Search This Blog

Saturday, November 20, 2010

நீதிபதி குறித்து ஜெயலலிதா சொன்ன பொய்!

நேர்மையே உயிர் மூச்சு என வாழும் அப்பழுக்கற்ற நீதியரசர் அவர். அவரது சகோதரரை நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்க நேரிட்டது.

""நலந்தானே.. அண்ணன் அவர் கள் எப்படி இருக்கிறார்கள்?''’என்று விசாரித்தோம்.

கேட்கக் கூடாத கேள்வியை நாம் கேட்டுவிட்டது போல் அவர் முகம் மாறியது.

""அப்போது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சம் பந்தப்பட்டவர்களை விசாரிக்கும் கோர்ட்டில் ஜட்ஜாக இருந்தார் அண்ணன். குடும்ப விஷயமாக அவரைப் பார்க்கப் போயிருந்த நான்,  கோர்ட் முடிந்து வரும் வரை அவரது காரில்  காத்திருந் தேன். என்னை ‘க்ராஸ்’ செய்து ஒரு பஸ் போனது. அதில் ஜட்ஜுகள் நிறையப் பேர் இருந்தார்கள். காருக்கு வந்த அண்ணன், ‘"என்ன தம்பி இப்படிப் பண்ணிட்டீங்க? அந்த பஸ்ஸுல போறதுல என்னைவிட சீனியர் ஜட்ஜஸெல்லாம் இருக்காங்க. ஸ்பெஷல் கோர்ட்டுங்குறதுனால எனக்கு காரெல்லாம் கொடுத்திருக்காங்க. காருல காத்திருக்கிறது என் தம்பின்னு அவங்களுக்குத் தெரியுமா? யாரோ ஒருத்தரு எதுக்காகவோ என்னைப்  பார்க்க வந்திருக்காங்கன்னு அவங்க தப்பா நெனச்சாக்கூட அது எனக்கு தேவையில்லாத களங்கம்தானே. பால்ல ஒரு துளி விஷம் கலந்தாலும் அது விஷம்தானே. இனிமே என்னைப் பார்க்கிறதுனா வீட்டுக்குத்தான் வரணும்'னு கோபப்பட்டாரு. இதைக் கேட்ட எனக்கு ஓடிட்டிருந்த காருல இருந்து கீழே குதிச்சிடலாம் போல இருந்துச்சு. அந்த அளவுக்கு சுத்தமா வாழ்ந்துக்கிட்டிருக்கிற அண்ணன் வருத்தப்படும்படியா ஒருத்தங்க பேசியிருக்காங்க. அதான் அண்ணனைப் பத்தி நீங்க கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆயிருச்சு. தப்பா எடுத்துக்கா தீங்க...''’ என்றவர் ஒரு நாளிதழை விரித்தார்.  அதில் மதுரை ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா ஆற்றிய நீ..ண்..ட... உரை. அதைக் காட்டிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

""ஆமா.. அவங்க அப்படி பொய் பொய்யா பேசியிருக்காங்க. அண்ணன் என்னமோ காப்பாத்துங்க .. காப்பாத்துங்கன்னு நீதிமன்ற வளாகத்துல அழுது கதறுனதாவும், பாத்ரூம்ல வழுக்கி விழுந்ததுல தலைக்காயம் ஏற்பட்டதா... விசாரணை ஆணையத்துக்கிட்ட பொய்யா சொன்னதாவும், அப்படி பொய் சொல்லுற அளவுக்கு அரசாங்கம் அண்ணனை மிரட்டி, கட்டாயப்படுத்திருக்காங்கன்னு உண்மைக்கு மாறா பேசி யிருக்காங்க. இத்தனைக்கும் நடந்தது என்னன்னு இத விசாரிக்க வந்த நீதிபதி சொன்னது அப்ப பேப்பர்லயெல்லாம் வந்துச்சு. அந்தச் சூழ்நிலையிலும் "போலீஸைத் தாக்காதீங்க. அவங்க நம்மளப் பாதுகாக்க வந்தவங்கதான்'னு அண்ணன் கேட்டுக் கொண்டது செய்தியா வந்துச்சு. இவங்க என்னடான்னா, "நீதிபதிகளே அஞ்சுறாங்க.. நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லை.. எனக்கும் பாதுகாப்பில்லை.. மக்களுக்கும் பாதுகாப்பில்லை'ன்னு அவங்க அரசியல் பண்ணுறதுக்கு தேவையில்லாம நீதிபதிகளைப் பத்தி பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புறாங்க. அண்ணன்கிட்ட இதப் பத்தி நெறய பேரு கேட்டப்ப.. ‘"அவங்களுக்கு துணிச்சல் இருந்தா என் பேரைச் சொல்லி இந்த நீதிபதிதான் மிரட்டப்பட்டு விசாரணை ஆணையத்துக்கிட்ட பொய் சொன்னாருன்னு சொல்ல முடியுமா? உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? அவங்க எவ்வளவு பெரிய பயந்தாங் கொள்ளின்னு.. அவங்க கேஸை நடத்துன எனக்குத்தானே தெரியும்'னு சிரிச்சிருக்காரு. ஆனாலும், ஒரு தலைவியா இருந்துக்கிட்டு இப்படியா பொய் சொல்லுறது'' -வேதனையோடு கண்கலங்கினார் நீதியரசரின் தம்பி.

"நானே அஞ்சா நெஞ்சி...'’ என அதே மதுரை ஆர்ப்பாட் டத்தில் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஜெயலலிதா,  அந்த நீதிபதி குறித்து தான் பேசியதற்கான ஆதாரங்களை வெளியிட்டு தன் துணிச்சலை நிரூபிக்க வேண்டிய சவால் இது.

-சி.என்.இராமகிருஷ்ணன்
நக்கீரன் 

No comments:

Post a Comment