Search This Blog

Thursday, November 18, 2010

நாளும் சாதனை செய்துவரும் கலைஞர் ஆட்சியை அசைக்க முடியாது

தமிழ்நாட்டில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலை-மையில் நடைபெறும் ஆட்சியில் மக்கள் _ பல துறை-களிலும் நிம்மதியும், நீடித்த வாழ்வும் பெற்று மகிழ்ச்சியுடன் காட்சி அளிக்கின்றனர்! அனைத்துத் துறையினரும் இவ்வாட்சியின் அன்றாட சாதனைகளால் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர்!

இந்தியாவின் மற்ற பல்வேறு மாநிலங்களும் இங்கே நடைபெறும் தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்-களைப்போல தங்கள் தங்கள் மாநிலத்திலும் நடத்திட-வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க., மற்றும் பல எதிர்க்கட்சிகளும்கூட நடந்த சட்டமன்ற, நாடாளு-மன்றத் தேர்தல் அறிக்கைகளில் கூறியதோடு, பிரச்-சாரமும் செய்தன! தமிழ்நாட்டின் வரலாற்றில் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நாளுந்தவறாது நடத்திவரும் இவ்வாட்-சியை ஒழித்துவிட்டு, ஜெயலலிதா தலைமையில் ஆட்சி மாற்றம் வரவேண்டுமாம்! நண்பர் சோ இராமசாமி அய்யரும், குருமூர்த்தி அய்யரும், இவாளோடு சேர்ந்-துள்ள அவாள் ஏடுகளும், தொலைக்காட்சிகளும், விளம்பரந்-தேடி-களான பல கட்சி படையெடுப்பாளர்-களான சில விபீஷணர்-களும் இப்படி ஒரு கோரஸைப் பாடுகின்றனர்! சிறிது காலத்திற்குமுன் இவர்களில் சிலர் சோ உள்பட ஒரு நடிகருக்குக் கொம்பு சீவிவிட்டுப் பார்த்-தனர். ஏனோ அவாள் கணக்கு அதில் சரிவரவில்லை.

இப்போது பச்சையாகவே முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதுக்கு என்று மீண்டும் ஜெயலலிதா தலை-மையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற பல்லவியைத் தொடங்கி-விட்டனர்! காமாலைக் கண்களுக்கு எப்போதும் பார்வை பழுது-தானே! அதுபோல, எதுவுமே தமிழ்நாட்டில் சரி இல்லை-யாம்; எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லையாம்; எந்தத் தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லையாம்; நிருவாகம் தற்-போது சீர்குலைந்துவிட்டதாம்; தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால் அரசின் கஜானா காலியாகி-விடுமாம்! அதனால், அம்மா ஆட்சி வரவேண்டுமாம்!

இதைக் கேட்ட மக்கள் எப்படிச் சிரிப்பார்கள் என்பதே தெரியவில்லை. வளர்ச்சித் திட்டங்கள் எவை எவை ஜெய-லலிதா ஆட்சியில் ஏற்பட்டன; எவை எவை இவ்வாட்சியில் ரத்து செய்யப்பட்டன. புதுத்-திட்டங்கள் எதுவுமே இல்லை என்பது போன்ற கோய-பல்ஸ் பிரச்சாரம், முழுப் பூசணியை சோற்றில் மறைத்தது போன்று நடந்தேறுகிறது!

நாளும் முதல்வர் கலைஞர் விலாவாரியாக சாதனைப் பட்டியலைத் தொகுத்து மக்களிடையே இத்-தகைய விஷமி-களின் வேலை வேரூன்றி விடக்கூடாது என்ப-தற்காக எழுதியும், பேசியும் வருகிறார்களே!

தமிழக சட்டமன்றத்தில் அண்மையில் நிறை-வேறிய ஆளுநர் உரையின் மீதான தீர்மானம் _ அவ்-வுரையில் உள்ள கலைஞர் உயிர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் கான்கிரீட் வீடுகள் திட்டம் போன்ற பல திட்டங்கள், அதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் வந்தார்; ஏதோ பேசினார்; தனது குற்றச்சாற்றுகளுக்கு ஆளுந்தரப்பி-லிருந்து வரும் பதில்கள், மறுமொழி என்னவென்பதைக் கேட்க அமர்ந்திருந்தார்களா? எப்போதும் அதை அவர் கடந்த மூன்றரை ஆண்டுகாலத்தில் செய்ததே இல்லையே! இது ஊரறிந்த, உலகறிந்த உண்மையாகும்.

தணிக்கைத் துறை அதிகாரியின் குற்றச்-சாற்றுக்கு _ வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்-கப்-பட்ட 121 கோடி ரூபாயை தி.மு.க. அரசு இல-வசத் திட்டங்களுக்காக செலவழித்துவிட்டது என்பதற்குத் தெளிவான விளக்கத்தினை மறுப்-பினை _ முதல்வர் அவர்கள் அளித்-துள்-ளார்-களே தவறான தலைப்புகளும் சில ஏடு-களால் தரப்பட்டுள்ளன.

மக்கள் வளர்ச்சித் திட்டங்கள் என்று கூறும்போது, அதற்குக் குறுகிய பொருள் காணக்-கூடாது. அரசுகளைப் பொறுத்தவரை, வறுமை ஒழிப்பு, நோய் தடுப்பு என்ப-தெல்லாம் தோற்றத்-திற்கு இலவசங்களாக இருப்பினும், உண்மையில் மக்களது வாழ்வின் நீட்டிப்பு _ வளர்ச்சிக்குரிய வாய்ப்பு என்று கொள்ளவேண்டாமா? ஒரு-வருடைய செலவு மற்றொருவருடைய வரவு என்பதுதானே மிகப்பெரிய பொருளாதாரத் தத்-துவம். அம்மையார் ஜெயலலிதா ஆட்சி எப்படி இருந்தது என்பதை, எலிக்கறி சாப்பிட்ட விவசாயிகள்பற்றி கம்யூனிஸ்ட் நண்பர்கள் சட்டப்பேரவையில் கூறியதை மறந்துவிட முடியுமா?

இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாள், ஓர் இரவில் பணி நீக்கம் செய்து சிறையில் தள்ளியதை மறந்துவிட முடியுமா? பத்தாயிரம் சாலைப் பணியாளர்களின் குடும்பம் ஒரு ஆணையால் வேலை இழந்து பல குடும்-பங்கள் பிச்சை எடுத்து பட்டினிச் சாவு, தற்-கொலைக்கு ஆளான கதை எளிதில் மறக்கக்-கூடியதா? அவ்வளவு ஏன், பத்திரிகைச் சுதந்திரம் பட்டபாடு _ நக்கீரன் கோபாலை விரட்டியதை வசதியாக மறந்து-விட்டாலும், இந்து நிருபர் பெங்களூருவரை விரட்டப்பட்டு, வேட்டையாடி, விளையாடப்பட்டதை சோக்களால் எளிதில் மறந்துவிட முடியுமா?

எத்தனையோ சோகக் கதைகள், அந்த வரலாற்றில் படிந்த கறுப்புக் கறைகள். இந்த அம்மையார் ஆட்சிபற்றி அன்று வாய் கிழியப் பேசிவிட்டு, இன்று தரிசன தவங்-கிடக்கும் பல எதிர்க்கட்சிகளிடம் கேட்டாலே மிகவும் விலாவாரியாகப் பேசுவரே; அவர்கள் பேசா-விட்-டாலும், அவர்களது ஏடும், பழைய எழுத்தும் பேசுமே! தமிழ்நாட்டில் திருத்தணி தொடங்கி குமரிவரை எத்தனை வளர்ச்சித் திட்டங்கள்; சேது சமுத்திரக் கால்-வாய்த் திட்டமே வரக்-கூடாது என்று இன்று தலைகீழ் பல்டியடித்து, உச்சநீதிமன்றத்திற்குப் போய் தடுப்பணை கட்டு-வதற்குத்தான் அம்மா ஆட்சி மீண்டும் வரவேண்டுமென்று சோவும் ஆசைப்படுகிறார் போலும்! பார்ப்பன ஆட்சி, மீண்டும் மநுமாந்-தாதா ஆட்சி _ திராவிட போர்வையைப் பயன்படுத்தி இந்துத்துவா ஆட்சியை அமைக்கத் துடிக்கிறது இந்தப் பூணூல் கூட்டம்!

காரணம், வெளிப்படை! கலைஞர் ஆட்சி மானமிகு சுயமரியாதைக்காரர் ஆட்சியாகவே நடக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்; அருந்ததியருக்கு உள்பட, இஸ்லாமியர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு, தமிழ்ப் புத்தாண்டு ஆணை, தமிழ் செம்மொழி ஆனது; தமிழ் _ திராவிட இனம் தனது இழந்த அடை-யாளத்தைப் பெறுவதைக் கண்டு இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், தமிழர்கள் ஏமாளிகள் அல்லர்; ஒரு-போதும் நிறைவேறாது உங்கள் திட்டமும், ஆசையும்!

No comments:

Post a Comment