Search This Blog

Thursday, November 18, 2010

வாய்தா ராணியின் சாதனைகள்

நான்கு வருட தூக்கம் கலைந்து கொடநாட்டில் இருந்து கொண்டு அறிக்கைவிடும் அறிக்கை நாயகி வாய்தா ராணி, இன்று தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சியை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் அடுத்து முதல்வர் ஆகிவிடலாம் என பகல்கனவு கொண்டிருக்கும் ஊழல் ராணியின் சாதனையை சொல்ல வார்த்தைகள் இல்லை. இதோ சில சாதனைகள் சாம்பிளுக்காக ....



டான்சி கொள்ளைய சொல்றதா? அதன் பிறகு கோர்டில் அந்தர் பல்டி அடித்ததை சொல்லவா?

ஊழல்மகாராணி பட்டம் கிடச்சத சொல்றதா?

வாஜ்பாய பதிமூணு நாளில் அரசியல் கொலை செய்து ஆட்சியை கலைச்சத சொல்றதா? அதன் பிறகு தன் வாழ் நாளில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த அந்த பதின்மூன்று நாள்களும் தான் கருப்பு நாள்கள் என்று சொன்னதை சொல்லவா?

பாவப்பட்ட கல்லூரி மாணவிகளை எரிச்சு கொன்னத சொல்லறதா?

ஒரு ரூபாய் சம்பளத்தில் ஆயிரம் ஏக்கர் எஸ்டேட் வாங்கினத சொல்றதா அல்லது அதில் கட்டப்படும் டீ தொழிற்சாலையை சொல்லுறதா?

மணல் கொள்ளையடிச்சு, தமிழ்நாட்டை கூறுபோட்டத சொல்றதா?

சேஷன் முதல் சுப்ரமணிசாமி வரைக்கும் 'நல்ல காட்சி' காமிச்சத சொல்றதா?

ஒரே கையெழுத்தில் இரண்டு லட்சம் அரசு ஊழியர் டிஸ்மிஸ் பண்ணுனதை சொல்றதா?

சாலை பணியாளர்களை கொலைபட்டினி?

விவசாயிக்கு எலிக்கறி போட்டது?

நெசவாளர்களுக்கு காஞ்சி தொட்டி திறந்தது?

ஐநூறு கோடி செலவில் உலக புகழ் பெற்ற வளர்ப்புமகன் கல்யாணம்?

உனக்கும், உன் சசிக்கும் பெரிய்ய்ய்யய்ய இடுப்புக்கு ஒட்டியாணம் போட்டது, பல நூறு கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பதுக்கியது?

ஜோசியன் சொன்னதுக்காக கலைஞரை கொலைமுயற்சி செஞ்சு கைது செஞ்சது..செரீனா கஞ்சா கேஸ், சுதாகரன் கைது,

ராஜபக்சேக்கு ஆதரவு, போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது நியாயம் என்றது?

மகாமகம் படுகொலை..

கருணாநிதி கைது,

மாறன் தாக்கப்பட்டது,

கே.கே.எஸ்.எஸ்.ஆர் முகத்தில் ஆசிட் வீசியது,

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சட்டசபை உள்ளே தாக்கப்பட்டது,

பரிதி வேட்டியை உருவியது,

ஐ.எ.எஸ் அதிகாரி சந்திரலேகா மீது திரகவகம் வீசியது,

கருணாநிதி கைதை எதிர்த்து நடந்த பேரணியில் நிருபர்கள் உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டது,

முன்னாள் தலைமை தேர்தல் கமிசனர் டி.என். சேஷன் விமானநிலையத்தில் சிறை வைக்கப்பட்டது,

சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக சென்னை கோர்ட்டில் மகளிர் அணி சேலையை தூக்கி காண்பித்தது,

மணிசங்கர அய்யரை பாண்டிச்சேரி முதல் காரைக்கால் வரை துரத்தி துரத்தி அடிக்க முற்பட்டது,

ப.சிதம்பரம் மீது செருப்பை வீசியது,

முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டி தங்களிடம் தவறாக நடக்க முற்பட்டதாக சொன்னது,

செரீனா மீது கஞ்சா வழக்கு,....

இதெல்லாம் விட முத்தாய்ப்பாக படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் TNPSC யை மூடி தமிழக இளைஞர் வாழ்வில் மண்ணள்ளி போட்டதை சொல்லவா?

இது போன்று இன்னும் பல நூறு சாதனைகளை சொல்லலாம்.....

2 comments:

  1. இதெல்லாம் சில்லரை மேட்டர்.

    ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் எந்தப் பொந்தில் உள்ளது?
    எம்மாம் பெரிய பொந்து?

    ReplyDelete
  2. தலைவா நீங்க தான் ராசாவோட வழக்க விசாரிக்கிற நீதிபதியா?

    ReplyDelete