Search This Blog

Saturday, November 27, 2010

அ.தி.மு.க.வின் அதிகார மையமான சசிகலா!


                          திருச்சி என்றால் திருப்பு முனை என்பார்கள் அரசியல்வாதிகள். திருச்சிசங்கம் ஓட்டலில் நடந்த குடும்ப பஞ்சாயத்தில் நல்ல திருப்பம் ஏற்படும்என்று நம்புகிறாராம் அ.தி.மு.க.வின் அதிகார மையமான சசிகலா! புதியநிர்வாகிகள் நியமனத்துக்கு பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் இடையிலானபிரச்சினை மேலும் பெரிதாகிவிட்ட நிலையில் இந்த சமாதான பேச்சுவார்த்தையைநடத்தியிருக்கிறார் சசிகலா. 2 மணி நேரத்துக்கு மேலாக திவாகர், மகாதேவன், இளவரசி, என்ஜினியர் கலியபெருமாள், டாக்டர் வெங்கடேஷின் பெற்றோர் சுந்தரவதனம்- சந்தானலட்சுமி என குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களைஅழைத்து தனித்தனியாக பேசினாராம் சசிகலா. இந்த சமரச கூட்டத்தில் என்னபேசப்பட்டது என்பது பற்றி விவரம் அறிந்த நெருக்கமானவர்களிடம் கேட்டோம்.

""திருச்சியில் நடந்த மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனரும், தியானேஸ்வரன் தம்பியுமான பொன்னுசாமி மகள் நர்மதா திருமணத்தில் இளவரசியும்,அமைச்சர் நேருவும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித் தார்கள்னு நக்கீரனில்எழுதியிருந்தீங்களே... அந்த திருமண நிகழ்ச்சிக்கு பிறகு சங்கம் ஓட்டலுக்குஎல்லா குடும்ப உறுப்பினர் களையும் வரச் சொல்லியிருந்தாங்க சின்னம்மா.பொன்னுசாமி மகளை கைப் பிடித்த மாப்பிள்ளை ராஜபிரபு இளவரசியின் இரண்டாவதுமருமகன் ராஜராஜனின் தம்பி. மணமக்கள் இரண்டு பேருடைய குடும்பமும்நெருக்கமான உறவுகள் என்பதால் மன்னார்குடி குடும்பத்தில் இருந்து எல்லோரும் வந்திருந்தாங்க. டி.டி.வி.தினகரனும், அவர் மனைவி அனுராதாவும் வரலை.திருமணத்துக்கு முதல் நாள் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுநாகப்பட்டினம் போய்விட்டார் டாக்டர் வெங்கடேஷ். அதனால் சங்கம் ஓட்டல்கூட்டத்தில் டாக்டரும், டி.டி.வி.யும் மட்டும் மிஸ்ஸிங்'' என்றுமுன்னோட்டம் கொடுத்தவர்கள் சங்கத்தில் நடந்த சமரசம் பற்றியும்விளக்கினார்கள்.

""திவாகர்தான் அன்னைக்கு சின்னம்மாகிட்ட கடுமையாக சண்டை போட்டவர்.கட்சியினர் யாரும் திவாகருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஜெ.உத்தரவு போட்டபிறகும் பழைய தஞ்சாவூர் ஜில்லா ஏரியாவில் அவர் அனுமதிஇல்லாமல் எதுவும் செய்யமாட்டார்கள் கட்சிக்காரர்கள். ஒரு கட்டத்தில்கார்டனில் செல்வாக்கு பெற்றவராக டி.வி.மகாதேவன் வலம் வந்தபோதும் தன்சித்தப்பா திவாகருக்கு கட்டுப்பட்டே நடந்தார். அப்படி தஞ்சை, திருவாரூர்,நாகை மாவட்டங்களில் கட்சிக்காரர்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தவருக்குநெருக்கடி கொடுக்கும் விதமாக தஞ்சை மண்டல செயலாளராக ஓ.பி.எஸ். நியமிக்கப்பட்டபோதே கடும் அதிருப்தி அடைந்தார் திவாகர். இப்போது தஞ்சை உள்ளிட்ட 4மாவட்ட பொறுப்பாளராக டாக்டர் வெங்கடேஷை நியமித்திருப்பதில் மேலும்அதிருப்தி யில் இருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில்தான் அக்கா சசிகலாவிடம், "அந்தம்மா என்னநினைக்கிறாங்க. குடும்பத்துக்குள் கொம்பு சீவி விடும் வேலையில்இறங்கியிருக்காங்களா?. இதையெல்லாம் நீ வேடிக்கை பார்த்துக்கிட்டுஇருக்கியா? சீசனுக்கு ஒருத்தரா குடும்பத்தில் இருந்து தூக்கி விடற மாதிரிதூக்கி கீழே வீசுது. ஒட்டுமொத்தமாக குடும்பத்தில் யாருக் கும் எந்தபொறுப்பும் இல்லாமல் விட்டுடுங்க. பொறுப்பு இல்லாமலேயே கட்சிக்கு வேலைபார்க்கிறோம்'’என்று பொங்கித் தள்ளிவிட்டார். தம்பியின் கோபத்தை ஏற்கனவேஅறிந்திருந்த சின்னம்மா அவரை கன்வின்ஸ் செய்தார்.

தனது ஆதரவாளரான ஓ.எஸ்.மணியன் எம்.பி. மீது கொடூரத் தாக்குதல் நடத்தியபழனியப்பன் மீது உடனடியாக எந்த ஆக்ஷனும் எடுக்காமல் இருப்பதிலும் கடும்கோபத்தில் இருந்தார் திவாகர். இப்படியே விட்டீங்கன்னா கட்சிக்காரன் யாரும்கட்டுப்பாட்டில் இருக்கமாட்டான் என்று கடுப்படித்த தம்பி திவாகரின்கோபத்தை தணிக்க உடனடியாக பழனியப்பனை கட்சியில் இருந்து நீக்குவதற்கானஏற்பாடு களை செய்தார் சின்னம்மா. நாகையில் நடந்த இளைஞர் பாசறைகூட்டத்தினால் திருமணத்திற்கும், சங்கம் ஓட்டல் சமரச கூட்டத்திற்கும்வரமுடியாமல் போன டாக்டர் வெங்கடேஷ் சார்பில் அவரின் பெற்றோர் அங்கேஇருந்தார்கள். சித்தப்பா திவாகருடனும், அண்ணன் மகாதேவனுடனும் சுமுகமாகஇருக்க வேண்டும் என்கிற டாக்டரின் விருப்பத்தை சொல்லி அவர் யாருக்கும்எதிரியாக இருக்க விரும்பவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்'' என்று விரிவாக சொல்லி முடித்தார்கள் குடும்பத்துக்கு நெருக்கமானவர் கள்.



அதே நேரத்தில் இரண்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாமல்திரும்பியிருக்கிறார் சசிகலா. ""இளவரசியின் சம்பந்தியான என்ஜினியர்கலியபெருமாளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருவது சரியில்லை. அவர்எதுக்கெடுத்தாலும் நேரடியாக அம்மாவுடன் பேசிக்கொள்கிறார். அது உங்களுக்கேஅபாயமாக முடியும்'' என்று திவாகர், மகாதேவன், வெங்கடேஷின் பெற்றோர் எனஅத்தனை பேரும் ஒரே குரலில் சொல்லி யிருக்கிறார்கள். கலியபெரு மாளும்இவர்களோடு சமா தானமாக போக விருப்பம் காண் பிக்காததால் தொடர்கிறதுபனிப்போர். அதே போல டாக்டர் வெங்கடேஷ்- டி.டி.வி. தினகரன் இடையிலானபிரச்சினை உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. தன்னுடைய சொந்த மைத்துனராகஇருந்தாலும் வெங்கடேஷை தன்னுடைய முக்கிய எதிரியாக பார்க்கதொடங்கியிருக்கிறாராம் டி.டி.வி.தினகரன். டாக்டர் வெங்கடேஷுக்கு எதிரானசெய்திகளைத் தொடர்ந்து பத்திரிகைகள் மூலம் பரப்பி வரும் வேலையில்டி.டி.வி.தினகரன் நேரடி யாக இறங்கியிருப்பதாக சொல்லும் வெங்கடேஷ் தரப்புஅதற்கான ஆதாரங்களையும் திரட்டி யிருக்கிறது. இது பற்றியும் சசிகலாவிடம்சொல்லப்பட்டதாம்.


விரைவில் இந்த மோதலில் ஒரு முடிவு வந்துவிடும் என்கிறார்கள் இரண்டுதரப்புக்கும் நெருக்கமானவர்கள். தேர்தலுக்கு முன்பு குடும்பத்தில் சமரசம்உண்டாக்கிவிடவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் சசிகலா.

-ச.கார்த்திகைச்செல்வன்
படங்கள்: மகி

1 comment:

  1. thayavu seithu vaarisu arasiyalnu d.m.k ve kura sollatheenga.

    ReplyDelete