Search This Blog

Tuesday, March 22, 2011

1967 முதல் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று நிகழ்த்திய சாதனைகள்!


மத்திய அரசில் தி.மு.க. இடம் பெற்று தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள்!

தி.மு.க. கழகத் தேர்தல் அறிக்கை யில் அடுக்கடுக்கான திட்டங்களை யும், அற்புதமான அறிவிப்புகளையும் வெளியிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் அறிக்கையினை படைத்தளித் துள்ள தலைவர் கலைஞர் அவர்கள் - 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் கழகம் முதன்முதலில் ஆட்சி அமைத்தது தொட்டு, இதுவரையிலான பல்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றியுள்ள முக்கியமான திட்டங்களையும் நிகழ்த் திய பல்வேறு சாதனைகளையும் தொகுத் தளித்து நினைவுபடுத்தியுள்ளார்கள்.

அது வருமாறு :-

மத்திய அரசில் தி.மு.க. இடம் பெற்று தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள்  ம்    தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தின் வழியாக 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் நான்கு வழி, ஆறு வழிப் பாதை களும், மிகப் பெரிய மேம்பாலங் களும் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களில் விரைந்து சரக்குகளைக் கையாள்வதற்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட் டில் விரிவாக்கப் பணிகள் நிறை வேற்றப்பட்டு தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.

சேலம் உருட்டாலை 1553 கோடி ரூபாய் செலவில், தரத்தில் பன் னாட்டு அளவிற்கு உயர்த்தப்பட்டு புதிய உருட்டாலை நிறுவப்பட் டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நோக்கியா நிறு வனம் நிறுவப்பட்டு ஆயிரக்கணக் கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரகடத்தில் ரூ.1400 கோடி செலவில் வாகன சோதனை ஆய்வு மய்யம் நிறுவப்பட்டுள்ளது.

தேசிய சித்த மருத்துவ ஆய்வு மய்யம் தாம்பரத்தில் அமைக்கப்பட்டு நோய் தீர்க்கும் பணிகளைத் தமிழக மக்களுக்கு  ஆற்றி  வருகிறது.

சென்னைக்கு அருகே உத்தண்டி யில் உலகத் தரம் வாய்ந்த தேசியக் கடல்சார் பல்கலைக் கழகம்  அமைக்கப் பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகிறது.

திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம்  அமைக் கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

திருச்சியிலும் கோவையிலும்  இந் திய மேலாண்மை நிறுவனம்  அமைய வுள்ளது.

நெசவாளர்கள் பயனுறும் வகை யில் சென்வாட் வரி நீக்கப்பட் டுள்ளது.

சேலத்தில் புதிய ரயில்வே மண்ட லம் அமைக்கப்பட்டுள்ளது.

120 கோடி ரூபாய் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் விரி வாக்கம் செய்யப்பட்டு அண்ணா பன்னாட்டு முனையம், காமராசர் உள்நாட்டு முனையம் ஆகியவற்றில் நவீன வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் விரைந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இடஓதுக்கீடு நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

1967 முதல் 1969 வரை

மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்குத் தமிழ்நாடு என்ற பெயர்

சுயமரியாதைத் திருமணச் சட்டம்

தமிழ், ஆங்கிலம் மட்டுமே என்ற இரு மொழித் திட்டம்

அரசு ஊழியர்கள் தங்கள் விடுப்பைச் சரணளித்து ஈடான ஊதியம் பெறும் ஈட்டிய விடுப்புச் சரணளிப்பு திட்டம்.

1969 முதல் 1971 வரை


பேருந்துகள் நாட்டுடைமை

போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்

அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புத் திட்டம்

1,500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைகளோடு இணைக்க இணைப்புச் சாலைகள் திட்டம்

குடிசை மாற்று வாரியம்
குடிநீர் வடிகால் வாரியம்

கண்ணொளி வழங்கும் திட்டம்

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்

கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள்

ஊனமுற்றோர் நல்வாழ்வு திட்டம்

தாழ்த்தப்பட்டோர்க்கு இலவச கான்கிரீட் வீடுகள்

குடியிருப்பு மனை மற்றும் பண்ணைத் தொழிலாளர் நியாய ஊதியச் சட்டங்கள்

இந்தியாவிலேயே முதன்முதலாக காவலர் ஆணையம்  அமைத்தது

பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த் தப்பட்டோருக்கும் தனித்தனியாக அமைச்சகம்

பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டி லிருந்து 31 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீட்டை 16  விழுக்காட்டி லிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தியது

புகுமுக வகுப்பு வரையில் அனை வருக்கும் இலவசக் கல்வி

மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய அரசு விடுமுறை

நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை

1971 முதல் 1976 வரை

இந்தியாவிலேயே முதன்முதலாக கோவையில் வேளாண்மைப் பல்கலைக்கழகம்

அரசு ஊழியர் குடும்பப் பாது காப்புத் திட்டம்

அரசு அலுவலர் இரகசியக் குறிப் பேட்டு முறை ஒழிப்பு

மீனவர்களுக்கு இலவச வீட்டுவசதித் திட்டம்

சிறார்களுக்கு ஆலயங்களில் கருணை இல்லங்கள்

சேலம் உருக்காலைத் திட்டம்

15 ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று நில உச்ச வரம்புச் சட்டம்

நெய்வேலி நிலக்கரி இரண்டாவது சுரங்கம் - மின் திட்டம்

தூத்துக்குடி ரசாயன உரத் தொழிற்சாலை

சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ)

சிப்காட் வளாகங்கள்

தமிழ் பேசும் முஸ்லிம்களைப் போலவே உருது பேசும் முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்

புன்செய் நிலவரி அறவே நீக்கம்

மக்கள் குறை தீர்க்கும் மனுநீதித் திட்டம்

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்

கொங்கு வேளாளர் சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்

பசுமைப் புரட்சித் திட்டம்.
1989 முதல் 1991 வரை

வன்னியர், சீர் மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்டோர்க்கு மட்டும் 18 விழுக்காடு, பழங்குடியினர்க்கு தனியாக ஒரு விழுக்காடு

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும், வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும், வருமான வரம்பிற்குட்பட்டு பெண்களுக்கும் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி

வேளாண்மைக்கு இலவச மின்சாரம்

பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும்  சட்டம்

அரசுப்பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு

ஆசியாவிலேயே முதன்முதலாக கால்நடைப் பல்கலைக்கழகம்

ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம்

விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டம்

கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்க நிதியுதவி

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தது

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய ஊக்கத் தொகை; வண்டிச்சத்தம்

நுகர் பொருள் வாணிபக் கழகத்தை நிறுவியது

கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி

மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையாக மாநில அரசு அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்ததோடு, அதனை முன்தேதியிட்டு வழங்கியது.

10 லட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைத்தது

பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைத்தது

டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் அமைத்தது

காவிரி நடுவர் ஆணையம் அமைந்திட முயற்சித்தது

1996 முதல் 2001 வரை


ஆட்சிப் பொறுப்பையேற்ற ஆறு மாதங்களுக் குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல்

பெண்களுக்கு....

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு

இரண்டு பெண் மேயர்கள் உட்பட 44 ஆயிரத்து 143 பதவிகளில் பெண்கள் பதவி ஏற்பு, இரண்டு மேயர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி

மெட்ராஸ் என்பதற்கு சென்னை என்ற பெயர்

பொறியியற் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி களில் மாணவர்கள் சேர ஒற்றைச் சாளர முறை

வெளிப்படையான  புதிய  தொழில் கொள்கை

தொழில் தொடங்கிடத் தேவைப்படும் அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் வழங்கிட ஒற்றைச் சாளர முறை

மேம்படுத்தப்பட்ட சாலைகள், புதிய புதிய பாலங்கள்

கிராமங்களில் கான்கிரீட் தெருக்கள் அமைக்கும் திட்டம்

ஆறுகள், குளங்கள், கால்வாய்களில் வரலாறு காணாத அளவுக்குத் தூர்வாருதல் திட்டம்

24 மணிநேரமும் இயங்கிவரும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள்

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்

அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்

கிராமப்புற மாணவர்களுக்குத் தொழில் கல்லூரிகளில் 15 விழுக்காடு இடஒதுக்கீடு

ஜாதிப்பூசல்களை அகற்ற பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்

கிராமப்புறங்களுக்கு மினி பஸ் திட்டம்

அம்பேத்கர் பெயரில் இந்தியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம்

சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம்

உலகத் தமிழர்களுக்கு உதவிடத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

உருது அகாடமி

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்

சென்னை - திரைப்பட நகருக்கு ஜெ.ஜெ. திரைப் பட நகர் என்றிருந்ததை மாற்றி  டாக்டர் எம்.ஜி. ஆர் திரைப்பட நகர் என்று பெயர் மாற்றம்.

உழவர் சந்தைகள் திட்டம்

வருமுன் காப்போம் திட்டம்

கால்நடைப் பாதுகாப்புத் திட்டம்

பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம்

தென் குமரியில் 133 அடி  உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை

சென்னையில் டைடல் பூங்கா

அரசுக் கல்லூரி மாணவர்களுக்குக் கணினிப் பயிற்சித்திட்டம்

அரசுக்குத் தேவைப்படாத புறம்போக்கு நிலங் களில் வீடுகள் கட்டிக் குடியிருந்து வருவோர்க்கு வீட்டுமனை உரிமையாக்கும் சிறப்புத் திட்டத்தின்கீழ் இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனைகள்

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்து முடித்துச் செல்லும் போதே ஜாதிச் சான்றிதழ், வாழ்விடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் வழங்கும் திட்டம் 1999-2000 முதல் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களது உயர் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் திட்டம் 1996 முதல் நடைமுறை

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் சென்னைக் கோயம்பேட்டில் நிறுவிட வழிவகை செய்தது.

தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சிக் குச் சிறப்புத் திட்டம்

சேமிப்புடன் கூடிய மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம்

விவசாயத் தொழிலாளர்களுக்குத் தனிநல வாரியம்

அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு நல வாரியம்

தமிழ்ச் சான்றோர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம்

பள்ளிச் சிறார்க்கு  சத்துணவோடு முட்டை வழங்கியது

இருபதுக்கும் மேற்பட்ட அணைக்கட்டுகள் கட்டியது

ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களுக்குப் புதிதாகக் கட்டடங்கள்

மதுரை மாநகரில் முதன்முதலாக உயர்நீதிமன்ற கிளை அமைத்து அதற்கான கட்டடங்களையும், வேறு பல மாவட்டங்களில் புதிய நீதி மன்றக் கட்டடங்களையும் கட்டியது

மாணவர்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை

அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

நமக்கு நாமே திட்டம்

நலிந்தோர் குடும்ப நலத் திட்டம்

சென்னை பொது மருத்துவமனைக்கு 104 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம்

13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் நியமனம் செய்தது

முதன்முதலாக 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் நியமனம் செய்தது

தமிழ்ச் சான்றோர் எழுதிய நூல்களை அரசுடை மையாக்கியது
சென்னை நகரில் ஒன்பது மாநகராட்சி மேம்பாலங்கள் அமைத்தது

ரூபாய் 1500 கோடி செலவில் 350 துணை மின் நிலையங்கள்

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்

வேலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங் களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்
2006 முதல் 2011 வரை

சாமான்ய மக்களின் தோழன்


ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி; ஒரு கோடியே 85 இலட்சம் குடும்பங்கள் பயன்.

மாதந்தோறும் குறைந்த விலையில் பாமாயில் எண்ணெய், துவரம் பரும்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா செறிவூட்டப் பட்ட கோதுமை மாவு

மானிய விலையில் மளிகைப் பொருள்கள் என 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருள்கள்

22  லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங் களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி ரத்து

சாதா ரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 1050 ரூபாய், சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்.

மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள், மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு

கரும்பு விவசாயிகளுக்குப் போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகை சேர்த்து டன் ஒன்றுக்கு ரூபாய் 2000.

மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்

369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி-கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்

விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 31 அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங் களில் 2 கோடியே 2 லட்சத்து 21 ஆயிரத்து 564 உறுப்பினர்கள் சேர்ப்பு

13 லட்சத்து 6 ஆயிரத்து 492 அமைப்பு சாராத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 616 கோடியே 43 லட்சத்து 44 ஆயிரத்து 832 ரூபாய் உதவித் தொகை

ஒரு கோடியே 58 லட்சத்து 8 ஆயிரத்து 288 குடும்பங்களுக்கு இலவச  வீட்டு மனைப் பட்டாக்கள்

காமராசர் பிறந்த நாளில் கல்வி வளர்ச்சி நாள் என பள்ளிகளில் கல்வி விழா

சத்துணவுடன் வாரம் 5 நாள் முட்டைகள், வாழைப்பழங்கள்

ஆண்டு தோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 2 லட்சத்து 99 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்.

தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.

பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடம் எனச் சட்டம் - தமிழில் படித்த வர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.

நூற்றாண்டுக் கனவை நனவாக்கிச் செம்மொழித் தமிழாய்வு மய்யம் சென்னையில் அமைப்பு

4724 திருக்கோயில்களில் 523 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் மேலும் 1100 திருக்கோயில்களில் 100 கோடி ரூபாய் செலவில் குடமுழுக்கு.

அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு ரூபாய் 277 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமணத் திட்ட நிதியுதவி 10 ஆயிரம் என்பது 25 ஆயிரம் ரூபாய் என உயர்வு

ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 20 லட்சத்து 11 ஆயிரத்து 517 ஏழை மகளிர்க்கு நிதியுதவி

அரசு ஊழியர்களுக்கு நான்காண்டுகளில் 2 லட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி வழங்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

வரும் முன் காப்போம் திட்டத்தின்கீழ் இதுவரை 18 ஆயிரத்து 742 முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடியே 77 இலட்சத்து 5 ஆயிரத்து 8 பேர் பயன் பெற்றுள்ளனர்.

நோயற்ற வாழ்வே! குறைவற்ற செல்வம்!

இதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய்களுக் கான  விழிப்புணர்வை ஏற்படுத்த உடல் பரி சோதனை செய்ய நலமான தமிழகம் திட்டம்.

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் வாயிலாக இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரத்து 265 ஏழை மக்களுக்கு 702 கோடி ரூபாய் செலவில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள்.

மத்திய அரசின் உதவியோடு அவசரகால மருத்துவ ஊர்தி 108 இலவச சேவைத் திட்டம் வழியாக இதுவரை 8 லட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயன் பெற்றுள்ளனர். மேலும், 42 ஆயிரத்து 232 நபர்களின் உயிர் காக்கப்பட்டுள்ளது.


ஏறத்தாழ 2 லட்சத்து 22 ஆயிரத்து 569 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 46 ஆயி ரத்து 91 கோடி ரூபாய் முதலீட்டிலான 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு 37 புதிய தொழிற் சாலைகள் அமைக்க நடவடிக்கைகள்.

3  லட்சத்து 5 ஆயிரத்து 801 படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 240 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.


4  லட்சத்து 65 ஆயிரத்து 658 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலை வாய்ப்புகள்.

கோவை, திருச்சி, மதுரை, நெல்லை  ஆகிய நகரங்களில்  டைடல் பூங்காக்கள்.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி களுக்குப் பராமரிப்பு உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப் பட்டதால் கடும் மாற்றுத் திறனாளிகள் பத் தாயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

கழக அரசு தொடங்கிய மகளிர் திட்டத்தின் வழியாக இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 41 ஆயிரத்து 311. இக்குழுக்களுக்கு வழங்கப் பட்டுள்ள மொத்தக் கடன் ரூபாய் 6342 கோடி

2,033 கோடி ரூபாய் செலவில் 10 ஆயிரத்து 96 கிராம ஊராட்சிகளில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப் படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள்

அதே போல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 210 கோடி ரூபாய் செலவில் 420 பேரூராட்சிகளில் கட்டமைப்புப் பணிகள்

12 ஆயிரத்து 94 கோடி ரூபாய் செலவில் 57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளும், பராமரிப்புப் பணி களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

4 ஆயிரத்து 945 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் இருவழித் தடங்களாக அகலப்படுத் தப்பட்டுள்ளன.

தலவரி, தலமேல் வரி, தண்ணீர் தீர்வை அனைத் தும் ரத்து.   நில உரிமையின் அடையாள மாக  நிலவரி மட்டும்  ஏக்கர் ஒன்றுக்கு புன்செய் நிலங் களுக்கு 2 ரூபாய், நன்செய் நிலங்களுக்கு 5 ரூபாய்.


கட்டணம் உயர்த்தப்படாமல் 12 ஆயிரத்து 137 புதிய பேருந்துகளுடன் மேலும் 300  புதிய பேருந்துகள்.

இசுலாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு.

அருந்ததியினர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு.

சமத்துவ சமுதாயம் காணும் நோக்கில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்
புதிய கட்டுமானங்கள்

ஜாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க  ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள்

சென்னை கோட்டூர்புரத்தில் உலகத்தரத்தில் 171 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்.

1200 கோடி ரூபாய் செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற-தலைமைச் செயலக வளாகம்.

100 கோடி ரூபாய் செலவில் அடையாறு தொல்காப்பியர் பூங்கா.

சென்னையின்  மய்யப் பகுதியில்  செம்மொழிப் பூங்கா.

வடசென்னை மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

தென் சென்னையில் நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ இரயில் திட்டம்

ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

630 கோடி ரூபாய் செலவில் இராமநாதபுரம்-பரமக்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறை வேற்றம்.

டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 6ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன.

21 இலட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கீரிட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம்

பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் ரூபாய் 4000-த்திலிருந்து 5000ஆக உயர்த்தியும், அவர்கள் குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 2000-த்திலிருந்து 2500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கோவையில் முதன்முதலாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஜூன் திங்களில் நடைபெற்றது.

119 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிக்காக ரூ.302 கோடி ஒதுக்கீடு

13ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி மாலை நேர, விடுமுறை நாள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நிலுவையிலுள்ள வழக்கு களைக் கணிசமாகக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி, கோவை, மதுரை,  திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது.


சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,307 ஆசிரியர் பணியிடங்களையும் 648 ஆசிரியரல்லாத பணியிடங்களையும் நிரப்புவதற்கு ரூ.331 கோடி நிதி ஒதுக்கீடு.

பள்ளிக் கல்வியில் கற்றல் முறையில் மாணவர் களை சம அளவில் மதிப்பீடு செய்யும் ஒரே சீரான பாடத்திட்டத்தையும், தேர்வு முறையை யும் கொண்டு வந்து பள்ளிக்கல்வியில் சமச்சீர் கல்வி முறை.


தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணங்களை பெற்றோர்கள் மீது சுமத்துவதைத் தடுக்கும் வண்ணம் ஒரு நபர் நீதிபதிக் குழுவினை அமைத்து கட்டண சீராக்கம் செய்யப்பட்டு வருகிறது.


அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் கடந்த அய்ந்தாண்டுகளில் 6 இலட்சம் பேர் நிரந்தர வேலை பெற்றுள்ளனர்.

3 comments:

  1. Also publish "how much DMK looted in every scheme above?"

    ReplyDelete
  2. Oh.... what a fear on savukku.net
    I see you really frightened of savukku.net and other media

    ReplyDelete
  3. And also publish how many innocent people your leader killed during this period, do you have those list of killed or do you want me to get those list from savukku.net

    ReplyDelete