Search This Blog

Tuesday, February 15, 2011

ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மிலாடி நபி விடுமுறையை ரத்து செய்த ஜெயலலிதா

2001ல் அதிமுக அரசு மிலாடி நபித் திருநாள் விடுமுறையை ரத்து செய்தது என்றும், 2006ல் திமுக அரசு மீண்டும் அமைந்தபோது, மிலாடி நபித் திருநாளுக்கு மீண்டும் அரசு விடுமுறை வழங்கியது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மிலாடி நபி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த திருநாள் மிலாடி நபி நன்னாளாக இஸ்லாம் சமுதாய மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.

நபிகள் நாயகம் அவர்கள் அன்பை, அமைதியைப் போதித்தார்; அறத்தை வலியுறுத்தினார். அடுத்தவர்க்கு உதவிகள் புரிவதை உயர்ந்த பண்பாகக் கருதினார். “சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் இருவருக்கு மத்தியில் நீ சமாதானம் செய்து வைப்பது தர்மமாகும்; ஒருவரை, அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன்மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும்; நல்ல வார்த்தைகளைக் கூறுவது தர்மமாகும்; இடையூறு அளிப்பவைகளைப் பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும் எனக் கூறி, அடுத்தவர் நலன் கருதி ஆற்றும் அருட்பணிகளையே அறம் என வலியுறுத்தினர்.

இத்தகைய அறநெறிகளைப் போதித்த நபிகள் பெருமான் பிறந்த நாளை இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமெனக் கருதி மிலாடி நபித் திருநாளுக்கு 1969ம் ஆண்டிலேயே அரசு விடுமுறை வழங்கி ஆணையிட்டு நடைமுறைப்படுத்தியதை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

2001ல் ஏற்பட்ட அதிமுக அரசு மிலாடி நபித் திருநாள் விடுமுறையை ரத்து செய்ததையும், 2006ல் திமுக அரசு மீண்டும் அமைந்தபோது, மிலாடி நபித் திருநாளுக்கு மறுபடியும் அரசு விடுமுறை வழங்கி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு உற்ற நண்பனாகத் திகழ்வதையும் சுட்டிக் காட்டி; மிலாடி நபித் திருநாள் கொண்டாடும் இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவர்க்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இன்புற்று வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்குவோம்-ஜெ:

மிலாடிநபி தினத்தையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் முகமது நபி பிறந்த நாளினை பெருமகிழ்வுடன் கொண்டாடும் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில் நபிகள் நாயகத்தின் போதனைகளான அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகியவை மீண்டும் ஏற்படவும், தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ்வதற்கான சூழ்நிலை உருவாகவும் உழைப்போம் என உறுதி கொள்வோம்.

இறைநபி பிறந்த நாளைக் கொண்டாடி இன்புறும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீலாதுன்நபி வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
நன்றி :தட்ஸ் தமிழ்

Monday, February 14, 2011

கடன் வாங்கி இலவசத் திட்டங்களா? முதல் அமைச்சர் மறுப்பு

தமிழக அரசு, கடன்களை வாங்கி இலவச திட்டங்களுக்கு செலவிடவில்லை என்றும், நிதிப்பற்றாக்குறை குறிப்பிட்ட அளவுக்குள் இருப்பதாகவும், முதல் அமைச்சர் கலைஞர் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி: தமிழக அரசின் சார்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்களைப் பெற்று இலவச திட்டங்களை வாரிக் கொடுத்துவிட்ட தாகவும், அதனால் தமிழ்நாட்டு மக்கள் ஒவ் வொருவர் மீதும் கடன் சுமையை ஏற்றி வைத்து விட்டதாகவும் அ.தி.மு.க.வினரும், கம்யூனிஸ்ட் களும் பேரவையில் கூறிய குற்றச்சாற்றுக்கான விளக்கம் என்ன?

பதில்: இந்தக் கேள்விக்கு பலமுறை தமிழக அரசின் சார்பில் விளக்கம் கூறப்பட்டுவிட்டது. இருந்தாலும் வேறு எந்தக் குற்றச்சாற்றுகளும் கூறுவதற்கு இல்லாததால் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். இலவசத் திட்டங்களை வழங்குவதற்காக தமிழக அரசு கடன்களை வாங்கவில்லை.
அ.தி.மு.க. 2001-2002ஆம் ஆண்டு முதல், 2005-2006ஆம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த போது வாங்கிய கடன் தொகை 28,772 கோடி ரூபாய். இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவு மட்டும் 15,614 கோடி ரூபாய். மூலதனச் செலவு என்றால், சாலைகள், பாலங்கள், குடிநீர் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக செய்யப்படும் செலவுகளாகும்.

2006-2007ஆம் ஆண்டு முதல் 2010-2011 (திருத்த மதிப்பீடு) ஆகிய அய்ந்தாண்டுகளில் தி.மு.கழகம் ஆட்சியிலே வாங்கிய கடன் தொகை 44,084 கோடி ரூபாய். ஆனால் இந்த அய்ந்தாண்டுகளில் இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவாகச் செல விட்டது 44,667 கோடி ரூபாய். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கடன்களை வாங்கி இலவசத் திட்டங்களுக்காகச் செலவிட வில்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இனியாவது அவர்கள் கடன்களை வாங்கி, இலவசத் திட்டங்கள் வழங்கப்பட்டதாக பிரச்சாரம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இதைத்தான் இடைக்கால நிதி நிலை அறிக்கை பக்கம் 55இல், 2006-2007 முதல் 2010-2011 வரையான அய்ந்தாண்டுகளில் கடன் பொறுப்புகளின் உயர்வு ரூபாய் 44,084 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே கால அளவில் மொத்த மூலதனச் செலவினங் கள் ரூபாய் 44,667 கோடியாக இருந்துள்ளது. திரட்டப்பட்ட கடன் பொறுப்புகள் அனைத்தும் பயன் அளிக்கக்கூடிய நோக்கங்களுக்காகச் செலவிடப்பட்டதை இது காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய நிதிக் குழுவும், மத்திய அரசும் ஒவ்வொரு மாநிலமும், அதன் மொத்த உற்பத்தியில் 25 சதவிகிதம் வரை கடன் பொறுப்பு களை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்து உள்ளது. மேலும் 2005-2006ஆம் ஆண்டின் இறுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிகிதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு  2010-2011இல் தி.மு.கழக ஆட்சியின் இறுதியில் 19.58 சதவிகிதமாகக் குறைந்து உள்ளது. இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து தமிழ கத்தின் கடன் பொறுப்பு அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளதைத் தெரிந்து கொள்ளலாம்.
மற்ற மாநிலங்களில் குறிப்பாக இந்தக் கடன் பற்றி அதிகமாக பேரவையிலே பேசிய பொதுவுடை மைக் கட்சிகள் ஆளுகின்ற கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலே கூட தமிழ்நாட்டைவிட கூடுதலாகக் கடன் சுமை உள்ளது. இது பற்றியும் நான் ஏற்கெனவே எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு கடன்களை வைத்துள்ளது என்று குறிப்பிட்டிருக் கிறேன்.
கேள்வி: கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் தா.பாண்டியன் எதற்குக் கடன், எவ்வளவு கடன் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்கிறாரே?
பதில்: நான் மேலே தெரிவித்த புள்ளி விவரங்கள் அவருக்கு விளக்கமளிக்கும் என்று நம்புகிறேன். எதற்குக் கடன் என்பதையும் சொல்ல வேண்டு மென்றால், உலக வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூபாய் 2442 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அபி விருத்தி திட்டம், ரூபாய் 1224 கோடி மதிப்பீட்டில் சுகாதாரத் திட்டம் போன்ற மூலதனப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அதே போல் ஜப்பான் நாட்டு நிதியுதவி பெற்று ரூபாய் 1928 கோடியில் ஒகேனக் கல் கூட்டுக் குடிநீர் திட்டம், நபார்டு வங்கியின் மூலம் ஊரக சாலைகள், நீர்ப்பாசன நிலைகள் அபிவிருத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற பணிகளுக்காக கடந்த அய்ந்தாண்டுகளில் ரூபாய் 4113 கோடியும் கடன் பெற்று மூலதனப் பணிகளைத்தான் இவ்வரசு மேற்கொண்டுள்ளது. எனவே பொறுப்போடுதான் கடனைப் பெற்று இந்த அரசு மூலதனப் பணிகளுக்காக செலவு செய்து வருகிறது.
கேள்வி: இவ்வாறு அரசு வாங்கும் கடன்களுக்கு செலுத்துகின்ற வட்டித் தொகை அதிகமாகிக் கொண்டே போகிறது என்று சொல்கிறார்களே?
பதில்: ஒரு மாநிலம் செலுத்துகின்ற கடன் மீதான வட்டித்தொகை, அதன் மொத்த வருவாயில் 15 சதவீதத்திற்குக் குறைவாகவே இருக்க வேண்டும். கடந்த 2005-2006ஆம் ஆண்டில், அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் மொத்த வரி வருவாயில் செலுத்தப்பட்ட வட்டியின் சதவிகிதம் 13.42 ஆகும். ஆனால் 2010-2011ஆம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியிலே மொத்த வரி வருவாயில் செலுத்தப்படும் வட்டியின் சதவீதம் 11.15 ஆக குறைந்துள்ளது. இதிலிருந்து தமிழ் நாட்டினுடைய நிதி நிலைமை 2005-2006ஆம் ஆண்டினைக் காட்டிலும் தற்போது திருப்திகர மாகவே உள்ளது என்பதை பேரவையில் முழங்கிய அ.தி.மு.க.வினர் புரிந்து கொள்ளலாம். கடன் பொறுப்புகள் அதிகரித்துள்ள போதிலும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் நிலையிலேயே தமிழ்நாடு உள்ளது.
தினமணியும்...
கேள்வி: எதிர்க்கட்சியினர் குற்றம்சாற்றியதைப் போலவே, தினமணி நாளிதழும் உபரி ஒரு புறம், கடன் மறுபுறம் என்று குறிப்பிட்டிருந்ததே?
பதில்: உபரி என்பது வருவாய் உபரி. சிறப்பாக செயல்படுகின்ற மாநில அரசு வருவாய் உபரி நிலையை எட்ட வேண்டும். அதாவது வருகின்ற வரி வருவாயில், வருவாய் செலவினம் போக உபரி நிதியை மாநில அரசுகள் திரட்ட வேண்டும். அதற்கு மேல் செய்யப்படுகின்ற மூலதனச் செலவுகளுக்கு, மாநில அரசுகள் கடன் பெறுவது அவசியம் ஆகிறது. இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கையாகும். இவ்வாறு கடன் பெறுவது வளர்ச்சித் திட்டங்களுக்காக இருக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட அளவுக்குள் நிதிப் பற்றாக் குறை இருப்பதில் தவறில்லை.
உலகப் பொருளாதார மேதை ஜான் மேனார்டு கீன்ஸ் போன்றவர்கள் கூறியுள்ள வளர்ச்சியைத் துரிதப்படுத்த வேண்டுமென்றால், கடன் பெற்றா வது அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்ற முறை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான். 2007ஆம் ஆண்டில்கூட உலகளவில் பொருளாதார தேக்கம் ஏற்பட்ட போதும்கூட, இத்தகைய கொள் கைகள் பின்பற்றப்பட வேண்டுமென்று வலியுறுத் தப்பட்டது.
எனவே நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக கூறுபவர்களுக்கு கூற விரும்புகிறேன், நிதிப்பற்றாக் குறை தமிழகத்திலே குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கிறது. மேலும் இந்த நிதிப் பற்றாக்குறை மத்திய அரசு வகுத்த வரம்புக்குள் இருக்கிறது.
கேள்வி: வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத் தாமல், இலவசத் திட்டங்களை மட்டுமே தி.மு.கழக அரசு செயல்படுத்துகிறது என்ற குற்றச்சாற்றுக்கு உங்கள் பதில் என்ன?
பதில்: தி.மு.கழக அரசு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகின்ற அதே நேரத்தில், சமூகப் பொருளாதார கட்டமைப்பு களையும், திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டு தான் வருகிறது. கல்வி, சுகாதாரம் ஆகிய சமூகக் கட்டமைப்புகளை உருவாக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த அய்ந் தாண்டுகளில் சமூகக் குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தொடக்கப் பள்ளி களில் இடைநிற்றல் விகிதம் 2005-2006ஆம் ஆண் டில் அ.தி.மு.க. ஆட்சியில் 3.81 சதவிகிதமாக இருந் தது, 2009-2010இல் கழக ஆட்சியில் 1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இடைநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அ.தி.மு.க. ஆட்சியில் 7.58 சதவிகிதமாக இருந்தது, 2009-2010இல் 1.79 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
பிறப்பு - இறப்பு விகிதம்
2005-2006ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 802. 2010-2011இல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 9 ஆயிரத்து 421. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் மகப்பேறு கடந்த அய்ந்தாண்டுகளில் 277 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 1000-த்துக்கு 37இலிருந்து 31 ஆகவும்  பேறு காலத்தில் பெண்கள் இறப்பு விகிதம் லட்சத்திற்கு 111இலிருந்து 79 ஆகவும் குறைந்துள்ளது.
569 புதிய பள்ளிகள் 168 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 12 புதிய பொறியியல் கல்லூரிகள் 6 புதிய மருத்துவக்கல்லுரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு புதிதாக 5 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 5 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான கட்டமைப்பு களை உருவாக்க 2,568 கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. மேலும் பொருளாதாரக் கட்டமைப்பு களான சாலைகள், பாசனம், போக்குவரத்து, குடிநீர் போன்ற எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த அய்ந்தாண்டுகளில் சாலை மற்றும் பாலங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 14 ஆயிரத்து 748 கோடி ரூபாய். பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக செலவிடப் பட்ட தொகை 2 ஆயிரத்து 822 கோடி ரூபாய். தென்னகநதிகளை இணைக்கும் திட்டத்தின்கீழ் கட்டளைக் கதவணை, தாமிரபரணி  நம்பியாறு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக ஓராயிரத்து 440 கோடி ரூபாய் இந்த அய்ந்தாண்டு களில் செலவிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் ரயில் போக்குவரத்துத் திட்டம் இந்த அரசு தொடங்கியுள்ள ஒரு மகத்தான திட்டம். குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக கடந்த அய்ந்தாண்டு களில் செலவிடப்பட்ட தொகை 3 ஆயிரத்து 320 கோடி ரூபாயாகும். இந்த அரசால் ரூ.616 கோடியில் முடிக்கப்பட்ட மிகப் பெரிய கூட்டுக் குடிநீர் திட்டமான இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது. ஒகேனக் கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 1929 கோடி ரூபாய் செலவில் வேகமாக நடைபெற்று வருகிறது. வளர்ச்சித் திட்டங்கள் எதையும் இந்த அரசு புறக்கணிக்கவில்லை.
சமூகப் பாதுகாப்புத் திட்டம்
கேள்வி: தி.மு.கழக அரசின் சார்பாக கடந்த அய்ந்தாண்டுகளில் சமூகப் பாதுகாப்புத் திட்டங் களுக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? இந்த ஆண்டு எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி செலவழிக்கப்படவுள்ளது?
பதில்: 2006-2007 முதல் 2010-2011 வரை முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக் காக தி.மு.கழக அரசில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை 61 ஆயிரத்து 727 கோடி ரூபாய். இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய்.
2011-2012ஆம் ஆண்டிற்கு இலவச காங்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்திற்காக 3 ஆயிரத்து 497 கோடி ரூபாயும்  கலைஞர் காப்பீட்டுத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் போன்றவற்றுக்காக ஓராயிரத்து 106 கோடி ரூபாயும்  கல்வி உதவித் தொகை, இலவச சைக்கிள், இலவசபுத்தகம் போன்ற திட்டங்களுக் காக 6 ஆயிரத்து 73 கோடி ரூபாயும்  முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்திற்காக ஓராயிரத்து 471 கோடி ரூபாயும்  ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டத்திற்காக 247 கோடி ரூபாயும்  கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி போன்ற பல்வேறு திட்டங்களுக்கும், சத்துணவு போன்ற நலத் திட்டங்களுக்கும் சேர்த்து 495 கோடி ரூபாயும், வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் போன்றவை களுக்காக 860 கோடி ரூபாயும் என்ற வகையில் 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட்களின் பார்வைக்கு...
கேள்வி: மாநில அரசின் கடன் பற்றி கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசுகிறார்களே, அவர்களின் கட்சி ஆளும் கேரள மாநில அரசு கடனே வாங்கவில்லையா?
பதில்: இந்தக் கேள்விக்கு நான் பதில் அளிப் பதைவிட 10.2.2011 தேதிய எகனாமிக் டைம்ஸ் குறிப்பிட்டிருப்பதை அப்படியே சொல்கிறேன்.
உள்நாட்டுக் கடன், சிறு சேமிப்புகள் மற்றும் வருங்கால வைப்புநிதி மற்றும் மத்திய அரசிட மிருந்து கடன்கள் மற்றும் முன்பணங்கள் உள்ளடக் கிய கேரளாவின் ஒட்டுமொத்தக் கடன், 1999-2000ஆம் ஆண்டு ரூ.20,176 கோடியிலிருந்து 2004-05ஈம் ஆண்டில் ரூ.41,878 கோடியாகவும், 2009-2010ஆம் ஆண்டு ரூ.70,969 கோடியாகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதுவும் ஏறத்தாழ 3.4 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு மாநிலத்தில் 2010-2011ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உத்தேச மதிப்பீடுகளில் கடன் தொகை கவலை அளிக்கும் அளவுக்கு ரூ.78,329 கோடி என்று காட்டப் பட்டுள்ளது.
சில ஆண்டுகளாக கேரளாவின் தனிநபர் கடனளவு மிகப் பெரும்பாலான இதர மாநிலங்களைவிட மிக அதிகமாகவும் தேசிய சராசரிக்கு மேலும் உள்ளது. 2008ஆம் ஆண்டில் கேரளாவின் தனிநபர் கடனளவு ரூ.16,074. அதே ஆண்டில் ஆந்திராவில் ரூ.9,991, தமிழ்நாட்டில் ரூ.9,692, கருநாடகாவில் ரூ.8,901, அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.10,018 ஆகவும் தனிநபர் கடனளவு இருந்தது.
-இவ்வாறு முதல் அமைச்சர் கலைஞர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா - ஓய்வு பற்றி தீர்மானம் அம்பலப்படுத்தினார் முதல் அமைச்சர் கலைஞர்

எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லையென்றும், சட்டப்பேரவையில் பங்கு கொள்வதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததற்கான பின்னணி பற்றி முதல் அமைச்சர் கலைஞர் அம்பலப்படுத்தினார்.

பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த நிருவாகிகள் தி.மு.க.வில் இணையும் விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. விழாவிற்கு முதல்-அமைச்சர் கலைஞர் முன்னிலை வகித்தார். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் வர வேற்று பேசினார். இலக்கிய அணி முன்னாள் தலை வர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் தலைமையில் பாரதீய ஜனதாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பேர் முதல்-அமைச்சர் கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

தி.மு.க.வில் இணைந்தவர்களை வாழ்த்தி முதல்-அமைச்சர் கலைஞர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இங்கே காசி முத்துமாணிக்கம் பேசும்போது, "பலமுறை தலைவரிடத்திலும், மற்றும் கழக முன்னணியினரிடத்திலும் நாங்கள் கோரிக்கை வைத்து - இன்றுதான் அது நிறைவேறி இருக்கிறது'' என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத் தினார். நாங்களும்; உங்களுடைய வருகையை நீண்டகாலமாக எதிர்பார்த்து அது இன்றைக்குத் தான் நிறைவேறியிருக்கிறது என்ற மகிழ்ச்சியோடு - அண்ணா அறிவாலயத்திலே உங்களையெல்லாம் சந்திக்கின்ற இந்த இனிய வாய்ப்பை - அரிய வாய்ப்பை நானும், நம்முடைய பேராசிரியரும் மற்றுமுள்ள கழக முன்னணியினரும், நிருவாகி களும் பெற்றிருக்கிறோம்.

இப்படி பல நிகழ்வுகள், பல நேரங்களிலே திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை யிலே நடந்திருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் மேலாக இங்கே வந்து சேர்வதற்கு முன்பே, இணைவதற்கு முன்பே - வேறு இயக்கத்திலே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும், தி.மு.க.வில் இருப்பதைப்போலவே, நம்முடைய காசி முத்துமாணிக்கம் அவர்கள் எங்களிடத்திலே பழகியிருக்கின்றார். அதனால்தான் அவர் இன் றைக்கு வந்து சேர்ந்தபோது, புதிதாக யாரோ ஒருவர் இங்கு வந்து சேர்வதைப் போல் எங்களுக்குத் தெரியவில்லை. இங்கே இருப்பவர்தான்-அங்கே போய் இங்கே வந்து சேருகிறார் என்ற அந்த உணர்வுதான் எனக்கு-முத்துமாணிக்கத்தை பொறுத் தவரையில் ஏற்படுகிறது.

இந்த ஆட்சி ஒரு ஜனநாயக ஆட்சி என்ற நிலையில் பாராட்டுகளைப்பெற்று, சிறப்புகளை பெற்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில், இதை இழந்தவர்கள்-இந்தப் பொறுப்பைப் பெற முடியாமல் ஒதுங்கி நின்றவர்கள்-விலகி நின்றவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள்-மக்களால் ஒதுக்கப் பட்டவர்கள் -மீண்டும் இந்த ஆட்சியைப் பிடிப் போம் என்று முழங்கிக்கொண்டு- "ஆட்சியைப் பிடிப்போம்'' என்றால், ஏதோ தவறுதலாக, கொள்கைக்கு மாறாக-அண்ணா உருவாக்கிய லட்சி யங்களுக்கு எதிராக ஒரு ஆட்சி நடைபெறுவதைப் போலவும், அதை மாற்றி மீண்டும் அண்ணா வினுடைய லட்சியங்களை-அவருடைய கருத்து களை கொண்ட ஒரு ஆட்சியை அமைக்கப்போவ தாகவும் இன்றைக்கு ஒரு நாடகத்தை, ஒரு கூத்தினை நாட்டிலே நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்றுவரையிலே கூட, இந்த ஆட்சியை நாம் நீடித்து நடத்த இருக்கிறோமா-அதற்கு மக்களு டைய ஆதரவு தொடருகிறதா என்ற வகையிலே-சட்டப்பேரவையில் விவாதமே நடந்து முடிந் திருக்கிறது. கடந்த 7, 8 நாட்களாக நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளிக்கின்ற வகையில், நம்முடைய நிதியமைச்சர்- அவை முன்னவர் பேராசிரியர் அவர்கள்-பல வாதங்களுக்கு பதில் கூறி நேற்று நிறைவுரை ஆற்றினார்கள். அதற்கு முன்பு இறுதியாக பேசிய இன்றைய எதிர்க்கட்சியினுடைய துணைத்தலைவர் நண்பர் பன்னீர்செல்வம் அவர்கள் பேசும்போது, "நீங்கள் எல்லாம் வீட்டிற்குப்போகிற காலம் வந்துவிட்டது-நாங்கள் அந்த இடத்திலே வந்து அமரப்போகிற நேரம் வந்து விட்டது-எங்கள் அம்மா முதலமைச்சராக வந்து அமருவார்''-என்றெல்லாம் சொல்லி, தன்னுடைய கருத்தை வலியுறுத்திப் பேசினார்.

பேராசிரியர் பதில் சொல்லும்போது சொன்னார்-"மிக வேகமாக, மிக ஆணித்தரமாக பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய கருத்துகளையெல்லாம் இங்கே எடுத்துச்சொல்லி, நாங்கள்தான் ஆட்சியிலே வந்து அமரப்போகிறோம் என்று நாற்காலிகளை யெல்லாம் காட்டிப்பேசினார். ஆனால், அவருக்கு நான் சொல்வேன். அவருடைய எண்ணம் ஈடேறாது என்பதை நான் எப்படி விளக்குகிறேன் என்றால்..'' என்று கூறிவிட்டு-பேராசிரியர் அவர்கள் அவருக்கே உரிய நகைச்சுவையோடு அல்ல-பொறுப்புணர்ச் சியோடு சொன்னார். "நீங்கள் யார் வேண்டு மானாலும் அமரலாம்-அம்மா வந்து முதலமைச் சராக உட்காருவார் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் சொன்னார்-ஆனால், அம்மா இப்பொழுது ஓய்விலே இருப்பதாக நமக்குக் கடிதம் அனுப்பி யிருக்கிறார்'' என்று சொன்னார்-அவ்வளவுதான். "அம்மா ஓய்விலே இருக்கிறார்'' என்று சொன்னார்.

அதென்ன பரிபூரண ஓய்வு?

இதைச்சொன்னால் என்ன தப்பு? வந்ததே பார் பன்னீர்செல்வத்திற்கு ஆத்திரம்! அவருக்கு பக்கத்திலே இருந்தவருக்கு வந்தது அதைவிட அதிகமாக ஆத்திரம்! இவர் எரிமலையாக பொங்கினார் என்றால், அவர்கள் எல்லாம் பூகம்பமாக வெடித்து-"எப்படிச்சொல்லலாம் ஓய்விலே இருக்கிறார்?'' என்று கேட்டனர்.

உடனே நான் எழுந்துகூட அல்ல; அமர்ந்த படியே சொன்னேன். ஒரு கடிதத்தைக்காட்டி, "நேற்றைக்கு நீங்கள் சட்டமன்றத்திலே அளித்து, ஒரு தீர்மானம் என்ற பெயரிலே அதை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டீர்களே? அதிலே இருக்கிறது-உங்கள் அம்மா உடல் நலமில்லாமல், ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்-அவருக்கு பரிபூரண ஓய்வு தேவை என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்'' என்று எழுதப்பட்ட கடிதத்தைப் படித்துக்காட்டச் சொன்னேன்.

அதைக் கடிதம் என்றுகூடச் சொல்லமுடியாது. பேராசிரியர் குறிப்பிடுவதைப்போல, அந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று பன்னீர் செல்வம் கொடுத்த தீர்மானம் அது. "உடல்நலம் சரியில்லை-பரிபூரண ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்'' என்ற அந்த தீர்மானம். "ஓய்வு'' என்றால் உங்களுக்குத் தெரியும். அது என்ன "பரிபூரண ஓய்வு?'' நான் அந்த விளக்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை. பரிபூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்றும், அதற்கு இந்த அவையினுடைய ஒப்புதலை அதற்குப் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவரே சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதி, இன்றைக்கு வர முடியவில்லை என்று சொல்லியிருக்கலாம். அதை ஏன் தீர்மானமாக அவையிலே நிறைவேற்ற வேண்டும் என்று பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். அதை தீர்மானமாக நிறைவேற்றுங்கள் என்று சபாநாயகரிடம் சொன்னேன். அதன்படி, அன்றைக்கு அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அந்த அம்மையார் அவைக்கு வரவில்லை. எவ்வளவு புத்திசாலித்தனமாக- எவ்வளவு அறிவுக்கூர்மை யோடு-எவ்வளவு தந்திரத்தோடு அந்த கடிதம் கொடுக்கப்பட்டது என்பது பிறகுதான் எங்களுக்கு புரிந்தது.

பெங்களூருவில் அந்த அம்மையார் மீது ஒரு வழக்கு நடைபெறுவது உங்களுக்குத் தெரியும். வருமானத்திற்கு மீறி-அளவுக்கு மீறி சொத்து சேர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட 70, 80 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருக்கிறார் என்று ஒரு வழக்கு நடைபெறுகிறது. அந்த வழக்கைப்போட்டு 15 வருடத்திற்கும் மேலாகிறது. 15 வருடங்களாக வாய்தா வாங்கி, வாய்தா வாங்கி-வாய்தாவிற்கும் கால் வலித்து, அலுத்துப் போய்-கடைசியாக பெங்களூர் நீதிமன்றத்தில்-ஏன் பெங்களூருவில் அந்த வழக்கு நடைபெறுகிறது என்றால், தமிழ்நாட்டில் அந்த வழக்கு போடும்போது தி.மு.க. ஆட்சியில் இருந்ததால், ஒரு வேளை நீதிபதிகளை எல்லாம் நாங்கள் பயமுறுத்தி, அந்த அம்மையாருக்கு எதிராக தீர்ப்பு வந்து விடுமோ என்று பயந்து, வேறு மாநிலத்தவரால் இந்த வழக்கு நடைபெற வேண்டுமென்று அவர்களே வலியுறுத்தி, அதன்படி பெங்களூரூவிற்கு மாற்றப்பட்ட வழக்கு-இந்த சொத்து சேர்த்த ஊழல் வழக்கு.

50 வாய்தா வாங்கிய அம்மையார்

அந்த வழக்கில் குறைந்தது 50 வாய்தா வாங்கியாகி விட்டது. இப்போது தேர்தல் வரவிருக்கிறது. தேர்தல் பிரசாரம் ஆரம்பமாக வேண்டிய கட்டம் வந்துவிட்டது. இந்த நேரத்திலே அந்த வழக்கு நடைபெற்றால், வழக்கிலே தீர்ப்பு வந்தால், இந்த அம்மையார் தேர்தலிலே நிற்க முடியுமா? என்று சந்தேகம் வந்துவிட்டது. அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு? எப்படிப்பட்ட தீர்ப்பு? என்பதையெல்லாம் நான் சொல்லமாட்டேன்-சொல்லக்கூடாது. நீதி மன்றத்திலே ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அது நீதிமன்றத்தின் முடிவைப்பொறுத்ததே தவிர, என்னுடைய கருத்தைப் பொறுத்தது அல்ல. ஆகவே, நான் அதைப்பற்றியெல்லாம் விவரமாகச் சொல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அவர்கள் கடைசியாக வாய்தாவெல் லாம் வாங்க முடியாது-இப்போது நீதிமன்றத்தில் கேள்வி கேட்கிற கட்டம் எல்லாம் வந்துவிட்டது-நீதிமன்றத்தில் கேள்வி கேட்கிறபோது, "குற்றஞ் சாற்றப்பட்ட ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு வர வேண்டும்'' என்று கண்டிப்பாக நீதிபதி சொல்லிவிட்டார்.

உடனே "இல்லை, இல்லை-எனக்கு உடம்பு சரியில்லை-வரமுடியாது'' என்று சொல்ல, அதற்கு ஆதாரமாக எங்களைத்தான் பயன்படுத்தியிருக் கிறார். நாம் எப்படியெல்லாம் பயன்பட வேண்டி யிருக்கிறது பாருங்கள். எங்களைப் பயன்படுத்தி, அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, நாங்கள் வாக்களித்து, "சரி, பாவம்-சில நாட்கள்தானே? ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும்'' என்று சொல்லப்போக, அந்தச் செய்தியை பெங்களூரு நீதிமன்றத்திலே சொல்லி-"பாருங்கள், பாருங்கள்-தமிழக சட்டப் பேரவையிலே கூட, எனக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள்'' என்று எடுத்துக் காட்டி, நீதிபதியை நம்ப வைக்க முயற்சித்து, நீதிமன்றத்தில் தப்பித்து இருக்கிறார்கள்.

நேற்றைக்கு ஆஜராக வேண்டிய அந்த நிகழ்ச்சி மாற்றி வைக்கப்படக்கூடும்-அது வேறு. ஆக, "எதற்கும் பயப்பட மாட்டேன். நீதிக்கு முன்னால் நீதியை நிலைநாட்டி நிற்பேன்'' என்றெல்லாம் சொல்கின்றவர்கள், இன்றைக்கு நீதியை வளைப் பதற்கு என்னென்ன தந்திரங்கள் உண்டோ, அவை களையெல்லாம் செய்து பார்க்கிறார்கள் என்ப தற்காகத்தான் இதைச்சொன்னேனே அல்லாமல், வேறல்ல.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

திராவிட முன்னேற்றக் கழகத்திலே நீங்களெல் லாம் இன்றைக்கு இணைந்திருக்கிற இந்த நல்ல நாளில், நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள் வது, திராவிட முன்னேற்றக்கழகம் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு'' என்று அண்ணா அவர் கள் சொன்ன அந்தத் தாரக மந்திரத்தைத்தான் அடிப்படையாக வைத்து நடைபெற்றுக் கொண்டி ருக்கின்ற ஓர் இயக்கம்-இனமான இயக்கம்-இன உணர்வு இயக்கம்-"திராவிட'' என்கின்ற அந்த உணர்வை வளர்க்கின்ற இயக்கம்-தமிழ் மொழியைக் காப்பாற்றுகின்ற இயக்கம். இந்த அடிப்படை லட்சியங்களை, உணர்வுகளை மறந்துவிடாமல், என்றென்றைக்கும் இந்தக் கழகம் எடுக்கின்ற தன்மான இயக்கத்தினுடைய முடிவுகளுக்கு-தமிழை வாழ வைக்கின்ற போராட்டங்களுக்கு அனைவரும் கலந்து கொள்கின்ற அளவில் தயாராக இருக்க வேண்டுமென்று உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
- இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார்.

விடுதலை

Wednesday, February 9, 2011

முக்கிய கட்டத்தில் ஜெயலலிதா மீதான வழக்கு

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசார ணையின் போது, அவர் பார்வை யாளர் இருக்கையில் அமர்ந்து பார்க்கலாம். மொழி பெயர்ப்பில் தவறு என இனி பேசக் கூடாது. இறுதி கட்ட விசாரணை பிப்ர வரி 14 இல் நடத்தப்படும் என, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லி கார்ஜுனய்யா கூறினார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், வருமானத் துக்கு அதிகமாக 68 லட்சம் ரூபாய் சொத்து குவித்த வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் பல்டி அடித்த சாட்சிகளின் மறு விசாரணை முடிந்த நிலையில், மொழி பெயர்ப்பில் தவறு இருப் பதாக ஜெ., தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன் னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஜெ., வழக்கறிஞர்: இவ்வழக் கில் மறு விசாரணை செய்யப் பட்ட சுபாஷ் சந்திரன் கொடுத்த வாக்குமூலம், ஆங்கில மொழி பெயர்ப்பில் ஒரு முக்கியமான பகுதி காணாமல் போய் விட்டது. இது போன்றுதான், விசாரணை செய்யப்பட்ட 250 சாட்சிகளின் வாக்குமூலங்களின் மொழி பெயர்ப்பிலும் தவறு உள்ளது. அனைத்தையும் சரி செய்து, ஆறு மாதம் கழித்து வழக்கை விசா ரிக்க வேண்டும்.

அரசு வழக்கறிஞர்: சுபாஷ் சந்தி ரன் கொடுத்த வாக்குமூலம், மொழி பெயர்ப்பில் தவறு இல்லை. தமி ழில் உள்ள வார்த்தைகள் சுருக்க மாக ஆங்கிலத்தில் கூறப்பட்டுள் ளது. அதை வேண்டுமானால் சரி செய்யலாம். அனைத்து சாட்சிகள் மொழி பெயர்ப்பையும் சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு அவகாசமும் தேவையில்லை.
நீதிபதி: சுபாஷ் சந்திரன் வாக்குமூலத்தை மீண்டும் மொழி பெயர்த்து பிப்ரவரி 14-க்குள் கொடுக்க வேண்டும்.

அரசு வழக்கறிஞரின் எதிர்ப்பு

அரசு வழக்கறிஞர்: இந்த வழக் கில், சாட்சிகள் மறு விசாரணை முடிந்து விட்டதால், வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்களான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் விசா ரணை செய்ய வேண்டும். கேள்வி 330 போட்டு, அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த வேண் டும். மொழி பெயர்ப்பில் எதிர் தரப்பினர் கூறும் குற்றச்சாற்று இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.

ஜெ., வழக்கறிஞர்: ஜெயலலி தாவுக்கு உடல்நலம் சரி இல்லை. எனவே தான், தமிழக சட்ட சபைக்கு அவர் வர வேண்டிய அவசியம் இல்லை என, தீர் மானம் நிறைவேற்றபட்டுள்ளது. இந்த வழக்கை அவசர அவசர மாக முடிப்பதாக எனது கட் சிக்காரர் கருதுகிறார். அவசரப் பட்டு தவறாக தீர்ப்பு வழங்கி விடக் கூடாது. இந்த வழக்கு அவர் ஒருவர் சம்பந்தப்பட்ட விஷய மல்ல. இந்த தீர்ப்பை ஒட்டு மொத்த ஆறு கோடி தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

எனவே, நிதானமாக விசாரித்து, நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும். எனது கட்சிக்காரர்கள் வெளி நாட்டவர் அல்ல. குறிப்பாக, இத்தாலியர் அல்ல. அவர் இந்தியர். அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார்.இந்த வழக்கு, வெறும் 68 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்காகும். ஸ்பெக்ட்ரம் 1.76 லட்சம் கோடி ரூபாயில் ஊழல் நடந்துள்ளது. தற்போது, இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அந்த வழக்குகளில் காட்டப் படாத அவசரம், சொத்து வழக்கில் காட்டப்படுகிறது.

அரசியல் பேசவேண்டாம்!

நீதிபதி: இங்கு அரசியல் பேச வேண்டாம். இந்த வழக்கில் அவசரப்படவில்லை. தேவைப் பட்டால் உங்கள் கட்சிக்காரரை (ஜெயலலிதா) வந்து, பார்வை யாளர் இருக்கையில் அமர்ந்து பார்க்க சொல்லுங்கள்.மொழி பெயர்ப்பு தவறு பற்றி இனி மேல் கூறக் கூடாது. இந்த வழக்கை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்.

இதையடுத்து, சென்னை லக்ஸ், சிக்கேரா கம் பெனியினர், இவ்வழக்கில் சேர்க் கப்பட்டுள்ள தங்களுக்கு சொந்தமான இடங் களை விடுவித்து தருமாறு கேட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வாதத்துக்கு அவகாசம் கேட்ட தால், பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Sunday, February 6, 2011

வெத்து வேட்டு பேர்வழியிடமிருந்து வேறெந்த அறிக்கையை எதிர்பார்க்க முடியும்?-கலைஞர்

இடைக்கால பட்ஜெட் குறித்த ஜெயலலிதா புகார்களுக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக, முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- இடைக்கால நிதி நிலை அறிக்கை, தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்ல வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாத ஒரு வெத்து வேட்டு அறிக்கை என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே?.

பதில்:- ஒரு "வெத்து வேட்டு'' பேர்வழியிடமிருந்து வேறெந்த அறிக்கையை எதிர்பார்க்க முடியும்?.

கேள்வி:- வழக்கத்திற்கு மாறாக, அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு முற்றிலும் எதிராக, ராகுகாலத்தை மனதில் வைத்து, கேள்வி நேரத்தைப் புகுத்தி, காலை 10.30 மணிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?.

பதில்:- அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கே கேள்வி நேரத்தை பற்றிய பேச்சே எழவில்லை. ஜெயலலிதா பேரவைக்கே வராதபோது அலுவல் ஆய்வுக்குழுவிற்கு எங்கே வந்தார்? அவரது கட்சியின் சார்பில் செங்கோட்டையனும், ஜெயக்குமாரும் அலுவல் ஆய்வு குழுவிற்கு வந்தார்கள். மேலும் அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.

ஜெயலலிதாவுடன் தோழமை கொண்டுள்ள கட்சியை சேர்ந்தவர்களும் அலுவல் ஆய்வு குழுவிற்கு வந்தார்கள். அவர்கள் யாராவது கேள்வி நேரம் எடுத்துக்கொள்வதை பற்றி அலுவல் ஆய்வுக் குழுவிலே பேசப்பட்டதா என்று கூறட்டும். பொதுவாக கேள்வி நேரத்தை ஒத்தி வைப்பது என்றால்தான் மற்ற எதிர்க்கட்சிகளிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்.

கேள்வி நேரத்தை வைத்துக் கொள்வதைப்பற்றி யாரிடமும் ஒப்புதல் பெறத் தேவையில்லை. 2001-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதும் கேள்வி நேரம் நடைபெற்ற பிறகுதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அது அவை நடவடிக்கை புத்தகத்திலேயே உள்ளது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே தான் ராகுகாலம் கருதி, விடுதலை நாளன்று கோட்டையிலே கொடியேற்றும் நேரமே தள்ளி வைக்கப்பட்டது. இப்படித்தான் அவசரக் குடுக்கையாக யார் பேச்சையாவது கேட்டுக் கொண்டு ஜெயலலிதா பொய்யாக அறிக்கை கொடுப்பதும், பிறகு நாம் ஆதாரத்தோடு பதில் கொடுத்த பிறகு வாயை மூடிக் கொண்டு மவுனியாவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

கேள்வி:- 2010-2011-ம் ஆண்டிற்கான நிதிப்பற்றாக்குறை 16,222.13 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும், தற்போது சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதி நிலை அறிக்கையில் நிதிப் பற்றாக்குறை 17,607.71 கோடி ரூபாய் அளவுக்கு உயருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்கிறாரே?.

பதில்:- ஒரு எதிர்க்கட்சித் தலைவர் "நுனிப்புல்'' மேயக்கூடாது. இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை புத்தகத்திலேயே பக்கம் 54-ல் "ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதாலும், அரசு செயல் படுத்திவரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான செலவு அதிகரித்திருப்பதாலும், 2010-2011-ம் ஆண்டில் ரூபாய் 17,607.71 கோடி நிதிப்பற்றாக்குறை ஏற்படும்.

பொருளாதார நிலை படிப்படியாக சீரடைந்து வருவதால் வரும் நிதியாண்டில் ரூபாய் 438.78 கோடி வருவாய் உபரி ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது. இதில் முன் பகுதியையும், பின் பகுதியையும் மறைத்துவிட்டு இடைப்பகுதியை மட்டும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார்.

மேலும் அதே பத்தியில், "வரும் நிதியாண்டிற்கான மூலதனச் செலவு குறைவாக உள்ளது. இதன் விளைவாக, நிதிப் பற்றாக்குறை ரூபாய் 13,506.84 கோடி என்ற அளவில் அதாவது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.32 சதவீதமாக இருக்கும். இது, பதின்மூன்றாவது நிதிக் குழு வரையறுத்துள்ள அளவுகளுக்குள் அமைந்துள்ளது'' என்றும் ஜெயலலிதா போன்ற தவறு கண்டுபிடிப்போருக்கு விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

கேள்வி:- 31-3-2011 அன்று தமிழ்நாடு அரசின் மொத்தக்கடன் 1,01,541 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதான் கருணாநிதியின் ஐந்தாண்டு கால சாதனையா என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறாரே?.

பதில்:- தமிழக அரசின் மொத்தக் கடன் பற்றி பலமுறை நான் பதில் கூறியிருக்கிறேன். ஜெயலலிதா கூறியுள்ள இந்த ரூ.1,01,541 கோடி கடன் தொகை முழுவதும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்டதல்ல. ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பிலே இருந்த காலத்தில் வாங்கிய கடன்களையும் சேர்த்துத்தான் இந்தத்தொகை. எனவே அவரது "சாதனை''யையும் சேர்த்து குறிப்பிட்ட தொகை.

மேலும் ஜெயலலிதா இன்று உறவுபூண்டுள்ள கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களிலே அந்த அரசுகள் பெற்ற கடன் தொகைகளைவிட தமிழக அரசு பெற்ற கடன் தொகை குறைவுதான். மேலும் இடைக்கால நிதி நிலை அறிக்கையிலேயே, "2006-2007 முதல் 2010-2011 வரையான ஐந்தாண்டுகளில் கடன் பொறுப்புகளின் உயர்வு ரூபாய் 44,084 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் மொத்த மூலதனச் செலவினங்கள் ரூபாய் 44,667 கோடியாக உள்ளது. இது திரட்டப்பட்ட கடன் அனைத்தும் பயன் அளிக்கக்கூடிய நோக்கங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

2005-2006-ம் ஆண்டின் இறுதியில் (ஜெயலலிதா ஆட்சியில்) மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு, 2010-2011-ம் ஆண்டு இறுதியில் 19.58 சதவீதமாகக் குறையும்'' என்று விளக்கமாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கடன் பற்றி ஜெயலலிதாவின் கூட்டணிக்கட்சி தோழரான தா.பாண்டியன் கூறி, அதற்கான பதிலை நான் 28-1-2011 தேதிய நாளேடுகளில் அளித்துள்ளேன். ஜெயலலிதா அதனைப் படித்தாவது தெளிவு பெறலாம்.

கேள்வி:- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றி குறிப்பிடாமல், விலை உயர்விற்கான காரணங்களை நிதிநிலை அறிக்கையில் பட்டியலிட்டிருப்பது வருத்தமளிக்கும் செயலாகும் என்ற ஜெயலலிதாவின் கூற்றுக்கான பதில்?.

பதில்:- நிதிநிலை அறிக்கையில் பத்திகள் 36, 37, 38 ஆகிய மூன்றும் விலைவாசியை பற்றி எழுதப்பட்டவையாகும். அதை ஒழுங்காக படித்தால், விலைவாசி உயர்விற்கான காரணங்களும் புரியும்; அதைக் கட்டுப்படுத்துவதற்காக தி.மு.க. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளும் தெரியும்.

கேள்வி:- "முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்பு தொடர்பான மேல் நடவடிக்கை குறித்து இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது, அதில் இந்த அரசுக்கு அக்கறை ஏதுமில்லை என்பதை தெளிவாக்குகின்றது என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?.

பதில்:- முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும் என்று கேரள மாநில ஆளுநர் பேசியது 4-2-2011. அது ஏடுகளில் வெளிவந்தது 5-2-2011.

அந்தச் செய்தியை 5- ம் தேதி காலையில் நான் ஏடுகளில் கண்டதும், உடனடியாக அதைக் கண்டித்ததோடு, உரிய தருணத்தில் உச்சநீதிமன்றத்தின் முன்பாக எடுத்துரைக்கப்படும் என்றும் ஒரு பத்தி எழுதி- நிதியமைச்சர், இடைக்கால நிதிநிலை அறிக்கையை அவையில் படித்து முடிக்கும் கட்டத்தில் நான் பேரவையில் கேரள அரசுக்குப் பதில் கூறி எழுதிய பத்தியையும் பேராசிரியரிடம் கொடுத்து அவரும் அதை அவையில் படித்த அந்தச் செய்தி அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.

ஜெயலலிதா இதையெல்லாம் படிக்காமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று ஜெயா அறிக்கை வெளியிடுகிறார், அதை சில ஏடுகளும் வெளியிடுகின்றனவே?.

கேள்வி:- தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை, மொத்தத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பல்வேறு துறைகளிலும் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்பதை பறைசாற்றுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விமர்சனம் செய்துள்ளதே?.

பதில்:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தற்போது அ.தி.மு.க.வின் நெருங்கிய கூட்டணிக்கட்சி. அவர்களிடம் தி.மு.க. அரசுக்கு மாபெரும் வெற்றி என்றா விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? தோழமைக் கட்சி உடன்பாட்டினை மீறாதவர்கள் மார்க்சிஸ்ட்கள்.

கேள்வி:- நிதிநிலை பற்றி கருத்துக்கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர், தொழிலாளர்கள் போராடுகிறபோது, தமிழக அரசு நிர்வாகத்தின் பக்கமே நிற்கிறது, தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதை தி.மு.க. அரசு தொடர்கிறது என்று சொல்லியிருக்கிறாரே?.

பதில்:- தி.மு.க.வின் தொழிற்சங்க கொள்கைகள் பற்றி இப்போதுள்ள ராமகிருஷ்ணன்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால் அந்தக்கட்சியை சேர்ந்த கோவை தோழர் ரமணி, தோழர் வி.பி.சிந்தன் போன்றவர்கள் நன்கறிவார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான தேர்தலில் தி.மு.க. தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யு. சங்கத்தைவிட அதிக வாக்குகளை பெற்றதே, கழகத்தின் தொழிலாளர் உறவை நிரூபிக்குமே.

கேள்வி:- சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சித்தலைவர் ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறாரே?.

பதில்:- முன்பெல்லாம் கம்யூனிஸ்டுகள் படிக்காமல் எதையும் பேசமாட்டார்கள். இடைக்கால நிதிநிலை அறிக்கை, பத்தி 44-ல், "அனைவருக்கும் சமச்சீர் கல்வி வழங்கும் நோக்குடன் தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் 2010 ஆகிய சட்டங்கள் இந்த அரசினால் பெரும் வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சமச்சீர் கல்வி 2010-2011-ம் ஆண்டில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சமச்சீர் கல்வி முறை 2011-2012-ம் ஆண்டு முதல், மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்'' என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறுகிறார். என்ன செய்வது? எல்லாம் "உருப்படி''களுடன் கொள்ளும் சேர்வார் தோஷம்.

கேள்வி:- இடைக்கால நிதிநிலை அறிக்கை படிப்பதற்கு முன்பு கேள்வி நேரம் எடுத்துக்கொண்டதை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் பாலபாரதி, இதற்கு முன்பு அவ்வாறு நடைபெற்றதில்லை என்று சொல்கிறாரே?.

பதில்:- 29-1-2001 அன்று சட்டப்பேரவையில் 2001-2002-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை படிக்கப்பட்டது. அது படிக்கப்படுவதற்கு முன்பு பேரவையில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவையின் நிகழ்ச்சி நிரலை எடுத்துப்பார்த்தால் இதனைத் தெரிந்து கொள்ளலாம். "அவசரக்காரர்களுக்கு புத்தி மட்டு'' என்பது பழமொழி.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

source:maalaimalar