Search This Blog

Tuesday, June 18, 2013

தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட உயிரையும் கொடுக்கத் தயார்

தமிழர்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்பட வைக்க உயிரையும் கொடுத்து போராடுவோம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.
திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நேற்று (17-6-2013) சென்னை, கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க.நிர்வாகக்குழுக் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு:-

நான் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண் டிருக்கின்ற நிலையில், இன்றைய நிர்வாகக் குழு நடைபெற்று தீர்மானங்களையும் நீங்கள் நிறை வேற்றிக் கொடுத்திருக்கின்றீர்கள்.   ஏன் பல ஆண்டு களாக எதிர்பார்த்த நிலை என்று சொன்னேன் என்றால்,  எப்போதுமே நம்முடைய  செயற்குழு, பொதுக் குழு, நிர்வாகக்குழு இவைகளில், தீர்மானம் என்பது ஏதோ ஒரு துணைச் சடங்காகத்தான் கருதப்பட்டு,  எல்லோரும் பேசி முடித்த பிறகு,  ஒருவர் எழுந்து தீர்மானங்களைப் படித்து இதை யெல்லாம் நிறைவேற்றியதாக எடுத்துக் கொள் கிறோம் என்று சொல்வதுதான் சர்வ சாதாரணமாக நடைபெற் றிருக்கின்றது.  ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் முற்றிலும் மாறுபாடாக, ஒவ்வொரு தீர்மானத்தையும்  தீர்மானக் குழு ஏற்கனவே  கலந்து பேசி, எழுதி, உங்கள் முன்னால் வைத்து  நிறை வேற்றி, முடிவுரைக்கு என்னிடத்திலே வழங்கியிருக் கிறார்கள் என்பதை எண்ணும்போது, இப்படித் தான் நம்முடைய செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு இனிமேல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற அந்த எண்ணத்தை நான் கொள்ளுகின்றேன்.
இதை நீங்களும் கடைப்பிடித்ததற்கு இந்த நாள் ஒரு வழிகாட்டும் நாளாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
வாய்க்கால் பிரச்சினையல்ல வாழ்வாதாரப் பிரச்சினை
தீர்மானங்களில் மிக முக்கியமாக நாட்டுப் பிரச்சினை, மக்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை  இவைகளைப் பற்றியெல்லாம் இங்கே ஆய்ந்து எழுதப்பட்டிருக்கின்றன, வெளியிடப் பட்டிருக்கின்றன, உங்களால் வரவேற்கப்பட்டிருக் கின்றன.   இந்த தீர்மானங்களில் மிக முக்கியமானது,  சேதுக் கடல் பிரச்சினையாகும்.   நான் ஏன் இதை சேதுக் கடல் என்று சொன்னேன் என்றால், நம்முடைய நண்பர்கள் சிலர் இதை சேதுக் கால்வாய் என்று கூறியதன் காரணத்தால், நமக்கே  இது சிறு கால்வாய் பிரச்சினை போலும், இந்தக் கால்வாய் பிரச்சினையை  ஏன் கட்டிக் கொண்டு அழுகிறார் கள் என்று நினைக்கத் தோன்றும்.   இது வெறும் கால்வாய் பிரச்சினை அல்ல, வாய்க்கால் பிரச்சினை அல்ல,  இது நம்முடைய வாழ்வாதாரப் பிரச்சினை.   வருங்கால தமிழகத்தினுடைய பிரச்சினை.  இன்றைக்கு இதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விட்டால், கால்வாய்தானே, வாய்க்கால் தானே என்று அலட்சியப்படுத்தி விட்டால்,  இது பெரிய சமுத்திரப் பிரச்சினை என்பதை கோடிட்டுக் காட்ட வேண்டிய அவசியம் எனக்கு ஏன் ஏற்பட் டிருக்கிற தென்றால், நம்முடைய பெருந் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்  தன்னுடைய வாழ்நாளில் கண்ட கனவுகளில் ஒன்றாக கருதியது, கடைசி வரையிலே நிறைவேறும் என்று எதிர் பார்த்தது, அதற்காக வாதாடியது, போராடிய தெல்லாம்  இந்த சேது சமுத்திரத் திட்டத்திற்காகத் தான்.   அந்தத் திட்டத்தை சீர்குலைக்கின்ற முயற்சி நாம் எதிர்பாராத விதமாக இன்றைக்கு நடை பெறுகின்ற இந்த அரசின் சார்பிலேயே நடை பெறுவதை காணும் போது,  வேதனைப்படுகிறோம்.  நாடு பாலைவனமாகும்!
எனக்கு இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த ஆட்சியின் மீது வேறு பல குறைகள் இருந்தாலும், வேறு பல ஆத்திரங்கள் இருந்தாலும், இந்த ஆட்சி தொடர வேண்டுமா என்கின்ற ஆதங்கம் இருந் தாலுங்கூட, மிக மிக கோபத்தை, ஆத்திரத்தை, எதிர் காலத்தில் நம்முடைய தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வைப் பாழாக்குகின்ற வகையில் இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் எடுத்திருக்கின்ற முயற்சியை ஒருக்காலும் நாம் அனுமதிக்க முடியாது.  இன்றைக்கு அனுமதித்தால், சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்ற செல்வி ஜெயலலிதா வின் அந்தக் கூற்றை உச்ச நீதி மன்றத்திலே கொண்டு போய் வழக்காக ஆக்கியிருக்கிறார்களே, அந்த வழக்கில் அவர்கள் வெற்றி பெற்றால், நம்முடைய வாழ்க்கை  - நம்முடைய என்றால், நம் தமிழ் நாட்டு மக்களுடைய வாழ்க்கை சூன்யமாகிவிடும், பாலை வனமாக ஆகிவிடும் என்பதை எண்ணிப் பார்க்கும் போது இந்தத் தீர்மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ இந்த ஆட் சிக்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அல்ல இது.   இது நம்மையே வருத்திக் கொள்கிற ஒரு பிரச்சினை.   நம்முடைய எதிர் காலத்தை அழிக்கின்ற ஒரு பிரச்சினை. நம்முடைய எதிர்காலத்தில் வருகின்ற சந்ததியினருக்கு, நம்முடைய குழந்தைகுட்டி களுக்கு, பேரன் பேத்தி களுக்கு  அவர்களுடைய வாழ் வாதாரங்களுக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டு விடக் கூடும் என்பதற்காகத்தான் இந்த நிலை.   ஒரு நாடு தலை சிறந்த நாடாக விளங்க வேண்டுமானால், பொருளாதாரத் துறையில், சமுதாயத் துறையில், வாணிபத் துறையில் மற்றும் கலாச்சாரத் துறையில் நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ வேண்டுமேயானால், அதற்கு போக்குவரத்து என்பது மிக மிக முக்கிய மானது. அந்தப் போக்குவரத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நாம் நம்முடைய தமிழகத்தை வளப்படுத்த,  தமிழ் நிலத் தைச் செழிப்பாக வைத்துக் கொள்ள என்றைக்கும் தமிழகத்திலே  பஞ்சம், பசி, பட்டினி என்ற அந்தக் கொடுமைகள் நேராமலிருக்க ஒரு நிரந்தரமான வழிவகை என்றால், அது சேது சமுத்திரத் திட்டம் போன்ற மாபெரும் திட்டங்கள்தான்.
அந்தத் திட்டங்களை ஒவ்வொன்றாக கை விட்டு, தமிழகத்தைப் பாலை நிலமாக ஆக்கி விட நாம் இன்றைக்கு அனுமதித்தால், எதிர் காலம் நம்மை சபிக்கும்.   அதை நாம் தமிழ்நாட்டு மக்களுக்கு உறுதிபட எடுத்துச் சொல்ல வேண்டும்.
சிறப்புப்பாயிரம்!
போராட்டம் என்று இன்றைக்கு நாம் அறிவிக் கின்ற நிலை  பல கட்டங் களாக நடைபெற வேண் டிய ஒன்று.   அதிலே ஒரு கட்டம் தான், இன்றைக்கு இந்த நிர்வாகக் குழுவிலே நாம் நிறைவேற்றுகின்ற தீர்மானம்.   அந்தத் தீர்மானத்தை  சிறப்புப் பாயிரம்  என்றே வைத்துக் கொள்ளலாம்.   இந்தத் தொடக்கக் கட்டத்திலே நாம் எடுக்கின்ற முடிவுகள், இறுதிக் கட்டத்திலே வெற்றிகரமாக நடைபெற்றது  என்ற அந்த முடிவை நோக்கிச் செல்கிற போராட்டமாக இருக்க வேண்டும்.   ஏதோ ஆர்ப்பாட்டத்திற்காக, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும்  100 பேர்,  200 பேர் கையிலே கொடிகளைத் தாங்கி, அட்டை களைத் தாங்கி, அரசைக் குறை கூறி, கண்டித்து ஒலி எழுப்புவது மாத்திரமல்ல.
அந்த ஒலி எழுப்புவதற்கு முன்னால் மறைந்திருக்கின்ற நம்முடைய உணர்வுகளையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.  அந்த வகையிலே  வரும் ஜூலை 8ஆம் தேதியன்று நம்முடைய தொடக்கக் கட்டப் போராட்டம்.   அதை எந்தெந்த வகையிலே நடத்துவது என்பதை அடுத்தடுத்து நாம் வெளியிடுகின்ற அறிக்கைகள் மூலமாக வெளிப்படுத்தவிருக்கிறோம்.   ஜூலை 8,  தொடக்கக் கட்டப் போராட்டம் என்று சொல்லி யிருக்கிறோம்.   முதல் கட்டப்போராட்டம் என்று கூடச் சொல்லவில்லை.   தொடக்கக் கட்டப் போராட்டம் என்று சொல்கிறோம்.   தொடங்கி விட்டால், அந்தப் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.  நாம் வெற்றி பெறுகிற வரையிலே நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்பதற்காகத்தான்,  இதை முதற்கட்டம் என்று போட்டால், இரண்டாம் கட்டம், மூன்றாவது கட்டம் என்றெல்லாம் சலித்துப் போய் விடும் என்பதற்காகத் தான் தொடக்கக் கட்டம் என்று கூறப்பட்டிருக்கிறது.  ஆகவே இந்தத் தொடக்கக் கட்டப் போராட்டத்தில் நீங்கள் காட்டுகின்ற  உணர்வும், நீங்கள் கட்டிக் காக்கின்ற ஒற்றுமையின் விளைவும்  எதிர்காலத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தை மாத்திரமல்ல, தமிழகத்தையே வாழ வைக்கக்கூடிய அளவிற்கு இருந்தாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிர்வாகக் குழுவிலே நான் என்னுடைய உரையில் மிக மிக மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
உயிரையே இழக்கத் தயார்!
வெற்றி தோல்விகள் அல்ல -  நாம் எதிர்பார்ப்பது.  நாம் அடைய இருக்கின்ற ஒரேயொரு வெற்றி, விரும்புகிற ஒரேயொரு வெற்றி, தமிழ் நாட்டு மக்களை  நம்முடைய காலத்திலே வாழ வைப்ப தற்கான பாதுகாப்பைச் செய்து விட்டுப் போனோம் என்ற அந்த வெற்றியைத்தான் நான் பெரும் வெற்றியாகக் கருதுகிறேன்.   அந்த வெற்றிக்கு நீங்கள் எல்லாம் ஒத்துழைக்க வேண்டுமென்று உங்களை யெல்லாம் கேட்டுக் கொண்டு,  எதிர்காலத் தமிழகம் இருண்ட நாடாக ஆகி விடாமல் இருக்க, பொருளா தாரத்திலே  பொலிவு பெற்ற நாடாக இருக்க, வளங்களிலே எந்த நாட்டிற்கும் வளையாத, நிமிர்ந்த நாடாக விளங்க  இது போன்ற திட்டங்கள் தேவை, அந்தத் திட்டங்களை வேண்டாமென்று சொல் வதே, அந்தத் திட்டத்தை அழிக்க நினைப்பதே - ஜெயலலிதா அல்ல, வேறு யாராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்தவர்களாக ஆக மாட்டார்கள், தீமை செய்தவர்களாகத் தான் ஆவார்கள்.  எனவே அந்தப் பழிக்கு அவர்கள் ஆளாக வேண்டாம் என்று நான் உங்கள் மூலமாக, இந்த நிர்வாகக் குழுவிலே கேட்டுக் கொண்டு, நாம் தொடங்குகின்ற போராட்டம் தொடங்கட்டும், அந்தப் போராட்டத்திற்கு முதல் கட்டம் எது, இரண்டாவது கட்டம் எது என்பதையெல்லாம் அவ்வப்போது தீர்மானித்து ஏடுகள் வாயிலாக நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்.   கடைசி கட்டமாக, நாம் நம்முடைய உயிரையே இழக்கத் தயார் என்றாலும், அதற்கும் நாம் தயார் என்ற அளவிலே இந்தப் போராட்டத்திலே வெற்றியைக் குவிப்போம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் அவர்கள் உரை யாற்றினார்.

Thursday, June 13, 2013

காங்கிரசுடன் இருந்த உறவை வெட்டியவர் யார்?

சென்னை : காங்கிரசுடன் ஒட்டியிருந்த என்னை வெட்டி விட்டது யார் என்று திமுக தலைவர் கருணாநிதி பேசினார். சென்னையில் நேற்று நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: இந்த திருமண விழாவில் தலைமை தாங்கி நடத்தி வைக்க வேண்டுமென்ற அழைப்பை, ஆணையாக ஏற்று உரிய நேரத்தில் திருமணத்தில் கலந்து கொள்ளவதற்காக காலை உணவைக் கூடத் தியாகம் செய்து விட்டு வந்துள்ளேன். மணவிழாவில் பல கருத்துகளை அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நான் அவர்களோடு ஒட்டி இருக்க வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஒட்டி இருந்த என்னை, வெட்டி விட்டது யார் என்பது அவருக்கே தெரியுமென்று கருதுகிறேன். அதனால் நான் அதைப் பற்றி விரிவாக பேச விரும்பவில்லை. இது போன்ற திருமண நிகழ்ச்சிகளில் அரசியல் பேசுவது பொருத்தமாக இருக்காது என்பதை நான் நன்றாக அறிவேன். ஆகவே அந்தப் பிரச்னையை இதோடு நிறுத்தி விடலாம்.

துரைமுருகன் உள்ளிட்ட பலரும் எடுத்துக்காட்டியதைப் போல தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகள் கடந்த காலத்தில் ஒருவிதமான பல நிகழ்வுகளுக்குக் காரணமாக இருந்து அமைந்த ஆண்டுகளாக ஆகிவிட்டது என்பதை உணர்ந்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பண்பாடு என்பது தமிழர்களுக்கு உரிய ஒன்று.
அதிலும் தமிழர் பண்பாடு, தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு, அதே நேரத்தில் தமிழினத்தின் மரியாதையையும் காப்பாற்றுவதற்காக உள்ள பண்பாடாகும். இந்த மன்றத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து மணமக்களை வாழ்த்துகிறோம் என்றால், இந்த நிலை தான் தமிழகத்தில் வளர்த்துள்ள பண்பாட்டின் சின்னம்.
அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதல்ல அவருடைய உள்ளம் தமிழ் உள்ளமாக இருக்கிறதா? தமிழர்களின் நாகரிகத்தை, கலையை, கலாச்சாரத்தைப் போற்றுகின்ற பண்பாடு கொண்ட உள்ளமாக இருக்கிறதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நேற்று இரவு முதல் என் செயலாளரிடம் எத்தனை மணிக்கு திருமணத்திற்குப் போக வேண்டும் என்று நான் வலியுறுத்தி கேட்ட போது, அவர் 9.30 மணிக்கு திருமணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள், 10 மணிக்குப் போனால் போதும் என்று சொன்னார். நானும் அதை நம்பி, 10 மணிக்குப் போனால் போதும் என்பதற்காக, காலைப் பணிகளை எல்லாம் முடித்து விட்டுப் புறப்படும் போது, திருமணத்திற்கு நேரமாகி விட்டது, முதல் நாள் 10 மணிக்குப் போனால் போதும் என்று சொன்னவர்கள், நேரமாகி விட்டது என்று என்னை அவசரப்படுத்தினார்கள். அதற்குப் பிறகு நான் காலை உணவை மதிய உணவோடு சேர்த்துச் சாப்பிட்டு விடலாம் என்று எண்ணிக் கொண்டு, காலையில் உணவு அருந்தாமல் இங்கு வந்து கலந்து கொண்டிருக்கிறேன்.

இதற்காக மணவிழா முடிந்ததும் காலை உணவு அருந்தி விட்டுச் செல்லுங்கள் என்று கூறக் கூடாது. அதற்கு நான் வீட்டுக்குச் செல்வேன். இவ்வாறு கருணாநிதி பேசினார். முன்னதாக மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன், காங்கிரஸ் முன்னாள் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் பேசினார்கள்.

சேது சமுத்திர திட்ட எதிர்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்


திருப்பூர் : மக்கள் பிரச்னைகளை பேசும் சட்டமன்றம் ஜெயலலிதாவின் புகழ்பாடும் பஜனை மடமாக மாறிவிட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு பொதுகூட்டம் திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் வெள்ளகோவிலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. திருப்பூர் மாவட்ட திமுக செயலா ளர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் சிவாசபாபதி வரவேற்றார். திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நிதியாக 4 கோடியே 55 லட்சத்து 55 ஆயிரத்து 555 ரூபாய் திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் வழங்கினார். 

பின்னர் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற திமுக தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால்  தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்த அதிமுக, இன்றைக்கு அந்த திட்டமே தேவையில்லையென்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததன் மூலம் தமிழ்நாட்டுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறது.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமால் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக திமுக ஆட்சிகாலத்தில் சமச்சீர்கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா அத்திட்டத்தை ரத்து செய்தார். உச்சநீதிமன்ற தலையீட்டினால் வேறு வழியில்லாமல் அத்திட்டம் அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

திமுக கொண்டு வந்த சமசீர்கல்வி திட்டத்தினால் இன்றைக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த இரண்டாண்டுகளில் அமைச்சர்களை பந்தாடியதுதான் ஜெயலலிதாவின் சாதனையாகும். 2012 ஆகஸ்ட் மாதத்திற்கு பின் முற்றிலுமாக மின்வெட்டு பிரச்னை தீர்க்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டது. 

ஆனால் இன்றும் மின்வெட்டு நீடிக்கிறது.மக்கள் பிரச்னை களை பேசக்கூடிய சட்டமன்றம் ஜெயலலிதாவின் புகழ்பாடும் பஜனை மடமாக மாறிவிட்டது. 
மாநில குற்ற தகவல் இணையதளம் தெரிவிக் கும் தகவல்படி கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு இருமடங்காக குற்றங்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. இன்றைக்கு மக்கள் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் வராதா என்று ஏக்க பெருமூச்சு விடுகின்றனர். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமிஜெகதீசன், முத்துச்சாமி, கரூர் சின்னச் சாமி, கே.சி.பழனிச்சாமி எம்.எல்.ஏ உட்பட பலர் பங்கேற்றனர்.

Tuesday, June 11, 2013

இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா? இல்லையா? தெளிவுபடுத்த கருணாநிதி கோரிக்கை

சென்னை: இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா? இல்லையா? விவசாயிகள் என்ன செய்ய வேண்டும், அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு என்ன செய்யப் போகிறது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். 
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
நாளை ஜூன் 12. வழக்கமாக மேட்டூர் அணை இதே நாளில் தான் ஒவ்வொரு ஆண்டும் சாகுபடிக்காக திறந்து விடப்படும். ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, ஒரு ஆண்டு கூட ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் தொடரும் சோகமாகி விட்டது. 
திமுக ஆட்சியில் கூட, சாகுபடிக்காக மேட்டூரில் தண்ணீர் திறந்து விடுவது ஜூன் 12ம் தேதி என்பது ஒரு சில ஆண்டுகளில் தள்ளிப் போயிருக்கலாம். ஆனால் 12ம் தேதிக்கு பின்னர் ஒரு சில நாட்களுக்குள் மேட்டூர் அணை சாகுபடிக்காக திறந்து விடப்பட்டு, விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்பட்டு விடும். 

ஆனால், கடந்த 3 ஆண்டு கால அதிமுக ஆட்சியை எடுத்துக் கொண்டால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் மட்டம் மிகவும் குறைந்து, வற்றி வறண்டிருக்கும் நிலையில் உள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வது பற்றி மிகப்பெரிய குழப்பமும், பதற்றமும் நிலவுகிறது.

கடந்த ஆண்டு அணையின் நீர் மட்டம் 79 அடியாக இருந்த போதிலும், நீர்வரத்து போதுமான அளவுக்கு இல்லாததால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவத்தில் ஏறத்தாழ 1.20 லட்சம் எக்டேர் என்ற இயல்பான பரப்பளவில், சுமார் 51 ஆயிரம் எக்டேரில் தான் நெல் சாகுபடி மேற்கொள்ள முடிந்தது.

நிலத்தடி நீரை நம்பி ஏறத்தாழ 60 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும் என்ற போதிலும், கடந்த ஆண்டு அதிமுக அரசு உறுதியளித்தபடி மும்முனை மின்சாரம் முழுமையாக கிடைக்காததால், குறுவை சாகுபடி பரப்பளவு பெரிதும் குறைந்தது. 
இந்த ஆண்டில், கடந்த 6 மாதங்களாக காவிரி வறண்டு கிடந்ததால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்டது. அதிமுக ஆட்சியை பொறுத்தவரையில் தமிழக விவசாயிகளின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு, அண்டை மாநிலத்தோடு நல்ல வகையில் பேசி சுமூகமான முறையில் தேவையான நீரை பெற்றிட முயலாமல், எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் பேசுவதும், எல்லோரும் தனக்கு கீழ்ப்படிந்து வேலை செய்பவர்கள் என்று நினைப்பதும், எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதும், மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதும் என்ற போக்கில் செயல்படுவதன் காரணமாக, உண்மையில் பல வகையிலும் பாதிக்கப்படுவோர் தமிழ்நாட்டு விவசாயிகள்தான். 

எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடுவதன் காரணமாக, கர்நாடக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி தலைவர்களையும், முன்னாள் முதலமைச்சர்களையும் அழைத்து இதற்காகவே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி அவர்களின் கருத்தை அதாவது, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்து விட்டதால், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று இன்றைய தினம் டெல்லியில் கூடுகின்ற தற்காலிக காவிரி குழுவிடம் கேட்போம் என்று பேரவையில் கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். 

அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னையில் ஜெயலலிதா அரசின் சார்பில் எந்த பதிலும் கூறாத நிலையில், கி. வீரமணி விடுத்த அறிக்கையில், நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் ஆகி விட்டதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கூறுவது சரியல்ல. இறுதி தீர்ப்பு என்பது எதிலிருந்து சட்டப்படி கணக்கிட வேண்டுமென்றால், மத்திய அரசிதழில் வெளியானதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகே மறுபரிசீலனையை எந்த மாநிலமும் கோர முடியும்.

நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளிவந்த நாள் பிப்ரவரி 5, 2007. அது கெசட்டில் வெளியிடப்பட்ட நாள் பிப்ரவரி 19, 2013. இதன்படி மறுபரிசீலனை மனு மூலமாக 2018ல் தான் விண்ணப்பிக்க முடியும். மேலும் நிரந்தர குழுவும் இன்னும் அமையவில்லை. எனவே, இது ஒரு திசை திருப்பல் நாடகம் ஆகும். 

கர்நாடகத்தில் அடிக்கடி அனைத்துக் கட்சிக்கூட்டம் ஒருமித்த முடிவு. தமிழ் நாட்டில், அனைத்துக் கட்சி கூட்டம் எப்பிரச்னையிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்ததே இல்லை. எத்தனையோ பேர் கத்திப் பார்த்து ஓய்ந்து போனாலும், ஒத்தக்கருத்து கூட கர்நாடகத்தை போல எளிதில் இங்கே வராது என்பது மேலும் வேதனை தரத்தக்கதாகும். தமிழ்ச் சமுதாயமே, அந்தோ. உன் கதி இப்படித்தானா? டெல்டா விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முடிவே இல்லையா? வேதனை. வெட்கம் என்று தன் உணர்ச்சிக் கொந்தளிப்பை கொட்டியிருக்கிறார். 
ஆம், கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் சாகுபடி பொய்த்துப் போன அதிர்ச்சியில் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக் கும் தமிழக அரசின் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்படாமல், அதிலேயே ஒரு சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டது. அதுபோலவே விவசாயிக ளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் அரசின் சார்பில் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை முறையாக வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து நாளேடுகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. 
சாகுபடி செய்யாத தரிசு நிலங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுவதாகவும், சாகுபடி செய்த நிலங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்றும் புகார்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கின்றன. நிலத்தின் உரிமையாளரும், விவசாயம் செய்தவரும் வெவ்வேறு நபர்களாக இருப்பதால், நிவாரணத் தொகை யாருக்கு வழங்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் அறிவித்த தொகையை விட மிகவும் குறைவாக ஏக்கருக்கு ரூ.3,000 மட்டுமே நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறதாம். கிராமநல அதிகாரிகள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சிலர் நிவாரண தொகையில் ரூ.500 முதல் ரூ.1000 வரை பிடித்தம் செய்து கொள்கிறார்களாம். வறட்சி நிவாரணத் தொ கையில் பயிர்க் கடன் வசூலிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்ட போதிலும், சில கூட்டுறவு வங்கிகளில் வறட்சி நிவாரணத் தொகை கொடுக்கும்போதே, பயிர்க் கடன்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றதாம்.

விவசாயிகளின் இந்த துன்ப, துயரங்கள் பற்றி அதிமுக அரசு துளியேனும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர்களுக்கு எத்தனையோ வேலைகள். ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட வேண்டுமே, டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர் செய்வதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்களே என்பதை எண்ணிப் பார்த்து அரசின் சார்பில் அறிவுரை வழங்கப்பட வேண்டாமா? 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மத்திய அரசு காவிரி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் பாரா முகத்தோடு இருக்கிறது என்றும், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி நடுவர்மன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 

எனவே அதிமுக அரசு இனியாவது விழித்துக் கொண்டு, இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா? இல்லையா? சாகுபடி செய்ய நீர் கிடைக்குமா? கிடைக்காதா? விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றியும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பற்றியும் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கூடாது தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தல்


சென்னை, மே 29- இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டு கோள் என தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி: தமிழக மக்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு,  தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுமதிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் திரு. ஏ.கே. அந்தோணி தஞ்சையில் கூறியிருக்கிறாரே?
கலைஞர்:  இலங்கை ராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட ராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வரு கிறது;  ஆனால் தமிழக மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து அவர்களுக்குத் தமிழ கத்தில் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று நண்பர் ஏ.கே. அந்தோணி அவர்கள் தஞ்சை யில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.   மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட செய்திதான் இது.  ஆனால், இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத் தினருக்கு  இந்தியாவிலே எந்தப் பகுதியிலும்  பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே  உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள்.   இந்திய அரசிடம்  நாம் பலமுறை அந்த வேண்டு கோளை விடுத்து விளக்கியுள்ளோம்.   இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை. மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி அவர்களே, இலங்கையில் தமிழர் மறு வாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்று ஒருமுறை கூறியிருக்கிறார்.  இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட   இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், இந்தியாவில் இலங்கை ராணு வத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை  தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை.  அந்த அரசியல்வாதிகள் எழுப்பும் விவகா ரங்கள் வெறுப்புணர்வால் ஏற்பட்டவை என்று கூறினார்.  அப்போதே அதற்குப் பதி லளித்த மத்திய அமைச்சர் அந்தோணி அவர்கள், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்டவை என்று நான் கருதவில்லை.  இலங்கையில்,  அரசு சில நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இப்போதும் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள்  எதிர்பார்த்த  அளவில் இல்லை.  ஒருபுறம்  தமிழகத்தின் உணர்வுகளையும் நாம் மதித்து நடந்துகொள்வோம்.  எனவே தமிழகப் பகுதிகளில் ராணுவப் பயிற்சி அளிக்காமல் தவிர்ப்போம்.
அதே சமயம் மற்றப் பகுதிகளில் உள்ள ராணுவ அமைப்புகளில் இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம் என்று கூறினார். இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத் தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோள். இந்த உண்மையை நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள் புரிந்து கொண்டு அதற் கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்பதே மீண்டும் மீண்டும் நாம் விடுக்கின்ற கோரிக்கை யாகும்.


மத நம்பிக்கை வளர்கிறதா? குறைகிறதா?
கேள்வி:  மத  நம்பிக்கை வளர்கிறதா? குறைகிறதா?
கலைஞர்:  அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பைக் கூறுகிறேன். அந்தக் கருத்துக் கணிப்பு 2005ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதற்கும் தற்போது எடுக்கப்பட்டதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டுவதாக உள்ளது.   2005ஆம் ஆண்டு  உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகமாக மத நம்பிக்கை கொண்டி ருக்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பை எடுத்த போது, இந்தியா முழுவதும் சுமார் 87 சதவிகிதம் பேர் மத நம்பிக்கையுடன் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு  மத நம்பிக்கைபற்றி அண்மையில் உலகம் முழுவதும் ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. 51 ஆயிரத்து 927 பேரிடம் இதுபற்றி கருத்துகள் கேட்கப்பட்டிருக்கின்றன.  இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று முன்தினம் லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.  இதில்  இந்தியர்களில் 81 சதவிகிதம் பேருக்கு மத நம்பிக்கை இருப்பது தெரியவந்துள்ளது. 2005ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 6 சதவிகித அளவிற்கு இந்தியர்கள் மதத்தின்  மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பட்டியலுக்கு மாறியிருப்பது தெரியவந்துள்ளது.  உலக அளவில் அசல் நாத்திகவாதிகள் என்று அந்தக் கணக் கெடுப்பில் தெரிய வந்திருப்பது,  சீனாவில் 47 சதவிகிதம்; ஜப்பானில் 31 சதவிகிதம்;  செக் குடியிருப்பில்  30 சதவிகிதம்;  பிரான்சில்  29 சதவிகிதம்;  இந்தியாவில்  3 சதவிகிதத்தினர் தான் அசல் நாத்திகவாதிகள் என்று அந்தப் புள்ளி விவரம் கூறுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி

சென்னை, மே 23- ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.
ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதி யதில் 10397 இடைநிலை ஆசிரியர் களும், 8,849 பட்டதாரி ஆசிரியர் களும் தேர்ச்சி பெற்றனர். இந்த தகுதித்தேர்வு மூலம், காலியாக இருந்த அனைத்து இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், தகுதியானவர்கள் கிடைக் காததால் சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வில்லை. காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.
எனவே, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு எப் போது நடத்தப்படும்? என்று இடை நிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர் பார்த்து வந்தனர். இந்த நிலையில், தகுதித்தேர்வுக் கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறுநாளும் (ஆகஸ்ட் 18) நடத்தப்பட உள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தகுதித்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் அதாவது 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு தடவை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த தால் அதிலும் குறிப்பாக ஆதி திராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சற்று மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தேர்ச்சி மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தகுதித்தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி களிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. அனைவருக்கும் ஒரே அளவுகோலா?
நடந்து முடிந்த தகுதித் தேர்வின் அடிப்படையில் 19 ஆயிரம் ஆசிரியர் கள் பணி நியமனம் செய்யப்பட் டுள்ளனர்.
இந்தத் தகுதித் தேர்வின் அடிப் படையில் சமூகநீதிக்கு - இடஒதுக்கீட் டுக்குக்  குந்தகம்  ஏற்படுத்தும் வகையில் அடிப்படையான தவறினை தமிழக அரசு செய்துள்ளது.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் - உயர் ஜாதியினர் அனை வருக்கும் தகுதி மதிப்பெண் 60 என்று நிர்ணயிக்கப்பட்டது.
தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழிகாட்டுதலுக்கு விரோத மானது இது.
தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆந்திராவில் உயர்ஜாதியினருக்கு 60, பிற்படுத்தப் பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோ ருக்கு 40 மதிப்பெண்கள் என்றும் அஸ்ஸாமில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55, ஒரிசாவில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப் பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,  தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலில் அதிமுக அரசு இறங்கி விட்டது. தகுதி மதிப் பெண்கள் 60 ஆக நிர்ணயிக்கப் பட்டதால் தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்பட முடியாத நிலையும்  ஏற்பட்டுள்ளது. இது குறித்து சட்டப் பேரவையில் கேள் விகள் எழுப்பப்பட்ட போது கல்வி அமைச்சர் இது அரசின் கொள்கை முடிவு என்று அறிவித்தார்.
தாழ்த்தப்பட்டவர்களையும், உயர் ஜாதியினரையும் சகட்டுமேனிக்கு சம நிலையில் வைத்து மதிப்பெண்களை நிர்ணயிப்பதுதான் அதிமுக அரசின் கொள்கை முடிவா?
ஏற்கெனவே செய்த அதே தவறை மறுபடியும் மறுபடியும் அதிமுக அரசு செய்யத் தொடங்கி விட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு ஆணையை நிர்ண யித்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். 1980 மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வினார் என்பதை நினைவூட்டுகிறோம். 7 லட்சம் பேர் தேர்வு எழுதும் மிக முக்கிய பிரச் சினையில் அதிமுக அரசு மாபெரும் அநீதியை இழைத்துள்ளது.
அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிவிக் கப்பட்டுள்ள இந்தக் கொள்கை முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. அடுத்து நடத்தவிருக்கும் தகுதித் தேர்வும்  தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதல்படி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்யுமா?

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அவசரமாக தொடங்கியது ஏன்? தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி



தி.மு.க தலைவர் கலைஞரின் 90ஆவது பிறந்த நாள் விழா மற்றும் ஒகேனக் கல் கூட்டு குடிநீர் திட் டம் வழங்கிய தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோ ருக்கு பாராட்டு விழா ஓசூரில் நேற்று (9.6.2013) மாலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். நாடாளு மன்ற உறுப்பினர் இ.ஜி.சுகவனம் மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
கலைஞரால் உரு வாக்கப்பட்ட ஒகேனக் கல் கூட்டு குடிநீர் திட் டத்தை முழுமையாக நிறைவு பெறாத நிலை யில் அவசர அவசரமாக தொடங்கி வைத்துள்ள னர். தி.மு.க ஆட்சியில் 90 சதவீத பணிகள் முழுமை பெற்றிருந்தன. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் 10 சதவீத பணிகள் முடிக்க தாமதம் ஆனது.
கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதால் தாமதப்படுத்தினார்களா?. திட்டத்தை தாமதப் படுத்த என்ன காரணம்? என்று கேட்டேன்.
என்னிடம் 2 மாதம் இந்த பணிகளை முடிக் கும் அதிகாரத்தை தாருங் கள், முடித்து தருகிறேன் என்று கூறினேன். இதை பார்த்த ஜெயலலிதா, அவசரமாக இந்த பணி களை முடித்ததாக கூறி தொடங்கி வைத்தார்.
தருமபுரி, கிருஷ்ண கிரி மாவட்டத்தில் 30 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் இந்த திட்டம் தி.மு.க ஆட்சி யில் தொடங்கப்பட்டு பணிகள் நடந்தது. ஆனால் தி.மு.க ஆட்சி யில் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டதாக இந்த மாவட்டஅமைச் சர் அபாண்டமான பொய்யை கூறி வருகிற ர். 1997இல் தி.மு.க ஆட்சியில் ரூ.576 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத் திற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
பின்னர் பொக்ரான் அணுசக்தி சோதனை யால் திட்டம் காலதாமத மானது. பின்னர் 2001 - 2006 அ.தி.மு.க ஆட்சி யில் அந்த திட்டம் கிடப் பில் போடப்பட்டது. இம்மியளவு கூட பணி நடக்கவில்லை. அவ் வாறு நடந்ததாக நிரூபித் தால் இதே மேடையில் நான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். 2006இல் தி.மு.க ஆட்சி யில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப் பேற்ற பிறகு இந்த திட் டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. ரூ.1928 கோடி ஜப்பான் நாட்டு நிதியுத வியுடன் இந்த திட்டம் 26.6.2008 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2 நாட் களுக்கு முன் ஓசூரில் நடந்த கூட்டத்தில் அ.தி. மு.க அமைச்சர் கே.பி. முனுசாமி என்னிடம் 3 கேள்விகள் கேட்பதாக கூறினார்.
நீங்கள் அமைச்சர், நான் தான் உங்களிடம் கேட்க வேண்டும். எதிர் கட்சியிடம் தான் ஆளுங் கட்சியினர் பதில் கூற வேண்டும். 2012 இல் முடிக்க வேண்டிய இந்த திட்டம் தாமதமாக யார் காரணம்? இப்போது தொடங்கி வைத்ததாக கூறுகிறீர்களே, இன்னும் 50 சதவீத இடங்களுக்கு கூட தண்ணீர் போய் சேரவில்லை. இதை நான் ஆதாரபூர்வமாக நிரூபிப் பேன்.
எங்களை மைனா ரிட்டி ஆட்சி என்று கூறினார்கள். இப்போது நடப்பது 110 ஆட்சி. சட்டமன்றத்தில் எதிர் கட்சி உறுப்பினர்கள் பேச வாய்ப்பு தருவ தில்லை. அது முதல்வரை பஜனை பாடும் மடமாக உள்ளது. சேது சமுத்திர திட்டத்தை தடுக்க அ.தி. மு.க அரசு முயற்சிக் கிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் அதிகளவில் நடக்கிறது. இந்த ஆட்சியில் பத்திரி கைகள் மீது மட்டுமல்ல, டி.வி செய்தி வாசிப்பா ளர்கள் மீது கூட வழக் குகள் போடப்படுகிறது. இதே நிலை நீடித்தால் டி.வி பார்ப்பவர்கள் மீது வழக்கு பதியும் நிலை ஏற்படும். சசிகலா குடும் பத்தினர் மீது எதற்காக வழக்கு போடுகிறார்கள்? எதற்காக விடுவிக்கிறார் கள் என்று தெரியவில்லை.
-இவ்வாறு மு.க.ஸ்டா லின் பேசினார்.