Search This Blog

Thursday, November 18, 2010

சொன்னதைச் செய்யும் அரசு-தி.மு.க

மானமிகு சுயமரியாதைக்காரரான நமது முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக 18 ஆண்டுகள் இருந்து வருகிறார் என்பதற்கான குறிப்பும் அத்துடன் இணைந்துள்ளது.

இதற்காக நன்றியுள்ள அத்துணை மக்களும், அவரையும், அவரது ஆட்சியையும் பாராட்டி வாழ்த்து-வார்கள் என்பது திண்ணம்.

சொன்னதைச் செய்யும் அரசு

சொன்னதைச் செய்வதும், செய்வதையே சொல்-வதும்தான் தி.மு.க என்பதை, தேர்தல் வாக்குறுதிகளை அளவாகக் கொண்டு பார்த்தால், எவருக்கும் புரியும்.

அநேகமாக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் இந்த 4 ஆண்டுகளிலேயே அவர்கள் செயல்வடிவம் கொள்ளச் செய்து, சாதித்துக்காட்டி, சரித்திரம் படைத்து வருகிறார்கள்!

சொன்னதைச் செய்ததோடு, சொல்லாததையும் சேர்த்துச் செய்து, மக்கள் நலம் வளர்த்து வரும் மாடல் _ எடுத்துக்காட்டின் ஆட்சியாக தி.மு.க ஆட்சி நாளும் உயர்ந்து நிற்கிறது.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி

50 ரூபாய்க்கு பலசரக்குப் பொருள்கள்

108 என்ற வாகனம் பறந்தோடி வந்து மக்களை உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து மீட்கும் கலைஞர் மருத்துவ பாதுகாப்புத் திட்டம்

குடிசை வீடுகளே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் மட்டுமல்ல!

சமூகப்புரட்சி சட்டங்கள்

இவைகளுடன் சமூகப்புரட்சி சட்டங்களாக,

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம்!

பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள்

தமிழ் ஆண்டின் தொடக்கம் தைமுதல்நாளே என்று கூறி, பண்பாட்டுப் பெருமை மீட்பு!

எம்மொழி தமிழ்மொழி செம்மொழி என்று

மத்திய அரசை அறிவிக்கச் செய்த சாதனை!

மேலும் சுமார் 430 கோடி ரூபாய் செலவில், சென்-னைக்கு பெருமை சேர்க்கும் தமிழ்நாடு தலைமைச் செயலகம், சட்டமன்ற வளாகம் என்ற வியத்தகு விரைவு சாதனை!

சுமார் 200 கோடி ரூபாய் செலவில் சென்னை கோட்டூர்புரத்தில், அறிஞர் அண்ணா நூற்றாண்டு பொது நூலகம் உலகத்தவர் வியக்கும் வண்ணம் உருவாகி, வரும் ஜூன் மாதம் திறக்கப்படவிருக்கும்_அறிவை விரிவு செய்து அகண்டமாக்கும் பகுத்தறிவுப் பண்ணை!

நாடெல்லாம் நாளும் பாயும் கல்வி நீரோடைகள்,

ஊரெல்லாம் உருவாகும் புதிய தொழிற்சாலைகள்!

இப்படி எழுதிட மாளாத எண்ணற்ற சாதனைகள்!

87 ஆம் ஆண்டில் நுழையும் இளைஞர்

86 வயது நிறைவு பெற்று 87 ஆம் ஆண்டில் சில வாரங்களில் நுழையப்போகும் முதிய இளைஞர்தம் இணையற்ற பொற்கால ஆட்சியின் பொலிவுறு பொன்னேடுகள்!

தனது கோபாலபுர இல்லத்தை தனது காலத்திலேயே பொதுமக்களுக்குப் பயன்படும் மருத்துவமனையாக் கிடும் ஏழைக்கிரங்கும் ஏற்றமிகு சாதனை!

எதிர்கட்சியினரையும், மாற்றுக் கருத்துடையோரை யும்கூட, மதித்து, பெருந்தன்மையோடு பேசி, அண்ணா வின் இதயம் இரவலாக இவரிடம் வந்தது என்பது வெறும் உவமை அல்ல, உண்மை என்பதை நாளும் நிரூபித்து வரும் நிகழ்வுகள்.

இத்தியாதி! இத்தியாதி!!

கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

தந்தை பெரியார் குருகுலத்தில் பயின்று படித்த பாடங்களை இன்று பலருக்கும் பயன்படும் பண்புள்ள சாதனைகளாக்கி, இவைகளுக்கெல்லாம் மகுடம் போல, கோவையில் ஜூன் 23-_27 தேதிகளில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு.

புதியதோர் வரலாற்றினை நாளும் எழுதி இணைத் துக்கொண்டு, ஒப்புவமை சொல்ல இயலாத உழைப்பின் உருவம்,

அய்யாவின் அரும்சீடர்,

அண்ணாவின் அருமைத்தம்பி,

லட்சோப லட்ச கழகக் குடும்பங்களின் இதயமாம்

நம் முதல்வர் கலைஞரின் சாதனை சரித்திரம்

1 comment:

  1. தமிழ் ஈழம் தவிர மற்ற அனைத்திலும் தேர்வு தான்.தமிழ் ஈழத்திற்குப் புது டில்லிதான் காரணம் என்பதையும், தம்மால் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்பதையும், தமிழகத்துச் சுயநல அரசியல் எதிரி ராஜபக்சேவும்,புது டில்லியும் என்பதைச் சரியாக எடுத்துவைக்காமல் தன் மீது பாய்வதிலேயே தமிழரைப் பிரித்து வலையில் விழுந்தார்கள் என்பதையும் நன்கு விளக்கிட வேண்டும்.

    ReplyDelete