Search This Blog

Friday, October 1, 2010

இலங்கைக் கடற்படை அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்களின் வலைகள் மூழ்கடிப்பு


ராமேசுவரம், அக். 1- நடுக்கடலில் மீன் பிடித்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர் களின் வலைகளை இலங் கைக் கடற்படையினர் வெட்டி மூழ்கடித்தனர். மேலும் படகில் இருந்த இறால் மீன்களைப் பறித் துச் சென்றதாக மீனவர் கள் வியாழக்கிழமை தெரிவித்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்தியாளர் களிடம் கூறியதாவது: ராமேசுவரத்தில் இருந்து செப். 29 ஆம் தேதி சுமார் 150 விசைப்படகு கள் மீன் பிடிக்கச் சென்றன.
இப் படகுகள் வழக் கமாக மீன் பிடிக்கக் கூடிய பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 4 போர்க் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற் படையினர் மீனவர் களைக் கண்டதும் துப் பாக்கியைக் காட்டி மிரட்டி, விரட்டிய னுப்பினர்.
இதில் தங்கச்சிமடத் தைச் சேர்ந்த மார்த் தாண்டம், சேவியர் ஆகி யோருக்குச் சொந்தமான விசைப்படகை மடக்கிப் பிடித்தனர். எங்கள் கடல் எல்லைக்குள் மீன் பிடிக்க வரக் கூடாது என பலமுறை கூறியும், தொடர்ந்து வருகிறீர்கள் என இலங்கைக் கடற் படையினர் எச்சரிக்கை விடுத்தபடி, அரிவா ளால் மீன்பிடி வலை களை வெட்டி கடலில் மூழ்கடித்தனர். மேலும் 10-க்கும் மேற் பட்ட விசைப்படகு களில் விலை உயர்ந்த இறால், கணவாய் மீன் களைப் பறித்துக் கொண்டு சென்றனர்.
இப் படகின் மீனவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது. இலங்கைக் கடற் படையின் தொடர் தாக் குதலால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடி யாத நிலை ஏற்பட் டுள்ளது. பெரும்பா லான ராமேசுவரம் தீவு மீனவர்கள் பிழைப்புக் காக தூத்துக்குடி, மங் களூர் போன்ற கடற் கரை நகரங்களுக்கு பணிக் காகச் சென்றுள்ளனர்.
http://www.viduthalai.periyar.org.in/20101001/news05.html

No comments:

Post a Comment