கு போட லைங்கிறது அங்குள்ள வீடியோ கேமராவில் பதிவாகியிருக்குது. அப்புறம் ஏன் இப்படி பேசணும்?'' என்று தா.மோ.அன்பரசன் சொல்ல, "சரி... அதை விடுங்க' என்று அவரை அமைதிப்படுத்திவிட்டார் முதல்வர்.

அதன்பிறகு, சி.பி.எம். பிரமுகர்கள் இருவரிடமும் தொழிற்சங்கப் பிரச்சினைகள் குறித்து விரிவாகவே பேசியிருக்கிறார். பேச்சு வார்த்தை மூலம்தான் பிரச்சினைகளுக்கு முடிவு செய்யணும் என டி.கே.ஆரும், சவுந்தரராசனும் சொல்ல.. நானும் அதை வரவேற்கிறேன் என்ற முதல்வர், ஆனா.. போராட்ட முறை மாறும்னு இன்னொரு தலைவர் (தா.பா) சொல்லி யிருக்காரே என்று கேட்டுள்ளார். அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று சி.பி.எம். பிரமுகர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

தனியார்-பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கங்களுக்கு அனுமதியளித்து, தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப் படவேண்டும் என்று அவர்கள் சொன்னதை அக்கறையோடு கேட்ட கலைஞர், அவர்கள் சென்றபிறகு இதுகுறித்த நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளிடம் உத்தரவிட்டிருக் கிறார்.

கலைஞர்-சி.பி.எம். பிரமுகர்கள் சந்திப்பு போயஸ்கார்டனில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது. மார்க்சிஸ்ட்டுகளை கடுமையாகப் பேசிய தா.மோ.அன்பரசனை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற தன்னு டைய அறிக்கை வெளியாகும் நாளிலேயே இந்த சந்திப்பு நடந்திருப்பது ஜெ.வை டென்ஷ னாக்கிவிட்டது.

"தா.பாண்டியன் என்கிட்டே சொன்னது கரெக்ட்தான். சி.பி.எம். நம்மகூட இருக்கமாட் டாங்க. தி.மு.க. பக்கம் போயிடுவாங்க. அவங்களை நம்பக்கூடாது' என்று சொல்லி வருகிறாராம் ஜெ.
-பிரகாஷ்
நக்கீரன்

No comments:

Post a Comment