Search This Blog

Wednesday, February 9, 2011

முக்கிய கட்டத்தில் ஜெயலலிதா மீதான வழக்கு

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசார ணையின் போது, அவர் பார்வை யாளர் இருக்கையில் அமர்ந்து பார்க்கலாம். மொழி பெயர்ப்பில் தவறு என இனி பேசக் கூடாது. இறுதி கட்ட விசாரணை பிப்ர வரி 14 இல் நடத்தப்படும் என, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லி கார்ஜுனய்யா கூறினார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், வருமானத் துக்கு அதிகமாக 68 லட்சம் ரூபாய் சொத்து குவித்த வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் பல்டி அடித்த சாட்சிகளின் மறு விசாரணை முடிந்த நிலையில், மொழி பெயர்ப்பில் தவறு இருப் பதாக ஜெ., தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன் னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஜெ., வழக்கறிஞர்: இவ்வழக் கில் மறு விசாரணை செய்யப் பட்ட சுபாஷ் சந்திரன் கொடுத்த வாக்குமூலம், ஆங்கில மொழி பெயர்ப்பில் ஒரு முக்கியமான பகுதி காணாமல் போய் விட்டது. இது போன்றுதான், விசாரணை செய்யப்பட்ட 250 சாட்சிகளின் வாக்குமூலங்களின் மொழி பெயர்ப்பிலும் தவறு உள்ளது. அனைத்தையும் சரி செய்து, ஆறு மாதம் கழித்து வழக்கை விசா ரிக்க வேண்டும்.

அரசு வழக்கறிஞர்: சுபாஷ் சந்தி ரன் கொடுத்த வாக்குமூலம், மொழி பெயர்ப்பில் தவறு இல்லை. தமி ழில் உள்ள வார்த்தைகள் சுருக்க மாக ஆங்கிலத்தில் கூறப்பட்டுள் ளது. அதை வேண்டுமானால் சரி செய்யலாம். அனைத்து சாட்சிகள் மொழி பெயர்ப்பையும் சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு அவகாசமும் தேவையில்லை.
நீதிபதி: சுபாஷ் சந்திரன் வாக்குமூலத்தை மீண்டும் மொழி பெயர்த்து பிப்ரவரி 14-க்குள் கொடுக்க வேண்டும்.

அரசு வழக்கறிஞரின் எதிர்ப்பு

அரசு வழக்கறிஞர்: இந்த வழக் கில், சாட்சிகள் மறு விசாரணை முடிந்து விட்டதால், வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்களான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் விசா ரணை செய்ய வேண்டும். கேள்வி 330 போட்டு, அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த வேண் டும். மொழி பெயர்ப்பில் எதிர் தரப்பினர் கூறும் குற்றச்சாற்று இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.

ஜெ., வழக்கறிஞர்: ஜெயலலி தாவுக்கு உடல்நலம் சரி இல்லை. எனவே தான், தமிழக சட்ட சபைக்கு அவர் வர வேண்டிய அவசியம் இல்லை என, தீர் மானம் நிறைவேற்றபட்டுள்ளது. இந்த வழக்கை அவசர அவசர மாக முடிப்பதாக எனது கட் சிக்காரர் கருதுகிறார். அவசரப் பட்டு தவறாக தீர்ப்பு வழங்கி விடக் கூடாது. இந்த வழக்கு அவர் ஒருவர் சம்பந்தப்பட்ட விஷய மல்ல. இந்த தீர்ப்பை ஒட்டு மொத்த ஆறு கோடி தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, நிதானமாக விசாரித்து, நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும். எனது கட்சிக்காரர்கள் வெளி நாட்டவர் அல்ல. குறிப்பாக, இத்தாலியர் அல்ல. அவர் இந்தியர். அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார்.இந்த வழக்கு, வெறும் 68 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்காகும். ஸ்பெக்ட்ரம் 1.76 லட்சம் கோடி ரூபாயில் ஊழல் நடந்துள்ளது. தற்போது, இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அந்த வழக்குகளில் காட்டப் படாத அவசரம், சொத்து வழக்கில் காட்டப்படுகிறது.

அரசியல் பேசவேண்டாம்!

நீதிபதி: இங்கு அரசியல் பேச வேண்டாம். இந்த வழக்கில் அவசரப்படவில்லை. தேவைப் பட்டால் உங்கள் கட்சிக்காரரை (ஜெயலலிதா) வந்து, பார்வை யாளர் இருக்கையில் அமர்ந்து பார்க்க சொல்லுங்கள்.மொழி பெயர்ப்பு தவறு பற்றி இனி மேல் கூறக் கூடாது. இந்த வழக்கை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்.

இதையடுத்து, சென்னை லக்ஸ், சிக்கேரா கம் பெனியினர், இவ்வழக்கில் சேர்க் கப்பட்டுள்ள தங்களுக்கு சொந்தமான இடங் களை விடுவித்து தருமாறு கேட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வாதத்துக்கு அவகாசம் கேட்ட தால், பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment