Search This Blog

Saturday, November 20, 2010

இது கலைஞர் ஸ்டைல்!


          னக்குப் பிடிக்கவில்லையென்றால் அவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும் கட்டம் கட்டி கட்சியை விட்டு தடாலடியாக நீக்கி விடுவார் ஜெயலலிதா. "இதுபோல ‘தலைவரே! அந்தாளு சரியில்ல.. கட்சிக்கு அவரால ஒரு பிரயோஜனமும் இல்ல..'’ என தி.மு.க. மா.செ.க்களும் அமைச்சர்களும் கலைஞரிடம் முறையிட்டு ‘நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்துவதுண்டு. அப்போதெல்லாம் ""இப்ப நீ கட்சில பெரிய பொறுப்புல இருக்கிற. நல்ல வசதியாவும்  இருக்குற.  ஆனா, நீ சொல்லுற ஆளு ஒரு காலத்துல கட்சிக்கு விசுவாசமா நடந்து என்னென்ன தியாகமெல்லாம் பண்ணிருக்காருன்னு எனக்கல்லவா தெரியும். உனக்கும் அவருக்கும் ஏதோ ஒத்துப் போக மாட்டேங்குது. அதுக்குக் காரணம், அவரை மதிக்காம நீ நடந்துக்கிட்ட விதம் கூட இருக்கலாம். இப்படி அவருக்கு பிடிக்காது, இவருக்கு பிடிக்காதுன்னு நான் நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சா கட்சி என்னாகும்? அவங்க பண்ணுன தியாகங்களை யெல்லாம் உதாசீனம் பண்ணின மாதிரில்ல ஆயிரும். உன்னை மட்டுமே நம்பி கட்சி நடத்த முடியாது. அவங்களையும் அரவணைச்சு மதிச்சு நடக்கப் பாரு. பழைய கட்சிக்காரன அவனோட சாதாரணமான நெலமய வச்சு மட்டமா எடை போடறத இப்பவே விட்ரு''’என படு சீரியஸாகவே கண்டிப்பார். அதே நேரத்தில், இப்பூசலுக்கு விரைவில் ஒரு தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். 

அப்படி ஒரு அம்சமாகத்தான், ""எந்தெந்த மாவட்டங்களில் யார் யாரையெல்லாம் கவுரவப்படுத்த    வேண்டும் என ஒரு பட்டியல் தயார் செய்து, தேர்தல் பணிக்குழுவுக்கு வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து வெவ்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பணியாற்ற கட்சியினரை நியமித்திருக்கிறார். இப்படி அவர்கள் வெளி மாவட்டங்களுக்கு போய் விடுவதால், அந்த மாவட்டத்தில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தேர்தல் நேரத்தில் குடைச்சல் குறைந்து நல்லபடியாக கட்சிப் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கை தலைவருக்கு உண்டு.  இத்தனை சாமர்த்தியமாக கட்சி நடத்த கலைஞர் ஒருவரால்தான் முடியும்''’என்கிறார் கட்சியின் சீனியர் ஒருவர்.
நக்கீரன்

2 comments: