Search This Blog

Tuesday, July 26, 2011

கோவை தி.மு.க. பொதுக்குழுவின் 25 தீர்மானங்கள்

ஈழத்தமிழர் பிரச்சினை, கச்சத்தீவு மீட்பு, சமச்சீர் கல்வித்திட்டம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் மீது கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் 25 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் : 1

வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு

தமிழகச் சட்டப் பேரவைக்கான 2011 பொதுத் தேர்தலில் பதிவான 3 கோடியே 67 இலட்சத்து 53 ஆயிரத்து 114 வாக்குகளில், 39.44 விழுக்காடு வாக்குகளை அதாவது 1 கோடியே 45 லட்சத்து 29 ஆயிரத்து 501 வாக்குகளைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணி பெற்றுள்ளது.

கழகக் கூட்டணியை 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எதிர்த்தவர்கள் பல பொய்யுரைகளைப் பரப்பிய போதிலும், தமிழ்ப் பெருங்குடி மக்களில் ஏறக்குறைய ஒன்றரை கோடி மக்கள் நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு, மிகுந்த நம்பிக்கையோடு, உறுதியோடு வாக்களித்துள் ளார்கள். கழகக் கூட்டணிக்கு வாக்களித்த அனை வருக்கும் இப்பொதுக்குழு தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் :- 2

திராவிட இனத் தலைவர் கலைஞருக்குப் பாராட்டு

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போற்றிய நெறிகளைக் கடைப்பிடித்து திராவிட இயக்கத்தை மக்கள் இயக்கமாக வளர்த்து, பாதுகாத்து இயக்கத்தின் கொள்கைகள் வெற்றிபெற 88 அகவையிலும் சலியாத உழைப்பினை நல்கித் தமிழ் சமுதாயத்துக்குத் தொண்டு புரிந்து வருபவர் கழகத் தலைவர் கலைஞர்.

அறிவாற்றல் மிகுந்த கலைஞரின் வாழ்வு - வாழ்க்கை இலட்சியம் - ஆர்வம், உழைப்பு, முயற்சி, அறப்போராட்டம், தியாகம், கலைத்துறைப் பணி, சட்டமன்றப் பணி, முதலமைச்சராக ஆற்றிய அருந்தொண்டு, நிறைவேற்றியுள்ள சாதனைகள் எல்லாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோளை அடைவதற்காகவே, கலைஞரால் மேற்கொள்ளப்பட்டவை என்பதை நாடறியும்.

வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சி பிறக்கவும், ஆரியத்தின் சூதுமதியால் தாழ்வுற்ற தமிழ் இனம் தலை நிமிரவும், மக்களை நாளும் வாட்டும் வறுமையையும் ஏழ்மையையும் விரட்டவும், பாடுபடும் பாட்டாளிகளையே வாட்டும் பசியையும் பட்டினியையும் இல்லாமலே ஒழித்திடவும், முதலமைச்சர் பொறுப்பேற்ற போதெல்லாம் ஒல்லும் வகையில் திட்டமிட்டுச் செயலாற்றி வெற்றி பெற்றவர் தலைவர் கலைஞர்.

சமூகநீதிக் கொள்கையான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் வெற்றிபெற திட்டமிட்டுச், சட்டங்களை இயற்றுவதற்குக் கலைஞர் ஆற்றிய அளப்பரிய பணிகள் வரலாற்றின் அழிக்க முடியாத பதிவுகள் ஆகும். இப்பணிகள் ஏதுவாக சமூக நீதி காத்த கலைஞர் எனப் போற்றப்படுபவர் அவர்.

அனைத்துச் சாதிப் பிரிவினரும் ஒன்றாகக் கூடி வாழும் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நூற்றுக்கும் மேலாக தமிழகம் எங்கும் அமைத்த மையால், சமத்துவப் பெரியார் எனவும் அழைக்கப் படுபவர் கலைஞர்.

இவ்வகை அரிய பெருமைமிகு சாதனைகளைப் படைத்த ஒரு தலைவருக்குத் தமிழ்நாட்டு மக்களும், கழகத் தொண்டர்களும் ஆண்டு தோறும் பிறந்த நாள் விழா எடுத்து மகிழ்கின்றனர். கலைஞரின் தொண்டும், வாழ்வும் தமிழர் வாழ்வோடு இணைந்ததாகும்.

இவ்வுண்மையைத் தமிழ் மண்ணில் பிறந்தவர்களும், தமிழ்ப்பற்றாளர்களும் நன்கு அறிந்துள்ளனர். கலைஞரின் பன்முகப் படைப்பாற்றலால் தமிழ் சிறப்புற்றதுடன், கலைஞரின் தொடர் முயற்சியால்; தமிழ் மொழி செம்மொழி என்பது ஏற்கப்பட்டுள்ளது. இவை யெல்லாம் தேர்தல் அரசியலுக்கு அப்பாலும் கலைஞரின் தனித்த ஆளு மையைப் பறை சாற்றும். இ

ந்தியத் துணைக் கண்டத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், திராவிட இயக்கத்திற்குத் தனித் தகுதியுண்டு. பிறவி இழிவைக் கற்பித்துச் சுமத்தி, இனமான உணர்வை முறியடித்து திராவிட மக்களைத் தாழ்த்தி ஆதிக்கப் பிறவிகள் தமிழ்நாட்டில் கொட்டம் அடித்தபோது, திராவிட இனம் இழந்த சமூக உரிமைகளை மீட்டெடுப் பதற்கு நீதிக் கட்சியும் அதன் ஒப்பற்ற தலைவர் களான டாக்டர் நடேசன், தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் முதலானோரும் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை.

நீதிக் கட்சி திராவிடர்க் கழகமாக முகிழ்த்து திராவிட முன்னேற்றக் கழகமாக மலர்ந்த போது, தந்தை பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், பேராசிரியரும் எண் ணற்றத் தலைவர்களும், தொண்டர்களும் தமிழ் மொழி இன உரிமைகள் காத்திடக் களங்கள் பல கண்டு தியாகங்கள் புரிந்துள்ளனர்.

இவ்வகை அரிய பெரிய தமிழ் இன உரிமை மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தை ஒரு தேர்தல் தோல்வியை வைத்து முழுப் பூசணிக்காயை இலை சோற்றில் மறைக்க முயற்சிப்பது போல, நமது இனப் பகைவர்களும், ஆதிக்க சாதியினரின் ஊடக இயலாளர்களும் வீழ்த்திவிடலாம் என்று நினைப்பது கனவேயாகும்.

நமது திராவிட இயக்கப் பணிகள் என்றும்போல் தலைவர் கலைஞர் தலைமையில் தொடர்கிறது. கலைஞரின் பிறந்த நாள் என்பது பகுத்தறிவையும், தமிழ் உணர்வையும் வளர்த்தெடுக்கும் நாளாகும். கலைஞர் தனது 88வது பிறந்த நாளைக் கொண் டாட இசையாவிட்டாலும், அவர் பிறந்த நாள் என்பது திராவிட இன எழுச்சியின் அடையாள மாகவும், தமிழரின் வெற்றி விழாவாகவும் தொடர்ந்து போற்றப்படும் என அறிவிப்பதில் தி.மு. கழகம் பெருமிதம் கொள்கிறது. திராவிட இயக்கத்தின் தனிப் பெரும் தலைவரான கலைஞரின் தொண்டு தொடரவும், தமிழ் நாட்டிற்குத் தொடர்ந்து வழிகாட்டவும் அவர் பல்லாண்டு காலம் நலத்துடன் மகிழ்ந்து வாழ விரும்பி இப்பொதுக்குழு, தன்னுடைய அன் பார்ந்த வாழ்த்தினையும், விழைவினையும் தெரிவித்து மகிழ்கிறது.

தீர்மானம். 3

அ.தி.மு.க. ஆட்சியாளரின் அடக்குமுறை தர்பார்

1975ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நெருக்கடி காலக் கொடுமை தமிழகத்தில் மீண்டும் வந்து சூழ்ந்து விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு; இன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஆணைக்கேற்ப ஏவி விடப்படுகின்ற - காவல் துறையினரின் கெடுபிடிகளையும், பழி வாங்கும் விதத்தில் தொடரப்படும் பொய் வழக்குகளையும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த செயல் வீரர்களும் மற்றும் பல்வேறு அணியினரும் சந்திக்க வேண்டிய நிலைமை நாட்டில் உருவாகியிருப்பதைக் கண் கூடாகக் காண முடிகிறது. 2006ஆம் ஆண்டு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில், பெரும் வெற்றி பெற்ற தி.மு.கழகத்தின் ஆட்சியில் எதிர்க்கட்சி களைப் பழி வாங்கும் நடவடிக்கை எள்ளளவும் இல்லை என்பதை நாடு அறியும்.

ஆனால் இன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் அடுக்கடுக்காக மக்கள் பிரச்சினைகள் இருக்கும்போது-அவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, ஆளுங் கட்சியினர் எதிர்க்கட்சிகளைப் பழி வாங்கு வதையே முக்கியப் பணியாகக் கொண்டு பொய் வழக்குகளைப் புனைந்தும், - போலீஸ் படையைக் கொண்டு மிரட்டியும் - கழகத்தை வலுவிழக்கச் செய்யலாம் எனக் கனவு கண்டு - அதனை நிறைவேற்றிக் கொள்ள முற்படுவதை எத்தனை நாளைக்குத்தான் பொறுத்துக் கொண்டிருப்பது என்பதால்,

அநியாயமாகவும், உண்மை ஆதார மற்ற நிலையிலும் இந்த அரசு ஏவிடும் ஜன நாயகத்திற்கு விரோதமானதும், சட்டத்திற்கு முரணானதுமான அடக்குமுறைக் கணைகளைக் கூர் மழுங்கச் செய்திட, தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக ஒன்றுபட்டுக் கண்டனம் தெரிவிக்க முன் வர வேண்டுமென்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்வதோடு-இந்த அராஜக முறையை எதிர்ப்பதில் இந்த இயக்கம் உறுதியோடு நிற்கும் என்பதையும் இப்பொதுக் குழு தெரிவித்துக் கொள்வதோடு,

அ.தி.மு.க. அரசின் அடக்குமுறை தர்பார், அராஜக நடவடிக்கைகள், பழி வாங்கும் நோக்கோடு தொடுக்கும் பொய் வழக்குகள் போன்றவற்றைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய அளவில், தி.மு.கழகம் அறப்போர் நடத்துவ தென்றும்; ஆகஸ்ட் திங்கள் முதல் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் அந்தந்த மாவட் டங்களின் சார்பில் முதற்கட்டமாக ஆர்ப்பாட்ட அறப்போரினை நடத்துவது என்று கழகத் தலைமை அறிவித்துள்ளவாறு நடத்துவதென்றும் இப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 4 இலங்கைத் தமிழர் பிரச்சினை

இலங்கை தமிழர்களுடைய பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் தி.மு.கழகம்தான். இலங்கையில் வாழக்கூடிய ஈழத் தமிழர்களின் குடியுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், 1956ஆம் ஆண்டு முதலே தொடங்கி ஈழத்தந்தை செல்வா அவர்கள் ஈழத் தமிழர் கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்துப் போராடத் துவங்கினார்.

ஈழத்தமிழர்களுடைய உரிமைகளுக்காக ஈழத்தந்தை செல்வா நடத்திய போராட்டங்கள் அனைத்தும் பயனற்றுப் போன நிலை யில், வட்டக்கோட்டையில் ஈழத் தந்தை செல்வா தலைமையில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர், தனி ஈழம் ஒன்றுதான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று இறுதியாக முடிவு செய்தனர்.

அந்தக் காலகட்டத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத் தந்தை செல்வா அவர்களின் கோரிக்கைக்குத் துணிவுடன் துணை நின்றது. பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்நாளிலும் - அவரது மறைவுக்குப் பின்னும் இலங்கைத் தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கக் கூடியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களே என்பதை இப்பொதுக்குழு பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட மாவட்ட, மாநில மாநாடுகளிலும், தொடர்ந்து நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களிலும், தனி ஈழக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசியும், தீர்மானங்கள் பல நிறைவேற்றியதும்,

அந்தக் கோரிக்கைக்கான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தமிழகத்தில் சிறை சென்றதும், தலைவரும் - பொதுச்செயலாளரும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும்.

1956ஆம் ஆண்டு முதல் சிங்கள அரசின் துணையோடு சிங்கள வெறியர்களும், காவலர்களும், இராணுவத்தினரும் இந்திய வம்சாவழி தமிழர்களையும், இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியில் வாழக்கூடிய ஈழத் தமிழர்களையும், தொடர்ந்து திட்டமிட்டுக் கொன்று குவித்தனர். அவர்களுடைய சொத்துக்கள், உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அனாதைகளாக்கப் பட்டனர். ஈழத் தமிழர்களின் கலாச்சாரச் சின்னமாக விளங்கிய புகழ்பெற்ற யாழ் நூல் நிலையம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

தமிழ்ப் பெண்கள் ஈவிரக்கமின்றி சிங்கள வெறியர்களாலும், காவல் துறையினராலும், இராணுவத்தினராலும் மூர்க்கத்தனமாகவும், மிருகத்தனமாகவும் கற்பழிக்கப்பட்டனர். வெளிக்கடைச் சிறையில் அடைபட்டிருந்த தமிழ் வீரர்கள் அதுகாறும் மனித சமுதாயம் கண்டிராத அளவிற்குக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டனர்.

சிங்கள அரசு, இலங்கைத் தமிழர்களை ஒழித்திட ஒரு இனப்படுகொலையை திட்டமிட்டு நடத்தியது. இந்தத் துயர நிகழ்வுகளை அறிந்த தலைவர் கலைஞர் எப்படியாவது உலகச் சமுதாயத்தின் கவனத் திற்கு இதைக் கொண்டு வந்து இந்த இனப்படுகொலையை நிறுத்திட வேண்டுமெனக் கருதினார்.

அந்த ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் ஒரு கோடி தமிழர்களின் கையொப்பங்களைப் பெற்று, 105 வால்யூம் களாகத் தொகுத்து, தலைவர் கலைஞரின் விரிவான, விளக்கமான கடிதத்தோடு, அய்க்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு 1983ஆம் ஆண்டு அனுப்பி வைத்தார். இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை இனப் படுகொலையை சர்வதேச சமுதாயத்தினுடைய கவனத்திற்கு, அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் கொண்டு சென்றார் என்பது எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வரலாற்றுப் பதிவாகும். 1976 ஜனவரி 31ஆம் நாள் தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டது.

ஏன் அப்போது ஆட்சி கலைக்கப்பட்டது என்பதற் கான காரணங்களை அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி கூறும்போது, முக்கிய குற்றச்சாட்டாக அவர் எடுத்துக்காட்டியது, தி.மு.க. அரசு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் செயல்படுவது, இந்திய நாட்டின் வெளியுறவு கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். எனவேதான் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பதாகும்.

அவர் 15-2-1976 அன்று சென்னை மெரீனா கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவ்வாறு குறிப்பிட்டார். அமைதிப் படை என்ற பெயரில், இலங்கைக்குச் சென்ற இந்திய ராணுவம், அங்கு அமைதிக்கான ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் ஈழத் தமிழரைப் பெரும் அழிவிற்கு ஆளாக்கிவிட்டுத் திரும்பியபோது அன்றைய தமிழகத் தின் முதல் வராக இருந்த தலைவர் கலைஞர், எம் இனமக்கள் பல்லாயிரக் கணக்கானவர்களை அழித்துவிட்டுத் திரும்புகின்ற இந்திய ராணுவத்தை வரவேற்கமாட்டேன் என்று சட்டமன்றத் திலேயே அறிவித்தார். இதன் காரணமாக 1991-ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி கலைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர் களை யெல்லாம் அழைத்து தனிஈழக் கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்பதற்காக, டெசோ என்ற அமைப்பை உரு வாக்கி, தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு எழுச்சி மிக்க பேரணி களை நடத்திய பின்னர், மதுரையில் மாபெரும் மாநாடு ஒன்றை 4-5-1986 அன்று கலைஞர் நடத்தினார். அந்த மாநாட்டில் தனி ஈழத்திற்கு ஆதரவாக அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி தனி ஈழத்தின் அவசியத்தினை இந்தியத் தலைவர்கள் உணரும்படிச் செய்தார்.

தலைவர் கலைஞரின் இத்தகைய முயற்சிகளுக்குப் பின்னரும், தனி ஈழம் கோரிப் போராடிய குழுக்களுக்கு இடையே நிலவிய எதிரும் புதிருமான மாறுபாட்டு நிலைமைகளால், தனி ஈழம் உருவாகும் வாய்ப்பு தடைபட்டது. இந்தச் சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்ட சிங்கள இனவெறி அரசின் அதிபர் ராஜபக்ஷே தமிழ் மக்களை ராணுவ பலத்தால் முற்றிலும் அடக்கி, தமிழ்ஈழம் என்ற நோக்கத்தையே அழித்தொழிக் கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இந்தக் காலகட்டத்தில்தான் தனிஈழம் கேட்டுப் போராடக்கூடிய போராளிக் குழுக்களையும், அவர்களின் சிந்தனைப் போக்குகளையும் அதிபர் ராஜபக்ஷேயின் இனவெறிப் போக்கையும் திட்டத்தையும் தமிழ் இனத்தை அழிக்கத் தயாராகும் ஆயத்தப் பணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்ட தலைவர் கலைஞர், தமிழ் இனத்தை ஒட்டுமொத்த அழிவிலிருந்து காப்பாற் றும் முயற்சியாகவும், இடைக்கால ஏற்பாடாகவும் சிங்களவர்களுக்கு சரிநிகர் சமமான உரிமைகள் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என இந்திய அரசின் மூலம் இலங்கை அரசை வலியுறுத்தினார்.

தனிஈழம்தான் ஒரே இலக்கு எனினும், தமிழ் மக்கள் அழிக்கப்படும் கடும் நிலைமைகளைச் சமாளிக்கவும் - சரிசெய்யவும் இந்த இடைக்கால ஏற்பாட்டைத் கலைஞர் முன்மொழிந்தார்.

அதனை வலியுறுத்த ஒட்டுமொத்த தமிழ் மக்களைத் திரட்டி 24.10.2008 அன்று கொட்டும் மழையில் வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய மனிதச் சங்கிலி சென்னை சிங்காரவேலர் மாளிகையில் தொடங்கி 100 கிலோ மீட்டருக்கு மேல் நீண்டதாக செங்கற் பட்டையும் கடந்திடுமாறு ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்டது.

ஆனால், ராஜபக்சே, அண்டை நாடுகளோடு நயவஞ்சகமாக செய்து கொண்ட ஒப்பந்தத்தையும், குறிப்பாக, இலங்கையில் உள்ள கெம்பன்தோட்டத் துறைமுக அபிவிருத்தித் திட்டம் மற்றும் ராணுவ ஒப்பந்தத்தின் மூலமாகவும், சீனாவைப் பக்கபலமாக சேர்த்துக் கொண்டு, 2009ஆம் ஆண்டு மிகப் பெரிய அழிவைத் தமிழ் ஈழத்திற்கு ஏற்படுத்திவிட்டார். ராணுவ நடவடிக்கையினால் லட்சக் கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், லட்சக்கணக் கான தமிழ்மக்கள் அநாதை களாகப்பட்டு, அகதிகள் முகாம்களில் இன்றுவரை இருந்து வருகின்றனர். சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் அகதி களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை தேவைகள்கூட வழங்கப்படவில்லை.

இந்தியாவின் சார்பில் மனிதாபிமான முறையில் அனுப்பப்பட்ட உதவிகள் யாவும், சிங்கள மக்களின் வாழ்விற்காகவும், வசதிக்காகவும் திருப்பிவிடப்பட்டன. திரு. டி.ஆர். பாலு, எம்.பி., அவர்கள் தலைமையில் இலங்கைத் தமிழர் களின் இன்னல் போக்கிடுவதற்கான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலே உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கை சென்று அங்கே முகாம்களில் அவதியுறும் தமிழர்களைக் கண்டு ஆறுதல் கூறியதோடு, இலங்கை அதிபரையும் கண்டு முகாம்களில் துயரத்திற்குள்ளாகி இருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு விரைவிலே செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டு மென்று வலியுறுத் தியதன் அடிப்படையில்; ஏறத்தாழ 1 லட்சத்து 25 ஆயிரம் இலங் கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

அதற்குள் இலங்கையிலே அதிபர் தேர்தல் என்றொரு காரணத்தைக் கற்பித்து, முகாம்களில் இருந்த தமிழர்களை அனுப்பி வைப்பது அறவே நிறுத்தி வைக்கப் பட்டது. எனவே அவர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும் மத்திய அரசு இலங்கை அரசினை வலியுறுத்த வேண்டுமென்றும்; ஏற்கனவே உறுதியளித்தபடி இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களைப் போல சமஉரிமை பெற்று வாழ்வதற்கேற்ற வழிவகை காண வேண்டு மென்றும்; அதிகாரப் பகிர்வு செய்துகொள்வது ஒன்றுதான் நிரந்தர, நிம்மதியான சகவாழ்வுக்கு வழி வகுத்திடும் என்பதால், அதற் குரிய அரசியல் தீர்வினைக் காணத் தேவையான முயற்சிகள் அனைத் தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொண்டு ஆவன செய்ய வேண்டுமென்றும், வலியுறுத்தப்பட்டது. தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதும், இல்லாதபோதும் இந்திய அரசை வலியுறுத்தி, தமிழ் ஈழ மக்களுக்கு குறைந்த பட்சம் சமஉரிமையாவது வழங்கச் செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்கான அரசியல் நிர்பந்தத்தை மத்திய அரசு இலங்கை அரசுக்கு உருவாக்க வேண்டும் என்பதைப் பிரதமரை சந்திக்கும்போது நேரிடையாகவும், கடிதங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், இதுநாள்வரை எந்தப் பயனும் ஏற்படவில்லை. இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கிமூன் நியமித்த குழு, ராஜபக்சேவினுடைய போர்க் குற்றங்களை உலகத்திற்கு எடுத்துக் காட்டியுள்ளது. உலக சமுதாயமும், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் என்கிற அடிப் படையில், சர்வதேச நீதிமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்து கிறது.

எனினும், இலங்கையில் தமிழ் இன விரோதிகள் திருந்துவார் கள் என்று நம்புவதற்கு இடமில் லை. தமிழ் ஈழ மக்களுக்கு இலங்கை அரசின் மூலம் தீர்வு என்பது இனி கானல் நீர்தான் என்னும் முடிவுக்குத் தான் வர வேண்டியுள்ளது.

நுறாண்டு காலமாக உள்ள இந்தப் பிரச் சினையின் பரிமாணம் இலங்கைத் தமிழர்களிடையே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த ஒற்றுமைக் குறைவினால் ஊன முற்றது என்றாலும், முழுவதுமாக நீர்த்துப் போகாமல் இருக்க - தமிழ் இன உணர்வு அறவே அற்றுப் போய் விடவில்லை என்பதை தரணியிலே நிலைநாட்டுகின்ற வகையில் தந்தை செல்வா அவர்கள் 1956ஆம் ஆண்டு தொடங்கிய ஈழத் தமிழர் அறப்போர் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறுவதற்கும் அந்த அறப்போரில் காணுகின்ற வெற்றி; இலங்கையில் சிங்களவர் - தமிழர்கள் என்ற இருசாராரும் சம உரிமைகளோடு வாழ்வதற்கும் வழிகாணும் என்ற நம்பிக்கை யோடு, அதற்கான ஆக்கப்பணிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் அன்று போல் இன்றும் - என்றும் தமிழ் ஈழ மக்களின் தனி யுரிமைக்கு துணை நிற்கும் என இந்தப் பொதுக்குழு உறுதி கூறு கிறது.

தமிழகச் சட்டப் பேரவையில் 16-4-2002 அன்று அ.தி.மு.க. அரசு பொறுப்பிலே இருந்தபோது கொண்டு வந்த தீர்மானத்தில், விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும்,

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் ஜெயலலிதா கூறியதையும் 17-1-2009 அன்று அதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், இலங்கைத் தமிழர் களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள். இலங்கையில் என்ன நடக்கிற தென்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக் கட் டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டதையும் எடுத்துக்காட்டி இலங்கைத் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த இழிசெயல், பழிச்செயல் புரிந்தவர்கள், தற்போது தமிழ் இனத்தை எதையும் சொல்லி எப்படியும் ஏமாற்றலாம் என்ற மனப்பான்மையோடு ஆட்சிக்கு வந்தோரும் அவர்தம் அடிவருடி களும் ஆடுகின்ற போலி நாடகத்தை உண்மைத் தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டு மென்று அறிவுறுத்துவதுடன்;

இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றி அய்க்கிய நாடுகளின் அவையின் விசாரணைக் குழு அறிக்கையில் காணப்படும் போர்க் குற்றங்களுக்கான பன்னாட்டு குற்றயியல் நீதி மன்றத்தில், இந்தக் கொடுஞ் செயலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க உரிய நடவடிக் கைகளை எடுப்பதற்கு மனித உரிமையைப் போற்றுகிற இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் முன் வர வேண்டுமென்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது. ஈழத் தமிழர்களின் உரிமை காத்திட அவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி ஓர் அரசியல் தீர்வுக்கு வழி காண வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 8. சமச்சீர் கல்வித் திட்டம்.

கிராமப்புர மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள், வசதி படைத்த மாணவர்கள், ஏழை எளிய மாணவர்கள் என்ற நிலை வேறுபாடகற்றி, அனைத்து மாணவர்களுக்கும் சமமான - தரமான கல்வி கிடைக்க வேண்டு மென்பதற்காக திராவிட முன் னேற்றக் கழக ஆட்சியிலே அதற்கான கொள்கை முடிவு எடுக் கப்பட்டு, கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களை நியமித்து, அவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்து, அறிக்கை வழங்கியதற்குப் பின்னர் சட்டம் இயற்றப்பட்டு;

சமச்சீர் கல்வி முறை 2010-11ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், புதிய பாடநூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. 2011-2012 கல்வியாண்டில், சமச்சீர்க் கல்விமுறையில் இதர வகுப்பு களுக்கான பொதுப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு பாட நுல்களும்அச்சிடப்பட்டுள்ளது. சமச்சீர் கல்விச் சட்டத்தினை நீக்கக் கோரி சில தனியார் பள்ளிகள் மற்றும் சங்கத்தினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் 30.4.2010 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பாணையில், தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட இச்சட்டம் செல்லத்தக்கது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இடைக்காலத் தடை வழங்கக் கோரி புதுடில்லி, உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு, அந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இவ்வாறு அரசின் கொள்கை என்ற முறையிலும், நீதி மன்றங்கள் அளித்த தீர்ப்பு வகையிலும் சமச் சீர் கல்வியின் தேவை உறுதி செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவின்படி 2011-2012 கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்து வதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் 200 கோடி ரூபாய்ச் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.

இந்த வகுப்புகளுக்கான பாடத் திட்டம் கல்வி வல்லு நர்களால் உருவாக்கப்பட்டு பொதுமக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை வலை தளத்திலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போடப்போவதாக அறிவிப்பதும், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து முறை யாக உருவாக்கப்பட்ட புத்தம் புதிய புத்தகங்களையெல்லாம் வீணடிப்பதும், மேலும் 200 கோடி ரூபாய் செலவழித்து புதிய புத்தகங்களை இனிமேல் அவசர அவசரமாக அச்சடித்து அவற் றை விநியோகிப்போம் என்பதும்; அதற்காகவே அ.தி.மு.க. அரசு பேரவையிலே கொண்டு வந்த சட்டத் திருத்தம் என்ற பெயரால், சமச்சீர் கல்வியைக் குழிதோண்டி புதைக்க முயற்சிப் பதும் மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றும் காரியமாகும்.

இது பள்ளி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி, அவர்கள் படிப்பைப் பாழாக்கிடும் செயல் என்று இப்பொதுக் குழு அறிவிப்பதோடு, இருளிலும் ஒரு ஒளியாக சென்னை உயர்நீதிமன்றம், தி.மு. கழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்விக்குப் பாதுகாப்பாக அண்மையில் அளித்துள்ள மகத்தான தீர்ப்பு மனக் கவலை போக்கும் மாமருந்தாக அமை கிறது. உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு நன்றி தெரிவிப்பதோடு, அதனை யேற்க வேண்டுமென்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்கள் பலரும் அ.தி.மு.க. அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், அதனை யேற்காமல் உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதாவின் அரசு மேல் முறையீடு செய்தது என்பது யாரையும் எந்தக் கட்சியினரையும் மதிக்காத செயல் என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு - அதற்குத் தகுந்த பாடம் கற்பிக்கத் தக்க வகையில் உச்ச நீதி மன்றம் அளித்துள்ள உத்தரவில் உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியா தென்றும்,

ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் சமச்சீர் பாடப் புத்தகங் களை மாணவர்கட்கு விநியோகிக்க வேண்டு மென்றும் கூறி யிருப்பதை இப்பொதுக்குழு வரவேற்பதோடு - அதனை மதிக்காமல், அந்த உத்தரவை அவமதிக்கின்ற அளவிற்கு ஜெயலலிதா அரசு சமச்சீர் பாடப் புத்தகங்களை இதுநாள் வரை மாணவர்களுக்கு வழங்காமலும், அரசு பாடநுல் கழக வெப் சைட்டில் இருந்த சமச்சீர் கல்விப் பாடப் புத்தகப் படிவங்களை நீக்கம் செய்தும் இருப்பதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

தீர்மானம் : 10 கச்சத்தீவு

இலங்கையுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கச்சத் தீவை அவர்கட்கு விட்டுத்தருவதென்று 1974ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு முடிவினை எடுத்தபோது; 21.8.1974 அன்று தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள், இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உறவுகள் கொண் டதுமான கச்சத்தீவு பிரச்சினையில், மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தி யாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில்,

இலங்கை அரசோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. என்னும் தீர்மானத்தை முன் மொழிந்து நிறைவேற்றியும்; 1974 சூன் மாதம் 29 ஆம் தேதியன்று சென்னையில் அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசியபோது, - தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப் படையில் இந்தியப் பிரதமருக்கு முதலமைச்சர் கலைஞர், கச்சத் தீவின் மீது இலங்கை கொண்டாடிவரும் உரிமையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு,

இருநாடுகளுக்கும் இடையே சமீபத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தமிழக அரசின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள இந்தத் தீர் மானத்தைக் கருத்திலே எடுத்துக் கொண்டு உரிய நடவடிக் கையினை மேற்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். என்று கடிதம் அனுப்பியும்; கழகம் ஆட்சியில் இருந்தபோதே 1974ஆம் ஆண்டு கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி யும்;

தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாமல், 14-7-1974 அன்று தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில், கச்சத்தீவு ஒப்பந்தக் கண்டன நாள் நடத்தியும்; மத்திய அரசின் வெளி யுறவுச் செயலாளர் கேவல் சிங், சென்னையில் 1974 முதல்வராக இருந்த தலைவர் கலைஞரைச் சந்தித்தபோதும், வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங்கிடமும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதை முதல்வர் கலைஞர் தீவிரமாக எதிர்த்தார். கட்சி வேறுபாடுகளுக்கும், அரசியல் வேறுபாடுகளுக்கும் சிறிதளவும் இடம்தராமல் முதல்வர் கலைஞர் நடவடிக்கை எடுத்தும்கூட, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் நிலத்தின் ஒரு பகுதி விட்டுக் கொடுக்கப்பட்ட காரணத்தால்;

கச்சத்தீவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டுமென்று, 1974ஆம் ஆண்டு முதலே திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய அரசைத் தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது. சமீபத்தில் 2011 தமிழகச் சட்டப் பேரவைக் கான பொதுத்தேர்தலின்போது, கழகத்தின் சார்பில் வெளி யிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும், 1974ஆம் ஆண்டு இருந்த நம் நாட்டு உரிமைகள் 1976ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்ட தன் காரணமாக,

அடிக்கடி கச்சத்தீவு அருகே தமிழக மீனவர் கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படு வதும் தொடர் நிகழ்வுகளாக அதிகரித்து வருவதால், கச்சத் தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள் வோம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு அதுவரை வழங்கப்பட்டிருந்த மீன் பிடித்தல், மீன் வலை உலர்த்துதல் மற்றும் தேவாலயத்தில் வழிபாட்டுரிமை ஆகிய அம்சங்கள், 1976ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் மீண்டும் பறிக்கப்பட்டு விட்ட சூழ்நிலையில்;

கச்சத்தீவிற்கு தமிழக மீனவர்கள் தடையேதுமின்றிச் செல்வதற்கும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையைக் கைக் கொள்வதற்கும் மீட்டெடுப்பதற்கும், கச்சத்தீவினை இந்தியாவிற்கே திரும்பப் பெறுவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேலும் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. 15-8-1991 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் விடுதலை நாளையொட்டி கொடியேற்றிய ஜெயலலிதா தனது உரையிலே இலங்கைக்கு தாரை வார்க்கப் பட்ட கச்சத் தீவை மீட்பதற்குப் போராடுவேன் என்று சபதம் செய்து விட்டு, பத்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தவர் கச்சத் தீவை மீட்பதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் சட்டப் பேரவையில் இப்போது தீர்மானம் கொண்டு வந்திருக்கும் சந்தர்ப்பவாதப் போக்கினை தமிழக மக்களுக்கு இந்தப் பொதுக் குழு சுட்டிக் காட்டுகிறது.

தீர்மானம் : 17. இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழ்

பேரறிஞர் அண்ணா அவர்கள் டில்லி மாநிலங்களவையில் பேசும்போது ஒருமுறை I can never forget that I have got a hoary language called Tamil. I will never be satisfied till that language in which my forefathers spoke, in which my poets have given sermons and scriptures, in which we have got classics and literature of inexhaustible knowledge - I will never be content till that day when Tamil takes its due place as one of the official languages in the Union. (பழம்பெருமைமிக்க தமிழ் மொழி என்னுடைய மொழி என்பதை என்னால் எப்போதும் மறந்திட இயலாது.

என்னுடைய முன்னோர்கள் பேசிய அந்த மொழி - கவிஞர்கள் வாழ்க்கை நெறிகளையும், அறிவுரைகளையும் வழங்கிய அந்த மொழி - வற்றாத அறிவை வாரி வழங்கிடும் இலக்கியங்கள் நிறைந்திருக்கும் அந்த மொழி - அதற்கு உரிய இடத்தினைப் பெற்று மத்தியில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆகும் வரை நான் மன நிறைவடைய மாட்டேன்) என்று பேசினார் அண்ணா.

இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமும் நீடிக்கும் என்றும்; பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் பண்டித நேரு அவர்கள் வழங்கிய உறுதிமொழி, எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழகம் ; இந்தி பேசாத மாநில மக்களின் உரிமை கள் நிரந்தரமாகக் காப்பாற்றப்பட;

அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆட்சி மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது ஒன்று தான் வழி என்றும் உறுதியாக நம்புவ தோடு; இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் மேலும் தாமதம் ஏற்படுமே யானால், முதல்கட்டமாக - திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த செம்மொழியான தமிழ்மொழியை, மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தமிழ், மத்திய ஆட்சிமொழியாவது பற்றி, அரசியல் ஞானி முரசொலி மாறன் அவர்கள் மாநிலங்களவையில் கொண்டு வந்த தனி நபர் தீர்மானம் 23-1-1979 அன்று குரல் வாக்கெடுப் பின் மூலம் தோற்கடிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழ், மத்திய ஆட்சி மொழியாவது பற்றி விரிவான கடிதத்தைத் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியதன் விளைவாக 27-5-2004 அன்று வெளி யிடப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டத்தில் மாநில மொழிகளை மத்திய ஆட்சி மொழி களாக்குவது பற்றி ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது. (The UPA Government will set up a Committee to examine the question of declaring all languages in the 8th schedule of the Constitution as Official Languages)

7-6-2004 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியக் குடியரசுத் தலைவர் மத்திய ஆட்சி மொழிகள் பற்றி ஆராய குழு அமைக்கப்படும் என்று அளித்த உறுதிமொழிப்படி அந்தக் குழு அமைக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் மத்திய ஆட்சி மொழிகள் பற்றி ஆராய குழு ஒன்றி னை ஏற்கனவே அறிவித்தவாறு உடனடியாக அமைத்திட வேண் டுமென்று இப்பொதுக் குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 21. மாநில சுயாட்சி

தி.மு.கழக ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜமன்னார் குழு அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முரசொலி மாறன், இரா. செழியன் ஆகியோரைக் கொண்ட குழு ஆய்வு செய்து, தனது கருத்துகளைத் தெரிவித்தது. இவற்றின் அடிப்படையில்தான் 1974 ஏப்ரல் 14ஆம் தேதியன்று வரலாற்றுச் சிறப்புமிக்க மாநில சுயாட்சித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவை யில் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் முன்மொழியப்பட்டு, நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றின் தொடர்ச்சியாக, மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசால் 1983ஆம் ஆண்டில் அமைக் கப்பட்ட நீதிபதி சர்க்காரியா குழுவும்;

2000ஆம் ஆண்டில் நியமிக் கப்பட்ட நீதிபதி வெங்கடாசலய்யா குழுவும் மத்திய - மாநில உறவுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பல பரிந்துரை களை வழங்கியுள்ளன. மீண்டும் 2008இல் மத்திய - மாநில உறவு களை ஆய்வு செய்வதற்கு நீதிபதி பூஞ்சி குழு அமைக்கப்பட்டுள் ளது. நியமிக்கப்பட்ட எல்லா குழுக்களிடமும் திராவிட முன்னேற் றக் கழகம் தனது கருத்துக்களை எடுத்துரைத்து, நிறைவான தும்,

உண்மையானதுமான கூட்டாட்சி முறையை, முழுமையான மாநில சுயாட்சி அடிப்படையில் அமைத்திட வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளது. மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் ஆக்கபூர்வமாக உருவாகி, கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தேவை யான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று - இந்தப் பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 22. முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு, ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு எல்லாம் இயற்கை வழங்கிய அருட் கொடையாகும். 999 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தென்மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், இந்த அணை அமைந்தது. திடீரென கேரள அரசு அணை உடைந்துவிடுமென தவறான வாதத்தை வைத்து பிரச்சினையை உண்டாக்கி, தமிழகத்திற்கு முல்லைப் பெரியாறு மூலம் கிடைக்க வேண்டிய நீர் வரத்தைத் தடுப்பதற்குத் தொடர்ந்து முயற்சி எடுத்து வரு கிறது.

சில உரிமைகளை அ.தி.மு.க. அரசு விட்டுக்கொடுத்ததன் விளைவாக முல்லைப் பெரியாரில் மேலும் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 1989இல் கழக ஆட்சி அமைந்தவுடன், முல்லைப் பெரியாறில் ஏற்பட்ட பிரச்சினைகளை அறிந்து, அதைத் தீர்க்க தலைவர் கலைஞர் நேரடியாக திருவனந்தபுரம் சென்று, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதற்குப் பின்னர் இங்கு ஏற்பட்ட அ.தி.மு.க. ஆட்சியிலும் பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை. கழகம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தலைவர் கலைஞர், இதய சுத்தியோடு கடமைகளை ஆற்றி யுள்ளார்.

ஆனால், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது. கேரள அரசின் இந்தப் போக்கை கைவிடும் படியும், தமிழகத்திற்கு முல்லைப் பெரியாறுமீது உள்ள உரிமையை நிலைநிறுத்தவும் கேட்டு நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் மத்திய அரசை, தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியினைக் கைவிட, மத்திய அரசு தலை யிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டிட மத்திய அரசு துணை நின்று நியாயத்தை நிலை நாட்ட வேண்டுமென்றும் இப்பொதுக்குழு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 23. சேது சமுத்திரத் திட்டம்

தமிழக மக்களின் 150 ஆண்டு காலக் கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டம், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக 2421 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு, அதற்கான தொடக்க விழா 2-7-2005 அன்று மதுரையில் நடைபெற்றது. அவ்வமயம் தலைவர் கலைஞர், பிரதமர் மன்மோகன்சிங், திருமதி சோனியாகாந்தி அம்மையார் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைத் தொடக்கத்திலிருந்தே தாங்கிக் கொள்ள முடியாத சிலர், எதையாவது சொல்லி இந்தத் திட்டத்தை முடக்கிப் போட முடியாதா என்றெல்லாம் பார்த்து, கடைசியில் ராமர் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்பதாக கற்பிக்கப்பட்ட ஒரு காரணத்தைக் கூறி எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

தனுஷ்கோடி கடல் பகுதியில் அவர்களின் கூற்றுப்படி உருவாக்கப்பட்ட பாலம் இருந்ததற்கான ஆதாரம் துளியளவு கூட இல்லை. 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை 81 இடங்களில் கடலுக்குள் ஆழ்துளை சோதனை நடத்திப் பார்த்ததில், அறிவியல் ரீதியாகவோ - ஆழ்கடல் வேதியியல் பகுப்பாய்வு மூலமாகவோ - அவ்வாறு கட்டப்பட்ட பாலம் எதுவும் அங்கே இருந்ததற்கான எவ்வித அடிப்படையோ, ஆதாரமோ இல்லாத நிலையில்; புராணிக மதவாதக் காரணங்களைக் காட்டி, இந்தத் திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு நிலுவையிலே உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள வழக்கை விரைந்து முடித்திட முயற்சி மேற்கொண்டு; தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகிடவும், நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய் அதிகரித்திடவும், மீனவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரவும், நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படவும், தென்மாவட்டங்கள் பெருமள வுக்கு வளர்ச்சி பெறவும் வழிவகுத்திடும் இத்திட்டத் தினை தொடங்கி முடித்திட எஞ்சிய பணிகளைத் தொடர்ந்து நிறை வேற்றிட வேண்டும் என்று - இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Monday, July 25, 2011

சி.பி.அய்யின் உள்நோக்கத்துடனான செயல்பாடு! தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சி.பி.அய் என்ற அமைப் பைக் குறை சொல்ல வில்லை; அந்த அமைப் பில் உள்ள சிலர் உள் நோக்கத்துடன் செயல் படுகின்றனர் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

கோவையில் தி.மு.க. பொதுக்குழு முடிவுற்ற நிலையில் தி.மு.க. தலை வர் கலைஞர் அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர்:- இன்றைய பொதுக் குழு வில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?

கலைஞர்:- பொதுக்குழு உறுப்பினர் கள் மொத்தம் 1485 பேர். அவர்களில் வருகை தந் தோர் 1320 பேர். அணி களின் அமைப்பாளர் கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மொத்தம் 408 பேருக்கு வருகை தந்தோர் 400 பேர். சிறப்பு அழைப்பா ளர்கள் 348 பேருக்கு வருகை தந்தோர் 330 பேர். மொத்தம் 2241 பேர் களில் வருகை தந்தோர் 2050 பேர்.

செய்தியாளர்:- பொதுக்குழுவில் எடுத்த முக்கியமான முடிவுகள் என்ன?

கலைஞர்:- பொதுக் குழுவில் 25 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டு உங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அவைகள்தான் முக்கிய மான முடிவுகள்.

செய்தியாளர்:- தேர்தலுக்குப் பிறகு நடைபெறுகின்ற முதல் பொதுக்குழு இது. காங் கிரஸ் கட்சியோடு உங் கள் கூட்டணி தொடருமா என்பது பற்றியும் மத்தி யில் இரண்டு அமைச் சர்களை தி.மு.க. அனுப் புவது பற்றி முடிவு செய் யும் என்றும் சொல்லி யிருந்தீர்கள். அதைப்பற்றி முடிவெடுக்கப்பட்டதா?

கலைஞர்:- மத்திய அமைச்சரவையில் இரண்டு பேர் சேருவது பற்றி மூத்த மத்திய அமைச் சர்கள் என்னிடம் பேசி னார்கள். அதைப் பற்றி நானும், பேராசிரியரும் மற்றும் கழகத்தின் நிரு வாகிகளும், பாராளு மன்ற கழகக் குழுவின் நிருவாகிகளும் கலந்து பேசி எடுத்த முடிவைத் தான் இன்றைக்கு பொதுக் குழுவின் இறுதியில் நான் அறிவித்திருக்கிறேன். அதாவது Status quo will continue என்று சொல்லி யிருக்கிறேன்.

அதாவது இரண்டு அமைச்சர்கள் பதவிகள் தி.மு.கழகத்தில் இருந்து போனது போனதுதான். அவர்களுக்குப் பதிலாக யாரை யும் நியமனம் செய்ய வேண்டுமென்று நாங்கள் கேட்கவில்லை. ஏற்கெனவே ராஜா இல்லை, தற்போது தயாநிதிமாறன் விலகிவிட்டார். அந்த இரண்டு இடமும் தி.மு. கழகத்தைப் பொறுத்த வரை வெற்று இடங்களாக இருக்கும். அவற்றை நிரப்ப தி.மு. கழகம் முனையாது.

ஆனாலும், அந்த இரண்டு இடம் தி.மு.கழகத்தின் சார்பாக நிரப்பப்படாவிட்டா லுங்கூட, திராவிட முன் னேற்றக் கழகம் தொடர்ந்து காங்கிரஸ் அணியில் இருக்கும். அதைத் தான் ஆங்கிலத்தில் இங்கே Status quo will maintain - என்று சொன்னேன்.

செய்தியாளர்:- காங் கிரஸ் கட்சியின் மீது உங்களுக்குள்ள அதிருப் தியின் வெளிப்பாடு என்று சொல்லலாமா?

கலைஞர்:- கட்சி யின் மீது எங்களுக்கு அதிருப்தி இல்லை. ஆனால், இங்கே சில பேர் பேசிக் கொண்டி ருக்கிறார்கள். அவர் களுக்கு எங்கள் மீது இருக்கின்ற அதிருப் தியை நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம். அதாவது சில காங்கிரஸ்காரர்கள் இங்கே கூட்டங்களில் பேசுகிறார்கள் - அவர் கள் வெளிப்படுத்துகின்ற அதிருப்தியைத்தான் பொதுக் குழுவிலே உறுப்பினர்கள் எல்லாம் எடுத்துச் சொன்னார் கள்.

அதன் காரணமா கத்தான் எந்த மாற்றத் தையும் இப்போது நாங் கள் செய்யாமல் மத்திய அமைச்சர் பதவியை ஏற் காமல் புதிய அமைச்சர் களாக யாரையும் நியமிக் காமல் ஏற்கனவே இருக் கின்ற அமைச்சர்கள் அப்படியே நீடிப்பார் கள் என்பதைத் தான் நான் சொன்னேன்.

செய்தியாளர்:- பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு இடங் களைப் பற்றி தி.மு.கழ கம் அறிவிக்கும் என்று சொல்லியிருந்தாரே?

கலைஞர்:- தி.மு.கழ கத்தின் முடிவைத்தான் இப்போது அறிவித்திருக் கிறோம்.

சி.பி.அய்யின் செயல்பாடு

செய்தியாளர்:- மத் திய புலனாய்வுத் துறை - சி.பி.அய். ஏற்கனவே போபர்ஸ் வழக்கில் உலக அளவில் அது ஒரு சார்பானது என்பதை நிரூபித்திருக்கிறது. தற்போது நீங்கள் சி.பி.அய். உள்நோக்கத்தோடு செயல்பட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறீர்கள். அதைக் காரணமாக வைத்து நீங் கள் சி.பி.அய். மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பீர்களா?

கலைஞர்:- நாங்கள் சி.பி.அய். என்ற அமைப் பையே குற்றம் சொல்ல வில்லை. அந்த அமைப் பிலே உள்ள சிலர் - அந்த அமைப்பின் பொறுப் பிலே உள்ளவர்கள் - சில பேர் உள் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

செய்தியாளர்:- உங் களுக்குப் பிறகு யார் உங் கள் கட்சியின் தலை மைக்கு வருவார்கள் என்று கேட்டதற்கு நீங் கள் பொதுக்குழுதான் அதை முடிவு செய்யும் என்று சொல்லியிருக் கிறீர்கள். இந்தப் பொதுக் குழுவில் அடுத்த தலை மையைப் பற்றி முடிவு செய்யக்கூடிய சாத்யக் கூறுகள் அதிகமாக இருந்தது. அதைப் பற்றி முடிவெடுக்கப்பட்டதா?

கலைஞர்:- ஒவ்வொரு பொதுக்குழுகூடும் போதும், மீடியாக்கள் செய்கின்ற கலகத்திற் காக நாங்கள் ஆட்க ளையோ, தலைவர்க ளையோ மாற்றிக் கொண் டிருக்க முடியாது. இது சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட கட்சி. அண்ணா காலத்திலிருந்து சட்ட திட்டங்கள், விதி முறை களை வகுத்துக் கொண்டு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவது - எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்களை சேர்ப்பது - தலைவரைத் தேர்ந்தெடுப்பது என் றெல்லாம் திட்டமிட் டுப் பணிபுரிகின்ற இயக் கம் திராவிட முன்னேற் றக் கழகம். இந்தக் கேள் வியைக் கேட்ட சேகர் போன்றவர்களின் இஷ் டத்திற்கு நாங்கள் மாற் றிக் கொண்டிருக்க முடி யாது.

எதிர்காலத்தில் தி.மு.க.வுக்குத் தலைவர்...

செய்தியாளர்:- இன் றைக்குக் கூட பொதுக் குழுவில் பேசிய மூத்த தலைவர், எதிர்காலத் திற்கு ஒரு மூத்த தலைவ ரைச் சுட்டிக் காட்ட வேண்டுமென்று பேசி யிருக்கிறாரே?

கலைஞர்:- சேகர் என்ற செய்தியாளரை தி.மு.கழகத்தின் எதிர்கா லத் தலைவராக (அனைவரும் சிரிப்பு) தேர்ந் தெடுக்கலாம் என்றுகூட பேசினார்கள்...

செய்தியாளர்:- உள் கட்சியிலே கீழ் மட்டத் திலிருந்து பொறுப்பு களில் மாற்றம் வருமா?

கலைஞர்:- இல்லை.

செய்தியாளர்:- பொதுக்குழுவின் மாலைக் கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லையே?

கலைஞர்:- பொதுக் குழுவில் கலந்து கொள்ள வில்லை என்றால் வந்தே இருக்க மாட்டார். வந் திருந்தார், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற் குப் பிறகுதான் ஊருக்குச் சென்றிருக்கிறார்.

செய்தியாளர்:- இந் தத் தேர்தல் தோல்விக்கு தி.மு.க.தான் காரணம் என்று பா.ம.க. சொல்லி யிருக்கிறது, கொங்கு நாடு முன்னேற்றக் கட்சியும் சொல்லியிருக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர்:- தி.மு.கழ கத்தின் இந்தத் தோல் விக்கு நான்தான் காரணம் என்று பொதுக் குழுவிலே நானே பேசியிருக்கிறேன். அதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறேன்.

-இவ்வாறு தலைவர் கலைஞர் அவர் கள் பேட்டியளித்தார்.

Saturday, July 23, 2011

சமச்சீர் கல்வி: அரசைக் கண்டித்து 26-ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்தாதற்கு அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரும் 26-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

சமச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதமன்றம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுத்துவிட்டது. மேலும், இந்த ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறும், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீ்ர் பாடப்புத்தகங்களை வினியோகிக்குமாறும் அது உத்தரவிட்டது.

இந்நிலையில் சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்தாதற்கு கண்டனம் தெரிவித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரும் 26-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

மேலும் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பல தனியார் பள்ளிகள் மெட்ரிகுலேஷன் புத்தகங்களை வழங்குவதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மாணவர்கள் அனைவரும் வகுப்புகளைப் புறகக்கணித்துவிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் வினியோகிக்க வேண்டும் என்று அது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி தீர்ப்பளித்தது. நடப்பு ஆண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜூலை 22-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்தது.

அந்த மனுவில், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. பாடப் புத்தகங்கள் தரமற்ற பாடத்துடன் உள்ளன. எனவே நடப்பாண்டில் பழைய பாடத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 26-ம் தேதி நடக்கிறது.

அதிமுக அரசின்`சமச்சீர் கல்விச் சட்டதிருத்தம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது!

அதிமுக அரசின்`சமச்சீர் கல்விச் சட்டதிருத்தம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது!' உயர்நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம்

சென்னை, ஜூலை 19-சமச்சீர் கல்வியை நிறுத் தும் நோக்கத்தில் அதற் கான சட்டப் பிரிவை திருத்தி, தமிழக அரசு திருத்தச்சட்டம் கொண்டு வந்தது, அரசி யல் சாசனத்துக்கு விரோ தமானது என்று, சென்னை உயர்நீதிமன் றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சமச்சீர் கல்வி திட் டம் தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சமச்சீர் கல்வியை உட னடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமி ழக அரசுக்கு உத்தரவிட் டனர். 81 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப் பில் நீதிபதிகள் கூறியி ருப்பதாவது:-

சமச்சீர் கல்விக்கான அறிக்கையில், வல்லுநர் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரின் கருத்தும் பிரதிபலிக்கவில்லை. ஒரு வல்லுநர் தனது முடிவில், மெட்ரிக் மற்றும் சமச்சீர் கல்வித் திட்டமும், பாடப்புத்த கங்களும் தேசிய கல்வித் திட்டத்தை பிரதிபலிக் கவில்லை என்று கருத்து தெரிவித்துள் ளார். சமச்சீர் பாடத்தில் பல திருத்தங்கள் செய் யப்பட வேண்டும் என் றும், அதை படிப்படி யாக செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் சமச்சீர் கல்வியை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டு மொத்தமாக கருத வில்லை.

அதோடு, 2004ஆம் ஆண்டு பாடத்திட்டங் களுக்கு செல்ல வேண் டும் என்றும் அவர்கள் கூறவில்லை. நீதிமன்றத் துக்கு அவர்கள் அளித்த அறிக்கையில், அவர் களின் முழுமையான மற்றும் உண்மையான நோக்கம் வெளிப்படுத் தப்படவில்லை என்று தான் தெரிகிறது. உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

சமச்சீர் கல்வியின் தரம் மற்றும் அதை அமல்படுத்தும் முறை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று தான் வல்லுநர் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. இந்த ஆண்டு அமல்படுத்த லாமா? என்றெல்லாம் ஆய்வு செய்ய உத்தர விடவில்லை. ஆனால் அந்த உத்தரவை தவ றாக எடுத்துக் கொண்டு, வல்லுநர் குழு அறிக்கை அளித்துள் ளது. சமச் சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று அதில் கூறியுள்ளனர்.
செயல்பட்டவர் யார்?

வல்லுநர்களின் இந்த அறிக்கை, இந்த வழக்கில் தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத் தான் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமல்ல, வரைவு அறிக்கை தயா ரிப்பதில் இருந்து இறுதி அறிக்கை தயா ரிக்கும்வரை பள்ளிக் கல்வித்துறை செய லாளர் சபீதாதான் செயல்பட்டுள்ளார். சமச்சீர் பாடப்புத்த கத்தை இந்தக் கல்வி ஆண்டில் உபயோகிக்க முடியாது என்ற கருத்தை குழுவின் உறுப்பினர்கள் தெரி வித்துள்ளனர். முன்ன தாக வரைவு அறிக் கையை நிபுணர் குழு விடம் சபீதா முன் வைத்துள்ளார். அதை அந்தக் குழு ஒரு மன தாக ஏற்றுக் கொண் டுள்ளது. எனவே இந்த அறிக் கையை தயாரிப்பதில் சபீதாவின் பங்கு அதி கம். அதன் அடிப் படையில்தான், இந்த ஆண்டு சமச்சீர் கல் வியை அமல்படுத்த முடியாது என்று வல்லு நர்கள் கூறியுள்ளனர். இந்த பாடப்புத்தகங் களை பின்பற்ற முடி யுமா? என்று ஆராய உச்சநீதிமன்றம் உத்தர விடவில்லை. உயர்நீதி மன்றத்தின் சில உத்த ரவுகளை கடந்த அரசு நிறைவேற்றவில்லை என்றும் அதனால் தான் அதை நிறை வேற்றுவதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வந்ததாக அரசு கூறியது.

வல்லுநர் குழு

சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு ஏராளமான காரணங் களை அரசு கூறினா லும், வல்லுநர் குழு அமைத்து ஆராய்ந்து முடிவெடுத்து, பின் னரே சமச்சீர் கல்வித் திட்டத்தைப் நிறுத்தி வைக்கும் சட்டத்திருத் தத்தை கொண்டு வந்த தற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் அரசு தாக்கல் செய்யவில்லை. சமச்சீர் கல்வித் திட்டம் சிறப்பானது என்றும், அது தேவை யானது என்றும் வல் லுநர் குழுவில் இடம் பெற்றுள்ள பெண் ஒருவர் கூறியிருக் கிறார். அவரது முழு கருத்தும், எங்களிடம் தாக்கல் செய்யப்பட் டுள்ள இறுதி அறிக் கையில் இடம் பெற வில்லை.

சமச்சீர் கல்வியின் ஆக்கபூர்வமான விஷ யங்களையும் தங்கள் அறிக்கையில் வல்லு நர் குழுவினர் குறிப் பிட்டுள்ளனர். அதில் மாற்றங்கள் வேண்டும் என்பதுதான் அவர் களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது. தி.மு.க. வின் கொள் கைகள் உள்ளனவா?

இரண்டு வல்லுநர் களுக்கு இடையே நடந்த `இ மெயில்' கருத்து பறிமாற்றமும் இங்கு சுட்டிக்காட் டப்பட வேண்டும். சமூக அறிவியல் பற் றிய கருத்து பறிமாற் றத்தில், ``சமச்சீர் கல்வி பாடங்களில் குறை பாடுகள் உள்ளன. ஆனால் அவை திருத்தப்படக் கூடியவை. தி.மு.க.வின் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாடங் கள் அதில் ஏறக்குறைய இல்லை. மாணவர்களின் மனதில் இந்தப் பாடத் திட்டத்தின் மூலம் அரசி யலை விதைப்பது கடினம். இந்த பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்கள், தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று நிரூபிப்பதும் மிகக் கடினம்'' என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய கல்விக்கு திரும்புவதாக அரசு எடுத்த முடிவு, ஓரடி பின்னோக்கி செல்லும் நிலையையே காட்டுகிறது. அதை நாங்கள் அனு மதிக்க முடியாது.

உள்நோக்கம் கொண் டது

புதிய ஆட்சி அமைத்த சில நாள்களுக்குள், பழைய பாடத்திட்டத் துக்கு அரசு திடீரென்று மாறுவதற்காக, எந்த வல் லுநர் குழுவின் அறிக்கை யையும் பெறவில்லை என் பதில் அரசின் உள் நோக்கத்துக்கான முகாந் திரம் காணப்படுகிறது.

இது, ஒட்டுமொத்த சமச்சீர் சட்டத்தையும் கிடப்பில் போடும் உள் நோக்கத்துடன் அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் என்பதற்கு மிகப் பெரிய சான்று. சமச்சீர் கல்விச் சட் டத்தை செல்லும் என்று ஏற்கெனவே உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதை எதிர்த்த மனுக்களை உச்சநீதிமன் றம் தள்ளுபடி செய்தது. இந்த சூழ்நிலையில் சட்டத் திருத்தம் என்ற பெயரில் சமச்சீர் கல் வியை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இது உயர்நீதிமன்றத்தின் உத்த ரவை மீறுவதாக அமைந் துள்ளது. எனவே இந்த சட்டத்திருத்தம், கல்வி பெறும் சம உரிமையை பாதுகாக்கும் அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்று கூறு வதில் எங்களுக்கு எந்த வித தயக்கமும் இல்லை. திருத்தச் சட்டத்தை உன் னிப்பாக கவனித்தால், அது சமச்சீர் கல்விக்கான மூல சட்டத்தையே செய லற்றதாக்கும் திருத்தமாக இருப்பது புலப்படும். அரசு கொண்டு வந் துள்ள இந்த திருத்தச் சட்டத்தை அனுமதித் தால், தமிழகத்தில் உள்ள ஒரு கோடிக்கும் மேற் பட்ட மாணவரின் நலனை அது கடுமையாக பாதித்து பின்விளைவு களை ஏற்படுத்தும்.

இந்த குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் தகுதி பற்றியும் பல்வேறு குறைகள் கூறப்பட்டன. அவற்றுக்குள் சென்று ஆய்வு செய்ய நாங்கள் விரும்பவில்லை. எனவே வல்லுநர்கள் குழு நியமனத்தை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

அரசுக்கு அனுமதி

தற்போது தயாராக உள்ள சமச்சீர் பாடப் புத்தகங்களில், வல்லுநர் குழு சுட்டிக்காட்டும் குறைகளை ஆய்வு செய் வதற்கும், அதை மிகக் குறைந்த காலகட்டத்துக் குள் (3 மாதங்களுக்குள்) சேர்ப்பது, குறைப்பது போன்ற நடவடிக்கை களை மேற்கொள்வதற் கும் அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒன்று மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை ஏற்கெனவே அமலாகிவிட்டது. ஏற் கெனவே அமலுக்கு வந்த சட்டத்தை, மற்ற வகுப் புகளுக்கும் அமலுக்கு வராமல் தள்ளிவைக்கும் வகையில் சட்டத் திருத் தத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. இது அரசு தனது அதி காரவரம்பை மீறும் செயலாகும். கல்வி ஆண்டு 1.6.11 முதல் தொடங்கும் என் பது அனைவருக்கும் தெரி யும். இந்த சூழலில் தமிழக அரசால் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. தன்னால் நேரடியாக சாதிக்க முடியாத விஷ யத்தை, சட்டத் திருத்தம் கொண்டு வந்து, மறை முகமாக சாதிக்க அரசு முயற்சித்துள்ளது.

அரசியல் சாசனத்துக்கு விரோதம்!

ஒரு சட்டத்தில் கொண்டு வரும் திருத்தம், அந்த மூல சட்டத்தின் நோக்கத்தையே பாதிக்கும் வகையில் அமைந்திருந் தால் அது அரசியல் சாச னத்துக்கு முரணாகவே கருதப்படும். இந்த விவ காரத்தில் அரசியல் சாச னத்துக்கு எதிராக அரசு செயல்பட்டுள்ளது. ஏற்கெனவே சமச்சீர் அமல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிச் செல் வது, உயர்நீதிமன்றம் ஏற் கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை மீறும் செய லாகும்.

அதுமட்டுமல்ல, அந்த செயல்பாடு, சமச்சீர் கல்விக்கான மூலச் சட்டத்தையே ரத்து செய்வதற்கு சம மானதாகும். மூலச் சட்டத்துக்கு எதிரான சட்டத்திருத்தத்தை அனுமதித்தால், மாணவர்களின் நலன் பெரிதும் பாதிக்கப்படும். எனவே மீண்டும் பழைய பாடத் திட்டங்களை கொண்டு வர அனுமதிக்க முடியாது. அது மாணவர்களின் நலனுக்கு உகந்ததல்ல.

ஏற்கெனவே ``செட் டில்'' ஆன விஷயத்தில், வேறு எதையாவது செய் தால், மாணவர்களை குழப்புவது போல் ஆகிவிடும். அதை நாங் கள் அனுமதிக்க மாட் டோம். கடந்த அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம், சட்ட விரோத மானது என்றும் இப்ப டிப்பட்ட ஒரு தவறான கொள்கை முடிவெடுத்து அதற்காக ரூ.200 கோடி செலவழித்து, பழைய அரசு, புத்தகங்களை அச்சிட்டு இருப்பதாக ,பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

சமச்சீர் பாடத்திட் டத்தில் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் அனைத் தும் தரமற்றவை என்று அரசும் கொள்கை முடிவு எடுத்துள்ளது. ஆட்சி மாறியதும் திடீரென்று அரசு தனது கொள்கை முடிவை மாற்றி இருக் கிறது. அவசர கதியில் சமச் சீர் கல்வித் திட்டத்தை கடந்த அரசு கொண்டு வந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. குழு அமைத்து 4ஆண்டுகளாக அனைத்து கோணத்தி லும் அதை ஆராய்ந்து, பல மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள நில மையையும் ஆராய்ந்த பிறகுதான், சமச்சீர் கல் வியை முந்தைய அரசு கொண்டு வந்தது.

முந்தைய அரசு பின் பற்றாத நீதிமன்றம் உத் தரவுகளை பின்பற்றுவ தற்காகத்தான் இந்த சட் டத்திருத்தத்தை கொண்டு வந்ததாகக் கூறி அதை நியாயப் படுத்த அரசு முயற்சிக் கிறது. அப்படியானால், நீதிமன்ற உத்தரவுப்படி, சமச்சீர் கல்விவாரியத் தில் அதிகாரிகளை இந்த அரசு நியமித்தி ருக்கலாமே? அதிகாரி களின் செயலற்ற தன் மையினாலும், மனம் போன போக்கினாலும் ஏன் மாணவர்களின் படிப்புப் பாழாக வேண் டும்? 22ஆம் தேதிக்குள்
சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் அரசு ஆய்வு நடத்தி, அதில் சேர்க்க வேண்டியவை, நீக்க வேண்டியவை பற்றி முடிவு செய்ய அரசுக்கு சுதந்திரம் அளிக்கி றோம். உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித் துள்ள உத்தரவுப்படி பாடத்திட்டத்தை அரசு அறிவிக்கலாம்.

எனவே சமச்சீர் கல்விச் சட்டத்தில் கொண்டு வந்த திருத் தத்தை, அரசியல் சாச னத்துக்கு முரணானது என்று கூறி அதை ரத்து செய்கிறோம். வகுப் புகளை உடனடியாக ஆசிரியர்கள் நடத்து வதற்கு வசதியாக சமச் சீர் புத்தகங்களை 22ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

பள்ளிக்குழந்தைகள் தான் நாட்டின் எதிர் காலம் என்பதை கருத் தில் கொண்டு, சமச்சீர் கல்வியை சிறப்போடு நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதே எங்கள் நம்பிக் கையாக உள்ளது.

-இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

சமச்சீர் கல்வி: வீண் பிடிவாதம் வேண்டவே வேண்டாம்! - கலைஞர் அறிக்கை

2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி முறையை தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கிட வழி அமைப்போம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்திருந்ததின் அடிப்படையில், சமச்சீர் பள்ளிக் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010 இயற்றப்பட்டு; சமச்சீர் கல்வி முறை 2010-2011ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பு களில் நடைமுறைப்படுத்தப் பட்டதுடன் புதிய பாட நூல்களும் தயாரித்து வழங்கப்பட்டு ஓராண்டு அந்த மாணவர்களும் அதனைப் படித்து முடித்து விட்டனர்.

2011-2012ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையை மேலும் தொடர்ந்து நடை முறைப்படுத்துவதற்கு ஏதுவாக எஞ்சிய 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்த கங்கள் 200 கோடி ரூபாய்ச் செலவில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.

இந்த வகுப்புகளுக்கான பாடத் திட்டம் கல்வி வல்லுநர்களால் தயார் செய்யப்பட்டு பொது மக்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை வலை தளத்தில் வெளியிடப்பட்டது. சமச்சீர் கல்விச் சட்டத்தினை தள்ளுபடி செய்யக் கோரி ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் சங்கத் தினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்குகளில் 30.4.2010 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பாணையில்; தமிழக அரசால் பிறப்பிக்கப் பட்ட இச்சட்டம் செல்லத்தக்கது என நிலை நிறுத்தம் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பாணைக்கு இடைக்காலத் தடை வழங்கக்கோரி புதுடெல்லி, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள் தொடரப்பட்டு அந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அ.தி.மு.க. அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர் திரு. கே. சியாம் சுந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவின் மீது நீதியரசர் கள் திரு. எஸ்.ராஜேஸ்வரன், திருமதி கே.பி.கே. வாசுகி ஆகியோர் கூறும்போது, சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது.

சிறந்த வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கெனவே பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையைச் செலவிடுவது அவசியம் தானா? இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜென ரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். மேலும் ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை - இந்த நீதிமன்றத்தால் உறு திப்படுத்தப் பட்ட சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்ற கேள்விகளுக் கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்து, அ.தி.மு.க. அரசின் சமச்சீர் கல்வி தொடர்பான திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைத்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்தபோது, நீதியரசர்கள் பி.எஸ். சவுகான், சுதந்திரகுமார் அளித்த தீர்ப்பில், 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும். அதை இடையில் நிறுத்தினால் குழப்பம் ஏற்படும். 2 முதல் 5ஆம் வகுப்பு வரையும், 7ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையும் சமச்சீர் கல்வியை அமல்படுத்து வது குறித்து ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படு கிறது. இந்த நிபுணர் குழு தனது அறிக்கையை 2 வார காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தினமும் விசாரணை நடத்தி ஒரு வார காலத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும். என்று கூறினார்கள் . இந்தத் தீர்ப்பின்படி அ.தி.மு.க. அரசு கல்வியாளர்கள் குழு ஒன்றினை அமைத்தது. அந்தக் குழுவில் சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களே இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற கருத்து பலரா லும் சொல்லப்பட்டது.

அதைப் பற்றியெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்படாமல், அந்தக் குழு வினைக் கொண்டே அறிக்கை ஒன்றினைத் தயார் செய்து, அந்த அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. அந்த அறிக்கை சமச்சீர் கல்வி முறை ஏற்கத் தக்கது அல்ல என்றும், கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சமச்சீர் கல்வி இல்லை என்றும், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அவசரக் கோலத்தில் தயாரிக் கப்பட்டது என்றும், பாடங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் உள்ளது என்றும் இப்படிப் பல முரண்பட்ட காரணங்களையெல்லாம் சொல்லி யிருப்பதாக செய்தி கூறப்பட்டது. அந்த அறிக்கை யையும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து முடிவினைத் தெரிவித்துள்ளது.

சமச்சீர் ஆராயப்பட்ட ஒன்று

சமச்சீர் கல்வி முறை பல்வேறு குழுக்களால் பல ஆண்டுகளாக பரிசீலனை செய்யப்பட்டு, பாடத் திட்டங்கள் முறைப்படி வகுக்கப்பட்டு நடை முறைக்கு வந்த திட்டமாகும். அதனை எப்படி யாவது கெடுக்க ஆட்சிக்கு வந்திருப்போர் முயற்சிப் பதை ஏற்கெனவே உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்ற மும் உணர்ந்துதான் தங்களது கருத்தினைத் தெரிவித்திருக்கின்றார்கள். இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து சென்னை உயர் நீதிமன்றம் இதற்கான தீர்ப்பினை இறுதித் தீர்ப்பாக வழங்கி மாணவர்களின் எதிர்கால நலனைக் காப்பாற்று வார்கள் என்று பெரிதும் நம்புகிறேன் என்று நான் ஏற்கெனவே ஓர் அறிக்கையில் கூறியிருந்தேன். அதன் படி 18-7-2011 அன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பினை அளித்துள்ளது.

தீர்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களும், நீதியரசர் திரு. டி.எஸ். சிவஞானம் அவர்களும் அளித்துள்ள தீர்ப்பில் முக்கியப் பகுதிகளை நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். அவர்கள் தங்கள் ஆணையின் தொடக்கத்திலேயே-
About one crore twenty three lakh school children of Std. I to X and their parents in the State of Tamil Nadu are without any textbooks and syllabus, and are a dilemma as to whether the Uniform Syllabus, which was to commence as per the Tamil Nadu Uniform System of School Education Act, 2010, shall be postponed because of the amendment brought in the Act by the new Government, immediately after coming into power, and whether the textbooks as per the new syllabus got printed and made ready by spending about 200 crores of rupees by the erstwhile Government shall be destroyed or disposed of.

அதாவது தீர்ப்பினைத் தொடங்கும்போதே, 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் 1 கோடியே 23 லட்சம் மாணவர்களும், அவர்களுடைய பெற் றோரும் எந்தப் புத்தகமும் இல்லாமல் குழப்பத் திலே ஆழ்ந் திருக்கிறார்கள் என்றும், புதிய அரசு அமைந்தவுடன் கொண்டு வந்த திருத்தச் சட்டத் தின்படி தயாரித்த பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டுமா அல்லது சமச்சீர் கல்வித் திட்டப்படி 200 கோடி ரூபாய் செலவழித்து தயாரான புத்த கங்களைப் படிக்க வேண்டுமா அல்லது அவைகளை அழித்து விட வேண்டுமா என்று தெரியாத நிலைமை உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தீர்ப்பின் 2ஆவது பத்தியில், For the purpose of achieving social justice and quality education, the erstwhile Government enacted the Samaceer Kalvi Thittam (சமூக நீதியையும், தரமான கல்வியையும் கொடுப்பதற்காக இதுவரை இருந்த அரசாங்கம் சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தது ) என்று நீதியரசர்கள் கூறியிருப்பதிலிருந்தே தி.மு. கழக ஆட்சியில் எந்த நோக்கத்துடன் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்பது தெளிவாகும். உச்சநீதிமன்றம் அரசின் சார்பில் ஒரு குழு வினை அமைத்து, அந்தக் குழு உயர்நீதிமன்றத் திற்குப் பரிந்துரைகளை அளித்து, அதைப்பற்றி உயர்நீதி மன்றம் விசாரித்து தீர்ப்பினை அளிக்க வேண்டு மென்று கூறியது. தமிழக அரசும் அவ்வாறே ஒரு குழுவினை அமைத்தது. அந்தக் குழுவிலே இடம் பெற்றவர்கள் பற்றியெல்லாம் ஏற்கனவே ஏராளமாக ஏடுகளிலே வெளி வந்துள்ளது. அதைப் பற்றி யெல்லாம் இங்கே நான் விவரிக்க விரும்பவில்லை. ஆனால் அந்தக் குழுவின் அறிக்கை எவ்வாறு தயாரானது என்பதைப் பற்றி உயர்நீதிமன்றத் தீர்ப்பிலே கூறப்பட்டுள்ளதை நான் விளக்கிட விரும்புகிறேன்.

தீர்ப்பில் 28வது பத்தியில், From the minutes it is evident that the Secretary, School Education has done all exercise collecting suggestions/views including the preparation of the draft report. It is she, who after preparation of the draft final report, placed the same before the Committee on 29-6-2011, which was unanimously approved. It is, therefore, clear that the Secretary, School Education namely, Smt. D. Sabitha has played a major role in the preparation of the Report (கூட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர்தான் வரைவு அறிக்கை தயாரிப்பது முதல் கருத்துக்களை அறிவது வரை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது.

அவர்தான் இறுதி வரைவு அறிக்கையைத் தயாரித்து 29-6-2011 அன்று நடைபெற்ற கூட்டத் திலே அதனை வைத்து ஏகமனதாக ஒப்புதல் பெற்றுள்ளார். எனவே அறிக்கையைத் தயாரிப்பதில் பள்ளிக் கல்வித் துறையின் செயலாளரான திருமதி டி.சபீதா அவர்கள் பிரதானமான பணியினை வகித்துள்ளார்) என்று நீதியரசரே, அந்த அறிக்கை எவ்வாறு தயாரிக்கப் பட்டது என்பதை விவரித்துள்ளார். இதிலிருந்து அ.தி.மு.க. அரசின் செயலாளரே தன்னிச்சையாக ஓர் அறிக்கையைத் தயாரித்து, குழு கொடுத்ததாக நீதிமன்றத்திலே தாக்கல் செய்திருக் கிறார் என்பது உயர்நீதிமன்றத் தீர்ப்பிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.

மேலும் உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பில், பத்தி 29இல் It is worth to mention here that the Same Secretary, School Education Department Mrs. D. Sabitha defended the State by supporting the amendment made Section 3 of the Act of 2010 by filing a counter affidavit. (பள்ளிக் கல்வித் துறையின் இதே செயலாளர்தான் மாநில அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக எதிர் மனுவினைத் தாக்கல் செய்தவர் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்) என்றும் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 2010-2011ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டமே தொடர வேண்டுமென்றும், மாநில அரசினால் அமைக்கப்படும் குழு 2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 7 முதல் 10ஆம் வகுப்பு வரையிலும் சமச்சீர் கல்வி முறையினை எவ்வாறு நடை முறைப்படுத்துவது, அதற்கான புத்தகங்கள் எவை என்பதைப் பற்றி பரிந்துரைகள் தர வேண்டு மென்றும் கூறியிருந்தது என்ற போதிலும், அதற்கு மாறாக தமிழக அரசினால் அமைக்கப்பட்ட குழு சமச்சீர் கல்வி முறையே கூடாதென்றும் அதற்கான பாடத் திட்டங்களே கூடாது என்றும் கூறி யிருப்பது சரியல்ல என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

அதைப்பற்றி கூறும்போது,This is in our view is a total misreading and misinterpretation of the terms of reference made to the Committee, a thorough wrong reading of the scope and ambit of the direction issued by the Hon’ble Supreme Court என்று நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் கூறிய அறிவுரைக்கு மாறாக தமிழக அரசு செயல் பட்டுள்ளது என்பதை இந்த வார்த்தைகளே தெளிவாக்குகின்றது.

புத்தகங்களைத் தேர்வு செய்வது என்பதைப் பொறுத்து சென்னை உயர்நீதிமன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பினை 10-6-2011 அன்று அளித்தபோதே தெளிவாகச் சொல்லியிருக் கிறது என்றும் ஆனால் மாநில அரசு கேட்கவில்லை என்றும் தீர்ப்பில் 30வது பத்தியில் கூறப்பட்டுள் ளது. நீதியரசர்கள் அதைப்பற்றி எழுதும்போது, However, these orders and directions have been disregarded by the State என்று தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத் தீர்ப் பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு சமச்சீர் கல்வி முறைக்கு எதிராக அறிக்கை கொடுத்ததைப் போல செய்திகள் வந்த போதிலும் உயர்நீதிமன்றம் அந்தக் குழுவின் உறுப்பினர்களிடமிருந்து தனித் தனியாக கருத்துக்களைக் கேட்டுப் பெற்று அவர் களின் தனிப்பட்ட கருத்துக்களும் உயர்நீதி மன்றத் தீர்ப்பிலே விளக்கமாக வெளியிடப்பட்டுள்ளது. அவைகளையெல்லாம் வெளியிட்ட நீதியரசர்கள் அதைப்பற்றி எழுதும்போது, From the comments/report furnished by the members, referred supra, it is evidently clear that the members have not outrightly discarded the Uniform Syllabus and text books (உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக் களைப் பார்க்கும்போது, உறுப்பினர்கள் சமச்சீர் கல்வி முறையையோ, அதன் பாடப் புத்தகங் களையோ ஒரேயடியாக ஒதுக்கிவிடவில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது) என்று கூறியிருப்பதோடு; It appears that the final report submitted to this Court does not contain the full and actual views expressed by each Committee Member and their intent அதாவது நீதி மன்றத்திற்கு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை, அந்தக் குழு வின் ஒவ்வொரு உறுப்பினர்களும் தெரிவித்த உண்மை யான, முழுமையான கருத்துக்களைத் தாங்கிட வில்லை என்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி யும், மற்றொரு நீதிபதியும் தெரிவித்திருக்கிறார்கள் என்றால், நீதிமன்றத்தையே ஏமாற்றிய குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்திருக்கிறதா இல்லையா என்ப தற்கு அவர்கள் விளக்கம் அளித்தாக வேண்டும்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பில் பத்தி 41இல், நீதியரசர்கள்,We have no hesitation to hold that the State has exceeded in its powers in bringing the Amending Act to postpone an enactment which is already come into force- சமச்சீர் கல்விச் சட்டத்தை செல்லும் என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதை எதிர்த்த மனுக்களையும் உச்ச நீதி மன்றம் தள்ளு படி செய்து விட்டது. இந்தச் சூழ்நிலையில் திருத்தச் சட்டம் என்ற பெயரில் சமச்சீர் கல்வியை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இது உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவதாக அமைந்துள்ளது. எனவே இந்தச் சட்டத் திருத்தம் கல்வி பெறும் சம உரிமை யைப் பாதுகாக்கும் அரசியல் சாசனச் சட்டத்துக்கு எதிரானது. மாநில அரசு அதனுடைய அதிகார வரம்பை மீறியுள்ளது என்று கூறுவதற்கு எங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை - என்றே தெரிவித்திருக்கிறார்கள். மாநில அரசு அதனுடைய அதிகார வரம்பை மீறியுள்ளது என்ற நீதியரசர்களின் இந்த வாக்கியத்தை தமிழக ஏடுகளில் பல வெளியிடாமல் ஆளுங்கட்சிக்கு நன்றி விசுவாசமாக நடந்து கொண்டுள்ளன.

நீதியரசர்கள் பத்தி 43இல் கூறும்போது மாநில அரசின் சார்பிலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சார்பிலும் வாதிடும்போது சமச்சீர் கல்வித் திட்டம் விவாதம் எதுவும் இல்லாமல் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்ததால், தங்களைத் திருப்தி செய்து கொள்வதற்காக பல்வேறு ஆவணங் களைத் தருவித்துப் பார்த்ததாக வும், அப்போது முனைவர் முத்துக்குமரன் அளித்த பரிந்துரைகளைப் பார்த்ததாகவும், அந்தப் பரிந்துரைகள் எல்லாம் நன்றாக ஆய்வு செய்யப் பட்டு விவாதிக்கப்பட்ட பிறகுதான் கொடுக்கப்பட் டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள் 13-5-2011 அன்று வெளிவந்தன; 16-5-2011 அன்று பதவியேற்பு நடை பெற்றது; 22-5-2011 அன்று ஒரு மணி நேரம் மட்டுமே அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று, அதில் சமச்சீர் கல்வி உட்பட பல பிரச்சினைகள் பேசப்பட்டன; 23-5-2011 அன்று பழைய பாடத்திட்டங்கள்படி புத்தகங்களைத் தயாரிக்க டெண்டர்கள் கோரப்பட்டன; என்பதையெல்லாம் பார்க்கும் போது எந்தவொரு சான்றோர்களின் குழுவின் அடிப்படையிலும் அரசாங்கம் இந்த மாற்றத்தை எடுக்கவில்லை என்பதையே காட்டு கிறது என்று உயர்நீதி மன்றத்தீர்ப்பு கூறியுள்ளது.

குழப்பங்கள் ஏற்படும்

There would be a great impact on the student community, if the Amending Act is to be implemented. It would unsettle, settled issues causing chaos and confusion in the young minds, which we cannot permit to be done (அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்தத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தினால் மாணவர் சமுதாயத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி, குழப்பத்தையும், பின் விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதால், அதற்கு நாங்கள் உடன்பட வில்லை) என்பதும் தீர்ப்பிலே உள்ள வாசகங் களாகும்.

We may point out that one of the Committee Members nominated by the Government, after the direction was issued by the Supreme Court, in her comments on the Uniform System of Education, the syllabus and text books has stated that the Samacheer Kalvi is a laudable object and a necessity... However, this observation of the Committee member has not been fully brought out in the final report submitted by the Government to this Court. (உச்சநீதி மன்றத் தீர்ப்புக்குப் பிறகு மாநில அரசு அமைத்த குழு உறுப்பினர்களில் ஒருவர் சமச்சீர் கல்வி பற்றியும், பாடத் திட்டங்கள் பற்றியும் தனது கருத்துக்களைத் தெரிவிக்கும்போது சமச்சீர் கல்வி பாராட்டத்தக்கது என்றும் மிகவும் தேவையான ஒன்று என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அந்த உறுப்பினரின் இந்தக் கருத்து அரசு இந்த நீதி மன்றத்திலே இறுதியாக தாக்கல் செய்த அறிக்கையில் முழுவதுமாகத் தெரிவிக்கப்பட வில்லை) - இதுவும் தமிழக அ.தி.மு.க. அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சான்றிதழ் ஆகும்!

We feel that the decision of the State Government to put on hold Uniform System and to revert back to the 2004 stream is undoubtedly a step backward, which we shall not permit அவை (சமச்சீர் கல்வி முறையைத் தள்ளி விட்டு 2004ஆம் ஆண்டு நிலைக்குச் செல்ல வேண்டுமென்ற மாநில அரசின் முடிவு சந்தேகமில்லாமல் பின்னுக்குச் செல்லும் ஒரு நடை முறையாகும், அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்) என்பதும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வாசகங்களாகும்.

The Parent Act has already been implemented insofar as Class I and VI from the academic year 2010-11. Therefore, to revert back to the position prior to 2010-11 would not only amount to violating the decision of the Division Bench of this Court and would have the effect of repealing the Parent Act, but also detrimental to the interests of the Children.(மூலச் சட்டப்படி 2010-11 முதல் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதிலிருந்து பின் செல்வது என்பது இந்த நீதிமன்றத்தின் முடிவுக்கு மாறானது என்பது மட்டுமல்ல, மாணவர்களின் நலன்களைப் பாதிக் கக் கூடியதுமாகும். எனவே இந்த நிலையில் மாண வர்களின் நலன்களைக் கருதி அப்படி பின்னால் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. )

இவைகளையெல்லாம் தங்கள் தீர்ப்பிலே தெரி வித்து விட்டுத்தான் இறுதியாக தங்கள் முடிவுகளை நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதில் 1 ) ஒன்று மற்றும் 6ஆம் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கும் தேவையான சமச்சீர் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு கணிசமான பணிகள் முடிந்து விட்டன. அவை இணையத் தளத்திலும் விடப் பட்டு விட்டன. இந்த நிலையில் சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது, மாணவர்களின் நலனைப் பாதிக்கும். எனவே அந்தச் சட்டத்தின் 3ஆம் பிரிவைத் திருத்தி, தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லாது. அதை ரத்து செய்கிறோம்.

2) சமச்சீர் சட்டத்தின்கீழ் வரும் கல்விக்கான பாடப் புத்தகத்தை மாணவர்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும். இந்தப் பணிகளை 22ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

3) சமச்சீர் கல்விப் பாடங்களை நடத்துவதற்கு ஏதுவான குறிப்புகளை ஆசிரியர்களுக்கு உடனே அரசு வழங்க வேண்டும். அந்தப் புத்தகங் களில் உள்ள ஆட்சேபணைக்குரிய பகுதிகளை நீக்கி அவற்றுக்குப் பதிலாக புதிய பாடங்களை அரசு சேர்க்கலாம். புதிய பாடங் களை கூடுதல் இணைப் புப் புத்தகமாக வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

4) அரசுக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் குறித்த விவரங்களை அரசு அறிவிக்கையாக வெளி யிட வேண்டும்.

எனவே மாணவர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் நலனையும் கருத்திலே கொண்டு, சமச்சீர் கல்வியை அமல்படுத்த, மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் மற்றொரு நீதியரசரும் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு பற்றி உடனடியாக செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து கேட்ட போது, இந்தத் தீர்ப்பை இன் றுள்ள தமிழக அரசு தங்களுக்குக் கிடைத்த தோல்வி யாகக் கருதாமல் - ஏழை யெளிய நடுத்தர மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்த வரப் பிரசாத மாகக் கருத வேண்டும் - வழக்காடியதில் கிடைத்த தோல்வி என்று ஆட்சியினர் கணக்கிடா மல் எதிர்கால புதிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி எடுத்துக்கொண்டால் அது அவர்களுக் கும் நல்லது, எதிர்கால சமுதாயத்திற் கும் நல்லது என்று சொல்லியிருக்கிறேன். நான் மாத்திரமல்ல, அ.தி.மு.க வுடன் தோழமை கொண் டுள்ள கட்சிகளின் நண்பர்கள் எல்லாம் இதுபற்றி தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

சமச்சீர் பிரச்சினையில் அ.தி.மு.க.வின் நிலைப் பாடு தான் சரியானது என்று நேற்று கூறிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கூட, மேல் முறையீட்டைத் தவிர்த் திடுக என்று அறிக்கை விடுத்திருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துக என்று சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் நண்பர் கே.வீ. தங்கபாலு அவர்கள் அ.தி.மு.க. அரசு நீதிக்குத் தலை வணங்கி உடனே சமச்சீர் கல்வியை நடை முறைப்படுத்த வேண்டுமென்று சொல்லி யிருக்கிறார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அவர்கள் பாரதியாரின் கவிதையை எடுத்துச் சொல்லி, மேல் முறையீடு செய்யும் திட்டத்தைக் கைவிட்டு தமிழ்நாட்டில் உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் இளவல் கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் சமச்சீர் கல்விப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி, உடனடி யாக வகுப்புகள் நடைபெற ஆவன செய்ய வேண்டு மென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் திரு.வைகோ விடுத்துள்ள அறிக்கையில் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் நெறி முறையற்ற தான்தோன்றித்தனமான போக்கை வன்மையாகக் கண்டித்ததோடு, உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கூறியிருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது என்றும், உயர்நீதி மன்றத் தீர்ப்பை மதித்து அதிமுக அரசு செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சித் தலைவ ரான நண்பர் பொன். குமார் ஜெயலலிதா தனது பிடி வாதத்தை கைவிட்டு சமச்சீர் பாடத் திட்டத்தை அமல்படுத்தவேண்டுமென்று அறிக்கை விடுத்து உள்ளார். கல்வியாளர்கள் பேராசிரியர் மாக்ஸ், பேராசிரி யர் கல்யாணி, எஸ். ராஜகோபாலன், பிரின்ஸ் கஜேந்திரபாபு, அருமைநாதன், முனைவர் முத்துக் குமரன், சாமி சத்தியமூர்த்தி, விஜயன் போன்றவர் களும், தம்பி முனைவர் பொன்முடி, மூத்த வழக் கறிஞர் தம்பி இரா. விடுதலை, ஆசிரியர் பிரதிநிதி மீனாட்சிசுந்தரம் போன்ற வர்கள் எல் லாம் சமச்சீர் கல்வியை உடனடியாக நடைமுறைப் படுத்த தமிழக அரசு முன்வர வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள்.

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் இந்தத் தீர்ப்பில் தெரிவித்துள்ள அத்தனை கருத்துக்களையும் ஆழமாகப் படித்துப் பார்த்தால், அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி முறைக்கு திருத்தத்தை ஏன் கொண்டு வந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

எனவே இதிலே அரசு பெருந்தன்மையாக தமிழ் நாட்டு மாணவர்களின் நலன் கருதியும், அவர்களது பெற்றோர்களின் தவிப்பினை உணர்ந்தும் இந்தத் தீர்ப்பில் மேல் முறையீடு செய்யாமல் உடனடியாக 22ஆம் தேதிக்குள் மாணவர்களுக்குப் புத்தகங்கள் கிடைத்து அவர்கள் தங்கள் கல்வியைத் தொடர வழிவகுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி: முரசொலி, 20.7.2011

குற்றம் செய்த அதிமுகவினருக்கு 'பாலாபிஷேகம்' செய்யும் அரசு: கருணாநிதி

அ.தி.மு.கவினர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கும் போதே அவர்களுக்கெல்லாம் 'பாலாபிஷேகம்' செய்துவிட்டு, தி.மு.கவினரை மாத்திரம் பயமுறுத்துவது என்ன நியாயம்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி விவரம்:

கேள்வி: சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை வழங்க மறுத்ததோடு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறதே?

பதில்: அந்த வழக்கினை 26ம் தேதி இறுதியாக விசாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது சமச்சீர் கல்விக்குச் சாதகமாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி வருகின்ற தீர்ப்புக்கு வரவேற்பும் வாழ்த்தும் கூற வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.

கேள்வி: ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டதே?

பதில்: மகிழ்ச்சி.


கேள்வி: அ.தி.மு.க. அரசு பொய் வழக்குகள் போடுவதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறீர்களே?

பதில்: நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், வேண்டுமென்றே, கட்சியைப் பலவீனப்படுத்தவும், கழக தோழர்களைப் பயமுறுத்தவும், பொது மக்களிடையே பீதியை உண்டாக்கவும் முயற்சி செய்யாதீர்கள் என்று நான் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கிறேன்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக இதில் கட்சி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அ.தி.மு.க.வினர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கும் போதே அவர்களுக்கெல்லாம் 'பாலாபிஷேகம்' செய்துவிட்டு - தி.மு.கவினரை மாத்திரம் பயமுறுத்துவது என்ன நியாயம்?

கேள்வி: கோவை பொதுக் குழுவில் என்ன மாதிரி விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளது?

பதில்: இதுபோன்ற விஷயங்களும் விவாதிக்கப்படும். இதையெல்லாம் எப்படி தி.மு.க. சந்திப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கேள்வி: தி.மு.க. ஆட்சியில் தியாகராய நகர் போன்ற பகுதிகளில் பல கட்டிடங்களுக்கு விதிகளை மீறி சி.எம்.டி.ஏ. அனுமதி கொடுத்திருப்பதாகவும், அதனால் அவைகளையெல்லாம் இடிக்கப் போவதாகவும் சொல்கிறார்களே?

பதில்: அப்படி ஏதாவது நடைபெற்றிருந்தால், அவைகளைச் சட்டப்படி சுட்டிக் காட்டினால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

கேள்வி: நித்தயானந்தா சாமியார் அந்தரத்தில் பறக்க வைக்கப் போவதாக தெரிவித்தது, பகுத்தறிவாளர்களையெல்லாம் முகம் சுளிக்க வைத்திருக்கிறதே?

பதில்: எந்தச் சாமியார்களுடைய லீலைகளும், அற்புதங்களும்- தி.மு.கவின் பகுத்தறிவு கொள்கைக்கு ஏற்புடையதல்ல. அதற்காக அந்த சாமியார்களின் மீதோ, துறவிகளின் மீதோ தனிப்பட்ட முறையில் தி.மு.க. எத்தகைய தாக்குதலையும் நடத்தியதில்லை.

செவிடன் காதில் ஊதிய சங்கு-கி.வீரமணி:

இந் நிலையில் தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்து, பிள்ளைகளின்- பள்ளி மாணவர்களின் கல்வியைப் பாழாக்காமல், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த அத்தனைக் கட்சிகளும், தலைவர்களும், கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் விடுத்த வேண்டுகோள் தமிழக அரசுக்குச் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்டது.

மீறிச் சென்று தடை ஆணை கோரியதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தமிழக அரசு காலதாமதம் இனியும் செய்யாமல், பள்ளிக்கூடங்களை, பாடங்கள் நடத்தும் கூடங்களாகச் செய்து, உடனடியாக ஏற்கெனவே அச்சிடப்பட்ட சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கவலையைப் போக்கிப் பொறுப்புணர்ச்சியோடு தமிழக அரசு கடமையாற்ற முன்வரவேண்டும். இனிமேலும் இதை கவுரப் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்! நியாயம் கிட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.