Search This Blog

Friday, November 19, 2010

சாமி தலையீடு பிரியும் -சி.பி.எம்


""ஹலோ தலைவரே... ... காங்கிரசுக்கு ஜெ விடுத்த அழைப்பை சி.பி.எம் சீரியஸாகப் பார்க்குதுன்னு போன முறைதான் பேசினோம்.''

""அவங்க தரப்பிலிருந்து ரியாக்ஷன் வந்திருக்குதே...''

""ஆமாங்க தலைவரே.. டெல்லியில் நடந்த பொலிட்பீரோ கூட்டத்திலேயே காரசாரமா இதுபற்றி விவாதிச்சிருக்காங்க. சீதாராம் யெச்சூரி பேசுறப்ப, சேதுசமுத்திரத்திட்டத்தில் சுப்ரமணிய சாமியின் ஆலோசனைப்படிதான் ஜெ செயல்பட்டார். அதேமாதிரிதான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் சாமியின் ஆலோசனைப்படி, காங்கிரசுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். நாம்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து ஒரே நிலையில் இருக்கிறோம். நாடாளு மன்றத்தில் எப்படி இந்தப் பிரச்சனையை அணுகனும்னு ஜெ, தேவகவுடா, அஜித் சிங்னு பலருக்கும் கடிதம் எழுதி ஒருங்கிணைத்தேன். ஆனா ஜெ.வோ ஸ்பெக்ட்ரமை காங்கிரஸ் ஆதரவு ஆயுதமா உபயோகிக்கிறார். நம்பகத்தன்மை இல்லாத அந்த அம்மையாரோடு நாம் இணைந்து நிற்பது எப்படி சரியா இருக்கும். சி.பி.ஐ. அ.தி.மு.க அணியில் இருந்தாலும் நாம் தனி அணி உருவாக்கலாம்னு சொல்லியிருக்கிறார்.''

""அவரோட குரலுக்கு என்ன ரெஸ்பான்ஸ்?''

""விஜயவாடாவில் தமிழக கூட்டணி பற்றி யெச்சூரி பேசியபோது, அதற்கு எதிரான குரல் கொடுத்தவர் டி.கே.ரங்கராஜன். ஆனா, இப்ப பொலிட்பீரோ கூட்டத்துக்கு மறுநாள் சென்னையில் நடந்த கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் யெச்சூரியின் டெல்லி குரலை ஆதரித்துப் பேசியவரும் அவரேதான். டி.கே.ஆர் சமீபத்தில் கலைஞரை சந்தித்ததையும் மறக்காமல் குறிப்பிடும் தோழர்கள், தி.மு.க-அ.தி.மு.க இல்லாத ஒரு அணி என்ற முடிவை நோக்கி சி.பி.எம்.மின் பயணம் இருக்கும்னும் அதனால் தான், ஜெ.வின் காங்கிரஸ் ஆதரவு நிலையை எதிர்த்து மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி கொடுத்தாருன்னும் சொல்றாங்க.''


""காங்கிரசுக்கு ஜெவிடுத்த அழைப்பு பற்றி அதன் கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரும், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உள்ள கட்சியினரும் என்ன சொல்றாங்க?''

""சி.பி.எம் லெவலுக்கு சி.பி.ஐ. ரியாக்ட் பண்ணலை. வைகோ இன்னும் தன் மௌனத்தைக் கலைக்கலை. தே.மு. தி.கவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை அ.தி.மு.க நிர்வாகிகள் ஏற்கனவே நடத்தி யிருந்தாங்க. இப்ப ஜெ அறிக்கை வந்ததும், பண்ருட்டியார்கிட்டே பேசிய விஜயகாந்த், நாம்தான் முதல் சாய்ஸ்னும் காங்கிரஸ் கூட்டணின்னு ஜெ பேசுவதெல்லாம் தி.மு.க கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்கத் தான்னும் அ.தி.மு.க நிர்வாகிகள் சொன்னாங்க. ஜெ.வுக்கு காங்கிரஸ்தான் முதல் சாய்ஸ்ங்கிறது அவங்க பேட்டி மூலமாகவே தெரிஞ்சிடிச்சி. அவங்க மேலே நம்பிக்கை யில்லாம காங்கிரஸ் அந்தக் கோரிக்கையை நிராகரிச்சிடிச்சி. இனி நாம் மட்டும்தான் ஜெ.வுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ். அதனால நம்ம பேரத்தை பலமா நடத்தி, சீட் வாங்கலாம்னு சொல்லியிருக்காராம்.''

""அ.தி.மு.க தரப்பில் என்ன சொல் றாங்க?''


""டெல்லி காங்கிரஸ் தரப்பில் சோனியா வீட்டில் செல்வாக்காக இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் கூட்டணிக்கான அறிவிப்பை வெளிப்படையாக அறிவிச்சாராம் ஜெ. ஆனா, காங்கிரசின் சீனியர் தலைவர்கள் அனைவரும் அதை நிராகரித்துவிட்டதால், அப்செட்டாகியிருக்கும் ஜெ., எனக்குத் தகவல் கொடுத்தவர்கள் செல்வாக்கானவர்களாக இல்லை, வெறும் அரசியல் புரோக்கர்கள் எனக் கோபப்பட்டிருக்கிறார். தன் கட்சியில் புதுசா நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஜெ. ஒரு அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறாராம். மா.செ.க்கள், ஒ.செ.க்கள், ந.செ.க்கள்னு கட்சியில் உள்ள நிர்வாகிகள் மூலமா ஒவ்வொரு தி.மு.க மந்திரியும் வாங்கியிருக்கும் சொத்துகள் பற்றிய விவரத்தை திரட்டித் தரணுமாம். ஆதாரத்தோடு திரட்டப்படும் இந்த விவரங்களின் அடிப்படையில் வக்கீல்களை வைத்து பொதுநல வழக்குப்போட்டு பரபரப்பை உண்டாக்குவதுன்னும், அதன்பிறகு இந்த வழக்குகளை அடிப்படையா வச்சு கவர்னர் மாளிகைக்கு பெரிய அளவில் ஊர்வலமாகப் போய், மந்திரிகள் மீது விசாரணை நடத்த அனுமதி கோரி மனு கொடுப்பதுங்கிறதும்தான் ஜெ.வின் திட்டமாம். தேர்தல் வியூகங்களில் இதுவும் ஒண்ணுன்னு அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்றாங்க.''

""காங்கிரஸ் தரப்பு செய்தி ஒண்ணு நான் சொல்றேன். இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மயூரா ஜெயக்குமார், வாசன் ஆதரவாளராக வெளிப்படையாகவே காட்டிக் கொண்டவர். கொங்கு மண்டலத்தில் வாசன் அணிக்கு இவர் பெரிய பலமாக இருந்தார். சமீபத்தில் ப.சிதம்பரத்தை சந்தித்த மயூரா, தன்னோடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் 8 பேரையும் அழைத்துப் போயிருக்கிறார். இந்த அணி மாற்றம் வாசன் தரப்பை அதிரவைத்திருக்கு. ப.சியை சந்தித்த மயூரா, அவரது மகன் கார்த்திசிதம்பரத்தையும் பிறந்தநாளில் சந்தித்து வாழ்த்தினாராம்.''

""அதே காங்கிரஸ் சைடிலிருந்து சொல்லப்படும் ஒரு தகவலை நான் சொல்றேன்... அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசா விலகியதால் தி.மு.கவுடனான கூட்டணி மேலும் வலுவடைந் திருக்கிறதுங்கிறதுதான் டெல்லியிலும் தமிழகத் திலும் உள்ள காங்கிரஸ் தலைவர்களின் கருத்தாக இருக்குது. நெருக்கடி கொடுக்காத கூட்டணிக் கட்சியான தி.மு.கவுக்கு சட்டமன்றத் தேர்தல் சமயத்திலும் நெருக்கடி கொடுக்கக் கூடாதுன்னு காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத் திருக்கிறதாம். அதனால், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிங்கிற வலியுறுத்தல் இருக்கா தாம். சீட் மட்டும் கடந்த முறையைவிட சற்று கூடுதலா கேட்டுப் பெறுவோம்னு காங்கிரஸ் தரப்பினர் சொல்றாங்க.''
நக்கீரன்

No comments:

Post a Comment