Search This Blog

Thursday, June 13, 2013

சேது சமுத்திர திட்ட எதிர்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்


திருப்பூர் : மக்கள் பிரச்னைகளை பேசும் சட்டமன்றம் ஜெயலலிதாவின் புகழ்பாடும் பஜனை மடமாக மாறிவிட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு பொதுகூட்டம் திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் வெள்ளகோவிலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. திருப்பூர் மாவட்ட திமுக செயலா ளர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் சிவாசபாபதி வரவேற்றார். திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நிதியாக 4 கோடியே 55 லட்சத்து 55 ஆயிரத்து 555 ரூபாய் திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் வழங்கினார். 

பின்னர் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற திமுக தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால்  தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்த அதிமுக, இன்றைக்கு அந்த திட்டமே தேவையில்லையென்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததன் மூலம் தமிழ்நாட்டுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறது.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமால் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக திமுக ஆட்சிகாலத்தில் சமச்சீர்கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா அத்திட்டத்தை ரத்து செய்தார். உச்சநீதிமன்ற தலையீட்டினால் வேறு வழியில்லாமல் அத்திட்டம் அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

திமுக கொண்டு வந்த சமசீர்கல்வி திட்டத்தினால் இன்றைக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த இரண்டாண்டுகளில் அமைச்சர்களை பந்தாடியதுதான் ஜெயலலிதாவின் சாதனையாகும். 2012 ஆகஸ்ட் மாதத்திற்கு பின் முற்றிலுமாக மின்வெட்டு பிரச்னை தீர்க்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டது. 

ஆனால் இன்றும் மின்வெட்டு நீடிக்கிறது.மக்கள் பிரச்னை களை பேசக்கூடிய சட்டமன்றம் ஜெயலலிதாவின் புகழ்பாடும் பஜனை மடமாக மாறிவிட்டது. 
மாநில குற்ற தகவல் இணையதளம் தெரிவிக் கும் தகவல்படி கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு இருமடங்காக குற்றங்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. இன்றைக்கு மக்கள் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் வராதா என்று ஏக்க பெருமூச்சு விடுகின்றனர். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமிஜெகதீசன், முத்துச்சாமி, கரூர் சின்னச் சாமி, கே.சி.பழனிச்சாமி எம்.எல்.ஏ உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment