Search This Blog

Monday, November 22, 2010

ஜெ கோட்டையைக் கலக்கிய அழகிரி!

திருவிழாக் கோலம் பூண்டிருந்தது ஆண்டிப்பட்டி. அப்பல்லோ மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனைகளை இணைத்து.. உ.பி.க்கள் இலவச மருத்துவ முகாமை கோலாகலமாக ஏற்பாடு செய்ய.... 18-ந் தேதி எல்லாப் பக்கமும் கூட்டமான கூட்டம்.

முகாமைத் தொடங்கி வைக்க உற்சாகத்தோடு ஆண்டிப்பட்டி நோக்கிப் புறப்பட்ட மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை வரவேற்க... க.விலக்கு தொடங்கி கடமலைக்குண்டு வரையி லான 26 கி.மீ.தூரத்திற்கும் மக்கள் கூட்டம், கொடி, தோரணங்கள், டிஜிட்டல் போர்டுகள் என அமர்க் களப்பட்டது. அ.தி.மு.க. கோட்டையிலேயே இவ்வளவு கூட்டமா’என ர.ர.க்களே திகைத்துப் போனார்கள்.

மக்கள் கொடுத்த மனுக்களுடன், விழாவில் மைக் பிடித்த அழகிரி ""இந்தத் தொகுதியில் இருந்து ஜெயித்த வர் உங்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பத்தே நாட்களுக்குள் உங்களுக்குத் தேவையான குடிநீர், சாலை, பேருந்து போன்ற வசதிகள் அனைத்தையும் செய்து தருவோம். அரசு நிதி தாமதமானால் என் சொந்தக் காசிலாவது உங்கள் குறைகளைத் தீர்ப்பேன்''’என்று சொல்ல... கூட்டம் ஆரவாரித்தது. முகாமுக்கு வந்தவர்களின் மனநிலை எப்படி?

பொன்னம்படகைச் சேர்ந்த மஞ்சனத்தம்மாளோ ""கொஞ்சநாளா பிரஷர், சுகர்னு கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தேன். ஆனா.. கலைஞர் கட்சிகாரங்க இப்படி ஒரு முகாமை நடத்தி மருந்து, மாத்திரை கொடுத்து தைரியமும் தந்திருக்காங்க. அவங்க நல்லா இருக்கணும்''’என்று கை கூப்பினார்.

கடமலைக்குண்டு பவுன்தாய் நம்மிடம் ’""ஆறுமாசமா கால் வலியால் அவதிப்பட்டுகிட்டு இருந்தேன். இங்க ஒரு ஊசி போட்டாங்க. இப்பவே கால் சரியான மாதிரி வலி குறைஞ்சிருக்கு'' என்றார் நெகிழ்ச்சியாய். ""கண் தெரியலைன்னு பல இடம் போனேன். ஒண்ணும் சரிப்படலை. இங்க பார்த்த டாக்டர்கள் கண்ல புரை இருக்குன்னு சொன்னதோடு நாளைக்கு மதுரை அப்பலோவுக்கு வந்து ஆபரேசன் பண்ணிக்கச் சொல்லியிருக்காங்க. சரியாயிடுமாம். அப்பல்லோவை நினைச்சுக்கூட பார்த்ததில்லை''’ -சொல்லும் போதே சின்னமனூர் ராஜின் கண்கள் கசிகிறது.

தன் குழந்தைக்கு சிகிச்சை பெற்று திரும்பிக்கொண்டிருந்த வருசநாட்டுக் கலாவோ “""விட்டுவிட்டு பிள்ளைக்குக் காய்ச்சல். நாளைக்கு மதுரை ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லியிருக்காங்க. இலவசமா எல்லா செக்கப்பும் பண்ணி குணப்படுத்திடலாம்னு சொல்லியிருக்காங்க. அது போதும்ங்க. இனி தேர்தல்ல தப்பு பண்ணமாட்டோம்''’என்றார் குரல் கமற.

""மலைமக்கள் உட்பட 11 ஆயிரம் பேர்வரை வந்திருக்காங்க. இதைக் கேள்விப்பட்ட கலைஞரே.. அழகிரியை போன்ல பிடிச்சி வாழ்த்தினார்னா பார்த்துக்கங்க''’என்கிறார் தி.மு.க., மா.செ. மூக்கையா பூரிப்பாய்.

அழகிரியின் ஆண்டிப்பட்டி விசிட்... ஜெ. தரப்பை ஆட்டம்காண வைத்திருக்கிறது.

-சக்தி
நக்கீரன் -24-07-2010

No comments:

Post a Comment