Search This Blog

Friday, October 1, 2010

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்: அரசு மருத்துவமனையில் முதன்முறையாக அறுவை சிகிச்சை இன்றி இதய ஓட்டை அடைப்பு


 மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறுவனுக்கும் ஒரு பெண்ணுக்கும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே இதயத் தில் ஏற்பட்ட ஓட் டையை அடைத்து சாதனை புரிந்துள்ளனர். அரசு மருத்துவமனை யில் இதுபோன்ற சிகிச்சை அளிக்கப்படு வது இதுவே முதன் முறை என்று கூறப்படு கிறது.
கலைஞர் காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்தச் சிகிச்சை நடந் துள்ளது குறிப்பிடத் தக்கது.
மனித இதயத்தில் 4 அறைகள் உள்ளன (ஆரிக்கிள், வென்ட் ரிக்கிள்). இந்த அறை களைப் பிரிக்கும் மெல் லிய சுவரில், சிலருக்கு பிறக்கும்போதே ஓட்டை இருக்கும். 2 வயது ஆனதும் இது தானாகவே மூடிக்கொள் ளும். ஆனால், சிலருக்கு இந்த ஓட்டை தானாக மூடிக்கொள்ளாது.
இதயத்தில் ஓட்டை இருந்தால் பலவித பாதிப் புகள் ஏற்படும். இதைத் தடுக்க வேண்டுமானால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். அப்போது மருத்து வர்கள் இதயப் பகுதியில் உள்ள தசையை எடுத்து ஓட்டையை அடைப் பார்கள். அறுவை சிகிச்சையின்போது, நோயாளிக்கு 5 முதல் 8 யூனிட் வரை ரத்தம் செலுத்தப்படும். சிகிச் சைப் பிறகு நோயாளி 10 நாள்கள் முதல் 15 நாள்கள் வரையில் மருத்து வமனையிலேயே தங்க நேரிடும்.
தனியார் மருத்துவ மனையில் இதுபோன்ற அறுவை சிகிச்சைக்கு ரூ.2 லட்சத்துக்கும் மேலாக செலவாகக் கூடும். இப்படிப்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இதய நோய் சிகிச்சைப் பிரிவில் சிறுவனுக்கும், பெண்ணுக்கும் அறுவை சிகிச்சை இல்லாம லேயே இதய ஓட்டை பாதிப்பை சீர்படுத்தி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
விருதுநகர் மாவட் டம், ஜமீன்சல்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி (வயது 21). இவரது இதயத்தில் 28 மி.மீ. அளவு ஓட்டை இருந்தது. சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவ மனையில் சேர்ந்தார். மருத்துவர்கள் அவரது வலது தொடை ரத்த நாளம் மூலம் மெல்லிய கம்பியைச் செலுத்தி, அந்தக் கம்பியின் முனை யில் நீட்டினால் உலோ கத்திலான இரட்டைக் குடை போன்ற மென் பொருள் வைத்து இதய ஓட்டை பகுதியில் பொருத்தி அடைத்துள் ளனர். (இந்த மென் பொருள் நிக்கல்-டைட் டானியம் கலவையால் செய்யப்பட்டது). அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் 3 நாள்களில் நோயாளி வீடு திரும் பலாம் எனவும், அவ ருக்கு ரத்தம் ஏதும் செலுத்தப்படவில்லை என்றும் மருத்துவர்கள் கூறினர்.
இதேபோல மதுரை யா.ஒத்தக்கடை அருகே உள்ள புதுத்தாமரைப் பட்டி பகுதியைச் சேர்ந்த இலக்காபட்டி சக்தீஸ் வரன் ( வயது 6) என்ற சிறுவனுக்கும் இதயத்தில் இருந்த ஓட்டையை அடைக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதய சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் மருத் துவர் வி.அமுதன் தலை மையில் மருத்துவர்கள் கண்ணன், ஜனார்த்தனன், பாலசுப்பிரமணியன், நயினார்முகமது, சிவ குமார், வீரமணி, விஜய ராகவன் (மயக்கவியல்) உள்ளிட்டோர் இதற் கான சிகிச்சையை அளித் துள்ளனர்.
இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைப் பிரிவில் அறுவை சிகிச்சை இன்றி ஓராண் டில் மட்டும் சுமார் 1,700 பேருக்கு இதய அடைப்பு நீக்கும் பலூன் ஸ்டென்ட் சிகிச்சை (ஆஞ்சியோ கிராம் முறை) அளிக்கப் பட்டுள்ளது எனவும், இதில் 90 சதவிகிதம் பேருக்கு கலைஞர் காப் பீடு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்பட் டுள்ளது எனவும் மருத் துவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை யின்றி நோயாளிகளுக்கு நவீன முறையில் இதய ஓட்டை அடைப்பு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழுவி னரை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் எஸ்.எம்.சிவ குமார் பாராட்டினார்.

No comments:

Post a Comment